(Reading time: 16 - 31 minutes)

ந்த காணொளி தொகுப்பைப் பார்த்து  பிரமித்து பாராட்டினர் அந்த வெளிநாட்டு பிரதிநிதிகள்... அதை உணரும் நிலையில் அவன் இல்லை. அவன் மனம் அவளை ஏமாற்றும் விஷயத்திற்காக அலை மோதியது..

அப்போழுது அவன் அலைபேசி “வைப்ரேட்”டாகி எச்சரிக்கை ஒலி எழுப்பியது.. அவன் கேபினிற்குள் யாராவது நுழைந்தால் அலைபேசியில் ஒலி எழுப்புவது போல ‘மோஷன் சென்சார்’, வடிவமைத்து வைத்திருந்தான்.

அலைபேசியை எடுத்து பார்த்தவன்.. வேலையாள் ஏதோ கவரை டேபிளில் வைத்து செல்வதை அலைபேசியின் சென்சார் ஒளிபரப்ப...

அந்த கவரைப் பார்த்ததுமே...

“பப்பி!!!!!!”, இவன் மனம் துள்ளியது.. அஞ்சனாவை காணாது தவித்த மனம்.. இப்பொழுது பப்பியிடம் பாய்ந்தது...

இவன் எஞ்சிய வாழ்க்கை அஞ்சனாவாக இருக்கலாம்.. அவனையும் மிஞ்சிய இவன் காதல் பப்பி மீதல்லவா...

அந்த ட்ரையினிங் செஷன் முடித்து விட்டு கோகிலா சென்றதும்... அடுத்து செஷன்க்கு பத்து நிமிட இடைவேளை இருக்க...

“அடுத்த செஷன் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ள ஹச். ஆரை பார்த்து சில சர்டிபிகேட்ஸ் கொடுக்கணும்”, என்று சொல்லிக் கொண்டே அபினவ் கிளம்ப..

அதைக் கேட்ட ஸ்ருதிக்கும் தனது ஐ. டி கார்ட் நினைவு வர...

”இரு! இரு! நானும் வர்றேன்”, என்று அவனுடனே கிளம்பி லிஃப்ட்டிற்கு வர... கோகிலாவும் அங்கே லிஃப்ட்டிற்காக காத்திருக்க.... இருவரும் அவள் அருகே சென்று நின்றனர்...

அப்பொழுது  கோகிலாவின் அலைபேசி குறுந்தகவல் வருவதாய் சிணுங்க..  அபினவ் மற்றும் ஸ்ருதியின் கவனம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது..

“இந்த நிமிஷம்.... எனக்கு ரொம்ப ரொம்ப தேவையானதை கொடுத்திருக்கே!”, என்று பொருள் படும் ஆங்கிலக் குறுந்தகவல் - ஆர்யமனிடம் வந்திருக்க...

அதைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள் கோகிலா. அப்பொழுது லிஃப்ட் கதவு திறக்க... அதைப் படித்த படியே லிப்ஃட்டிற்குள் ஏறி,

“உங்களை ஹேப்பியாக்கும் மந்திரம் உங்க பப்பிக்கு தெரியாம போகுமா?”,  என்று  வேகமாக வேகமாக பதில் அனுப்பிய கோகிலாவை...

தொடர்ந்து வந்த ஸ்ருதியும், அபினவ்வும் இந்த  செய்தி பரிமாற்றத்தை பார்த்து விட்டார்கள் என்பது தெரியவில்லை...

தே நாளில்... ஒரு கருத்தரங்கத்தில் பங்கேற்க வேண்டி தனது சென்னைக்கு வந்திருந்தான்  பாலாஜி. 

அது முடிந்ததும் அஞ்சனாவை பார்க்க செல்வது தான் அவன் திட்டம் - முன்னறிவிப்பின்றி திடுதிப்பென்று அவள் முன் நிற்க வேண்டும்! ஆனால், அவள் முன் கையை வீசிக் கொண்டு போய் எப்படி நிற்பதாம்.. நிற்க தான் விடுவாளா.. அவளுக்கு பிடித்த ஏதாவது...

‘சரியான கேம் பைத்தியம்... அதுக்கு ஏதாவது புது கேம்ஸ் டவுன்லோட் செய்து கொடுத்தா.. உலகத்தையே கையில் கொடுத்தது போல சந்தோஷ படுவா’, என்று தனக்குள்ளே முடிவெடுத்து அதை செய்து முடிக்கும் சமயம்,

உணவு இடைவேளை வந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த உயர்தர உணவுகளின் மீது நாட்டமின்றி, அவனுக்கு ஆர்யமனும், வாசுவும்  பழக்கி வைத்திருந்த ஆந்திரா மீல்ஸ் மீது ஆசை வர, வாசுவை அழைத்தான் தன் அலைபேசியில்.

அவனிடம் அழைத்து அந்த உணவகத்திற்கு செல்லும் வழியை விசாரிக்க...

வாசு அதற்கு,

“நீ இப்போ நிக்கிற இடத்தில் இருந்து பத்து ஸ்டெப்  லெப்ட் டர்ன்... அப்புறம்  அபௌட் டர்ன்.. பத்து ஸ்டெப் ரைட் டர்ன். செய்துட்டு நான் அனுப்புற ஒரு பாட்டை ப்ளே பண்ணு..  ஒரு ஆபீஸர் வருவார். அவர் உன்னை  கைட் பண்ணுவார்”,

“என்ன மாம்ஸ்... ஆந்திரா மீல்ஸ்க்கு அட்ரஸ் கேட்டா ஆபீஸர்கிட்ட ஆலோசனை கேக்க சொல்றீங்க“, என்று முழித்த படி கேட்டேன்..

“டிலே பண்ணாதே பாலாஜி..  இந்த மாம்ஸ்க்காக அந்த ஆபீஸரை நீ பார்த்தே ஆகணும்”, என்று டக்கென்று ஃபோனை வைத்து விட..

அடுத்த நொடி அந்த பாட்டும் வந்தது...

பாலாஜி அவன் சொன்ன திசையில் எட்டுகள் வைத்து அந்த பாட்டை ப்ளே செய்ய...

 Everybody Listen He Is On A Mission

 You Can Never Stop Him

 He Is A Human Tornado

 Everybody Listen He Has Got The Right Decision

 You Cannot Mess With Him Not Even With His Shadow

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.