(Reading time: 12 - 23 minutes)

29. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன் மேஜை மீது இருந்த புகைப்படத்தின் மீது பார்வையை பதித்தான் கதிரேசன்.. ஷக்தி சங்கமித்ராவின் திருமணத்திற்கு பின் இரு குடும்பத்தாரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் அது..சில நொடிகள் அதையே பார்த்தவன் சட்டென அக்கம் பக்கம் பார்த்தான்.. பின்பு தனது அறையின் கண்ணாடி கதவின் வழியாய் வெளியில் இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டான்… யாரும் தன்னை பார்க்கவில்லை என்றதும் அந்த புகைப்படத்தை பின்பக்கமாய் ப்ரேமில் இருந்து எடுத்து திருப்பினான்.. அதுவும் குடும்பப்படம் தான்.. ஆனால் அதில் காவியாவும் அன்பெழிலனும் இருந்தனர்.. முகம் முழுக்க சந்தோஷத்துடன் கதிரின் அருகில் நின்றிருந்தாள் காவியதர்ஷினி.. கதிருக்கு மிகவும் பிடித்த படம் அது.. ஆனால்,இதை ஆஃபிசில் அனைவரின் பார்வையில் படுபடி வைப்பதற்கு அவனுக்கு மனமில்லை..

ஏற்கனவே அவள், அவனுக்ககத்தான் அங்கு பணி புரிய வந்தாள் என்று அவர்களின் காதுபடவே அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, மேலும் ஒரு பெண்ணின் பெயருக்கு தன்னால் களங்கம் சேர கூடாது என்பதில் தீவிரமாய் இருந்தான் கதிர்.. மற்றவருக்காக அவன் எடுக்கும் முடிவு இதுவாய் இருக்கலாம்..ஆனால் அவன் மனதில் இருப்பது என்ன ?

“ தர்ஷினி ?? ஏன் தர்ஷினி என் வாழ்க்கையில் வந்த நீ ? ஏன் உன்னை பார்க்கும்போதெல்லாம் என் மனம் தடுமாறுது.. என்னை பார்க்கும்போது உன் கண்ணுல தோணுற ஜீவன் அதுக்கு என்ன பேரு ?”

Ithanai naalai engirunthai

“ காதல் அப்பா, எனக்கு கதிர் மேல இருக்குறது காதல் தான்.. ஏதோ ஒரு உள்ளுணர்வில் அவர் மேல ஈப்பு வந்தது எவ்வளவு உண்மையோ அதே மாதிரி கதிரின் மேல் நான் காதலை உணர்வதும் நிஜம்”அப்பா..” தந்தையிடம் மானசீகமாய் பேசி கொண்டிருந்தாள் தர்ஷினி..

“எங்கிட்ட அதிகம் பேச வேணாம்னு சொன்னப்போ அவ்வளவு கோபம் வந்ததே தர்ஷினி உனக்கு..ஏன் ? நான் என்ன அவ்வளவு வர்த்து பீசா (worth piece)?” என்று சிரித்து கொண்டே புகைப்படத்தில் அவளை பார்த்து கொண்டு கேட்டான்.. அவனுக்கு பதில்சொல்வதை போல, இருந்தது அவள் அவளின் தந்தையிடம் பேசியது..

“ அந்த ஆக்சிடன்ல கதிரை முதல் தடவை பார்தப்போ பெருசா எந்த உணர்வும் இல்லை.. அவர்பாவம் குணம் ஆகனும்னு நினைச்சேன்.. அதுக்கு பிறகு ஒவ்வொருதடவையும் அவரை பார்க்கும்போது உங்க நியாபகம் வந்தது.. கதிர் வீட்டுல தான் நான் அவரை பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.. அப்பாவுக்கு பொறுப்பான மகன்,அம்மாவிடம் செல்லம் கொஞ்சும் மகன், முகிலாவிற்கு பாசுமிகு அண்ணன்,அதே போலகுறும்புமிக்க  தோழன்,ஷக்தி மீது நிறைய மரியாதை கொண்ட தம்பி, இதெல்லாம் விட எப்பவும் என்னோடு இரண்டடி தள்ளி நிற்கும் கண்ணியமான ஆண்..  எந்த ஒரு பெண்ணுமே விரும்புமளவு இனியவன்…ஆனா என் மனசை புரிஞ்சுக்க தெரியாத மக்கு !!”

