(Reading time: 28 - 55 minutes)

25. கிருஷ்ண சகி - மீரா ராம்

நாட்கள் தான் சென்றதோ, இல்லை மாதங்கள் தான் உருண்டோடியதோ ஆறேழு மாதங்கள் கழிந்தது…

பிரபுவிற்கு மகத்தின் நடவடிக்கைகள் சற்றே விநோதமாக தோன்றியதால், மகத்திடம் அவன் வாய்விட்டு கேட்கவே செய்த போதிலும், மகத் எதுவும் சொல்லாது சிறு புன்னகையை மட்டும் பதிலாக தந்தான்…

காலையிலேயே அவர்கள் வழக்கமாக வரும் வழியில் அவளுக்காக காத்திருந்தான் மகத்….

krishna saki

“என்னடா… கிருஷ்ணா… ஏன் இவ்வளவு நேரம்?...” என அவன் அவள் வரும் வழி பார்த்து, தேடலோடு நிற்க, அவன் விழிகள் அலைபாய தொடங்கியது…

மழையைக் கண்ட நிலம் போல, அவள் தூரத்தில் வருவதைப் பார்த்ததும் அவன் விழிகள் தானாகவே விரிந்தது… அவள் தனது குட்டி கையில் பிடித்திருந்த வாட்டர் பாட்டிலை ஆட்டியபடியே நடந்து வருவதை கண்டதும் அவன் இதழ்கள் தானாகவே மலர்ந்தது…

பக்கத்தில் அவள் வந்ததும், அதற்காகவே காத்திருந்தவன் போல, “மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே கிருஷ்ணா…” என சந்தோஷத்தோடு சொல்லிவிட்டு, அவளுக்கு ஒரு பரிசையும் கொடுத்தான்…

அவனின் முகம் மலர்ந்த சந்தோஷத்தையும், பரிசையும் பார்த்து கண் கலங்கினாள் அவள்…

“ஹேய்… என்னாச்சுடா?... எதுக்கு அழற?... என்னாச்சும்மா?... சொல்லு… என்னடா?..” என அவன் தாங்க,

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “அம்மா என்னால தான் சாமிகிட்ட போனாங்கன்னு அப்பா இவ்வளவு நேரம் என்னை திட்டிகிட்டிருந்தார்… என் பர்த்டேக்கு பாட்டி தவிர யாரும் விஷ் செஞ்சது கிடையாது… அதுகூட அப்பாக்கு தெரியாம தான் விஷ் பண்ணுவாங்க… ஆனா இன்னைக்கு…” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தை வராது அழுகை வர,

“கிருஷ்ணா….” என்ற அழைப்பில் அவன் முகம் பார்த்தவள், அவன் அருகே வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்…

“என்னை விட்டு போயிடமாட்டீங்கல்ல சகி?... எங்கூட இருப்பீங்க தான?...” என அழுதுகொண்டே முகம் நிமிர்த்தி அவனை அவள் பார்க்கையில், அவனது கண்ணீர்த்துளி அவளது கன்னங்களை நனனத்தது... அவன் உதடுகள் உரைக்கும் வார்த்தைக்கு முன்னமே அவனது சில கண்ணீர்த்துளிகள் அதை சொல்லிவிட்டிருந்தது…

“அழாதீங்க சகி… உங்க கூட நான் இருக்கேன்…. என்னை விட்டு போகமாட்டீங்கல்ல?...” என அவள் கேட்க, அவன் இல்லை என தலை அசைத்தான்…

“சத்தியமா?.....” என கேள்வியோடு அவன் தோளிலிருந்து விலகி அவன் முன் வந்து அவள் கேட்டதும்,

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையாடா?...” என அவன் பதிலுக்கு கேட்டதும்,

“நிஜமா நம்பிக்கை இருக்கு… என்னை விட்டு போகமாட்டீங்கன்னு… ஆனா, ஒரு பயம்… அதான் கேட்டேன்…” என அவள் முடித்ததும்,

அவளுக்கு என்ன பயம்?... என அவன் யோசித்த அதே நொடியில் அவன் மனதிலும் இனம் புரியாத பயம் உருவானது….

“போகமாட்டேன் உன்னை விட்டு…” என சட்டென சொல்ல நினைத்தும் ஏன் தன்னால் சொல்ல முடியாமல் போனது… என் விழிகள் ஏன் நீர் கொண்டது என அவனும் என்னதான் யோசித்து யோசித்து பார்த்தாலும் விடை தான் அவனுக்கு கிடைக்கவே இல்லை…

“என்ன சகி இதுல இருக்கு?... என்ன கிஃப்ட்?...” என கேட்டுக்கொண்டே அதை குலுக்கிப் பார்த்தாள் அவள்…

“பிரிச்சிப்பாருடா… குலுக்கிப் பார்த்தா எப்படி தெரியும்?...” என அவனும் கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து அவள் ஸ்கூல்பேக்கை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டு, வாட்டர் பாட்டிலையும் வாங்கி தனது விரல்களில் பிடித்துக்கொள்ள,

அவள் அதை கொஞ்ச கொஞ்சமாக பிரித்து முடிக்கையில், அந்த பெட்டியில், சிறு வாழ்த்து அட்டையும், அதில் அவளது பெயரை எத்தனை விதமாய் கூப்பிட முடியுமோ அத்தனை விதமாய் எழுதி அவளுக்கு வாழ்த்து சொல்லியிருந்தான் அவன்…

அதைக் கண்டதும் அவள் கண்கள் பெரிதாக அவனைப் பார்த்து சிரித்தாள்…

“ரொம்ப சூப்பரா இருக்கு சகி… என் பேர் தானா இது… இத்தனை விதமா கூப்பிடலாமா?... ப்ரணா, ப்ரணதி, ரதி, ப்ரதி, நதி, நதிகா, ரதிகா, திகா, ராதிகா, ப்ராதி, ராதி, ப்ராணா, ருஷ்ணா, ருணா, ருணதி, ப்ராணாதிகா…” என வரிசையாக அவள் வாசித்துக்கொண்டிருக்கையில்,

“எனக்கு எல்லா பேரும் பிடிச்சிருக்கு… உனக்கு எது பிடிச்சிருக்கு?...” எனக் கேட்டான் மகத்…

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தவள், அவன் மீண்டும் அவளிடம் கேட்கவே,

“ஹ்ம்ம்… உண்மையா சொல்லணும்னா கிருஷ்ணா தான் ரொம்ப பிடிச்சிருக்கு….” என்றவள் அவன் பார்வை அவள் மீதிருப்பதை உணராமலேயே, “அந்த பேர் சொல்லி நீங்க கூப்பிடுறதால…” என்றாள் தொடர்ந்து….

ஏனோ அவளின் வார்த்தைகள் அவனது உள்ளம் வந்து தொட்டு செல்ல, மயிலிறகால் வருடிய உணர்வை அந்த நொடி உணர்ந்தான் அவன்…

“சரி… உங்க பிறந்த நாள் என்னைக்கு?...” என அவள் கேட்டது தான் தாமதம் போல், சட்டென அவன் முகம் கவலையையும், அதை மறைக்க முயலுவதையும் வெளிப்படுத்த, அவளால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை…

அவனின் வாட்டம், அவளை எதுவோ செய்ய, “சரி சகி…. வாங்க போகலாம்… நேரமாச்சு…” என்றபடி அவனுடன் நடந்தாள் அவள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.