“ மக்குதான் ..உன் விஷயத்துல நான் எப்பவுமேஎதுவும் அறியாத மக்குதான் ..எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு.. அது என்னவோ செமஸ்டர்கு செமஸ்டர் காதலியை மாற்றும் நண்பர்களை பார்த்து பார்த்து எனக்கு காதல்மேல அவ்வளவு நம்பிக்கைஇல்ல..எல்லாருடைய காதலும் ஷக்தி மித்ராவை மாதிரி கல்யாணத்தில் முடியும்னு இல்லை…நமக்கு உரிமை இல்லாத ஒரு உறவை  உருவாக்கி, உணர்வுகளை உறமாய் போட்டு வளர்த்து நாளைக்கு விதியின் மீது பழிபோட்டுவிட்டு வேறு ஒரு வாழ்க்கையை என்னால் தேடவே முடியாது.சரியோ  தப்போ,திருமணதிற்கு பிறகுதான் நான் காதலிப்பேன்” என்று சொல்லிக்கொண்டவனின் மனதில் அவளெ தனது மனைவியாய் வர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி நின்றது…

“சொல்லனும் பா… உங்க மக்கு மருமகனை நம்பிகிட்டு இருந்தா நான் கடைசிவரை உங்க மகளாய்த்தான் இருக்கனும்..இன்னைக்கு என்ன ஆனாலும் சரி என் காதலை நானே சொல்ல போறேன்… காதலில் ஜெயிக்கிறோமோ அல்லது தோற்று போறோமோ அது பெரிய விஷயம் இல்ல…முதல்ல காதலை மனசு விட்டு சொல்லனும்…என் உணர்வில் தப்பில்லைன்னு எனக்கு தோன்றும்போது, அதை நான் ஏன் மறைக்கனும் அப்பா ?”

“மறைக்கனும்… இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஆசைகளை மறைக்கனும்..கல்யாணம்னு வீட்டில் பேச்சு எடுத்தா அப்போது பார்க்கலாம்..இப்போதைக்கு அவளை விலகி இருக்கனும்…இப்போதான் அண்ணாவும் சென்னை வந்துருக்கான்..இந்நேரம் ட்ரான்ஸ்வர் கேட்டா நல்லா இருக்காது..பேசாமல் டீம் மாறமுடியுமான்னு பார்ப்போம்…அதுதான் சரி” என்று முடிவெடுத்து, அதற்காக ஈமெயிலனுப்பிகொண்டிருந்தவன் தனது அறைக்கதவு வேகமாய் திறக்கப்படவும் அதிர்ச்சியாய் நிமிர்ந்தான்..

குணாவின் வீட்டில் இருந்து புறப்பட்ட காவியா நேராய் கதிரை பார்க்கத்தான் வந்திருந்தாள்.. அவளை அந்த நேரத்திக் கதிர் சற்றும் எதிர்பார்க்கவில்லைஎன்பது அவனின் முக பாவனையிலேயே அப்பட்டமாய் தெரிந்தது . இத்தனை நேரம் மனதிற்குள் பேசிகொண்ட வார்த்தை எல்லாமே வீண் என்பது போல அவளை பார்த்ததுமே அவன் முகத்தில் புன்னகையும் சந்தோஷமும் இரட்டிப்பாய் பரவியது .. பத்து நாட்களில்  தாடியுடன் அவன் திரிந்து கொண்டிருக்க காவியாவோ ஜெயராஜின் கவனிப்பில் பொலிவுடன் தென்பட்டாள் .. " என்ன பார்க்கவில்லைன்னு சோகம் கொஞ்சம் கூட இல்லையா தர்ஷினி உனக்கு ? " காதல் கொண்ட அவன் மனம் லேசாய் சிணுங்குவதை கண்டு துணுக்குற்று நின்றான் கதிரேசன் .. காவியாவோ இந்தா உலகிலேயே இல்லை .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.