(Reading time: 23 - 46 minutes)

12. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

ஆர்யமனின் உணர்வுகள் - சற்று கனமாக இருக்கலாம்.. அதற்காக பின் பகுதி நகைச்சுவை தூக்கலாக கொடுக்க நினைத்தேன். அந்த காட்சிகள் அதிகம் வந்து விட்டதால், அஞ்சனா - ஆர்யா இருவரும் இணைந்து வரும் காட்சிகளை இந்த பதிப்பில் பதிவிட முடியவில்லை. அடுத்த பதிவு கண்டிப்பாக கலக்குவார்கள். இப்பொழுது வரை கதை எப்படி போகிறது.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள் தோழமைகளே..

புதிர் 12

ல்ல நடு நிசி இரவு...

காரில் அயர்ந்த உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை உலுக்கினாள் அந்த பெண்மணி...

Puthir podum nenjam

“வாடா கண்ணு.. வீடு வந்திடுச்சு”, என்ற அந்த பெண்ணின் அழைப்பில்..

கண்களை கசக்கிய படி விழித்த அந்த சிறுமி... தன் முன்னே இருந்த அந்த  பெரிய பங்களாவைக் கண்டதும் விழி விரித்தாள்.. ஆசையுடன்...

“இது தான் நம்ம வீடா!”, விழி விரிய வியப்பில் கேட்டாள் அந்த சிறுமி..

“ஆமா.. நம்ம வீடு”, கனிந்தது அந்த பெண்மணி குரல்..

“வா... உள்ளே போய் பார்க்கலாம்...”, என்ற படி காரில் இருந்து இறங்கிய அந்த பெண்ணின் கணவன்.. சிறுமியின் பக்கமிருந்த கார் கதவைத் திறந்து விட..

அந்த மாளிகையை அண்ணாந்து பார்த்த படி,

“அய்.. பங்களா...” ஆசையாக துள்ளிக் குதித்து ஓடினாள் அந்த வீட்டிற்குள்...

“நிறைய ரூம் இருக்கு போலவே!!!!!”, ஆவலுடன் அந்த மாளிகைக்குள் நுழைந்தவளின்... நாசியைத் தொட்டது  ரத்த வாசனை...

அதிர்ச்சியில் உறைந்த அந்த சிறுமியை சுற்றிலும்...

“போயிடு.. இங்கே இருக்காதே.. போயிடு.. உன்னை கொன்னுடுவாங்க”, அவலக் குரல்கள்....

எதிரொலிக்க... பயந்து உறைந்து போன சிறுமி... பின்னெட்டுக்கள் வைத்து மிரட்சியடைந்தவளாய்.... இதயம் படபடக்க.. உயிருக்கு அஞ்சி வேக எட்டுக்கள் வைத்து மாளிகையை விட்டு வெளியேற வாசலை நோக்கி ஓட வர...

“உள்ளே போ”, என்ற அந்த ஆங்கார குரலைக் கேட்டு நடு நடுங்கிப் போனது அந்த இளம் பிஞ்சு.. சற்று முன் கனிவுடன் பேசிய பெண்மணியா அவள்???  அவளைப் பார்க்க கூட அஞ்சி.. அவளருகே நின்றிருந்தவனைப் பார்த்து..

“அப்.. அப்...பா... இந்த வீடு எனக்கு வேண்டாம்...”, என்றாள் கெஞ்சலாக..

“அப்பாவா????? ஹா.. ஹா...”, என்று சிரித்துக் கொண்டே நடந்தவன் கையில் இருந்த கொடூர ஆயுதம்!!!!!

மிரண்ட அந்த சிறுமி மாடிப் படி நோக்கி ஓட.. அவளை ஓரிரு எட்டில் துரத்திப் பிடித்த அந்த சிறுமியின் முடியை  கொத்தாகப் பிடித்து தூக்கி..

“எங்களை விட்டு எங்கே ஓடப்  பார்க்கிறே!!!”, என்றவன் கையில் இருந்த அந்த ஆயுதம்.. அந்த பிஞ்சை கூறு போட நெருங்க...

“வேண்டாம்.. . வேண்டாம்... அய்யோ.. அய்யோ.... நித்தீதீதீ..... .விட்ட்டுடுங்க........ அய்யோ..... விடுங்கடா அவளை..”,

ஆர்யமன் சத்தமாக அலறினான்...

“டேய் மச்சி!!!!”, என்ற வாசுவின் குரல் எங்கோ கேட்பது போல இருக்க....... 

“ஆரி பார்த்தியா....வலி தாங்கலை ஆரி! என்னாலே முடியலை.. போறேன்..”, உடம்பெல்லாம் வெட்டுக் காயத்தை காட்டிய படி நின்றிருந்த அந்த சிறுமி அழுத படியே மெல்ல மெல்ல மறைய....

“நித்தி... போகாதே... நித்தி...நித்தீ.. நான் வந்துடுறேன் நித்தி!”, என்ற கதறலோடு கண் விழித்த ஆர்யமன்....

இன்னும் பதை பதைப்பு அடங்காது... சுற்றும் முற்றும் பயத்தோடு பார்க்க...

“டேய்.. மச்சி!!!! ஒன்னும் இல்லை டா...”, என்று தன்னை உலுக்கிக் கொண்டிருந்த வாசுவைக் கண்டதும்... சிறிது சிறிதாக... தான் கண்டது கனவு என்பது உரைக்க.... 

வேர்வையில் குளித்திருந்தவனின்... இதயம் பதை பதைப்பதை நிறுத்த சில மணித் துளிகள் எடுத்தது...

தன் நண்பனின் நிலையை கண்டதும் தவித்து போன வாசு,

“ஹே... என்னடா!!!! மறுபடியும் நித்தி பத்தின கனவாஆஆஆ??”, கேட்டான்  வருத்தமும் அதிர்ச்சியுமாக...

வாசு கேட்டதும்... மலங்க மலங்க விழித்து.... தன் திகைப்பை மட்டுமே பதிலாக்கியவன்..... முகத்தை அழுந்த துடைத்து விட்டு.. பெருமூச்சை விட்டு தன்னை நிதானப்படுத்த...

அவனுக்கு தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தான் வாசு...

மட மடவென்று தண்ணீரைக் குடித்து முடித்த ஆர்யமனுக்கு... உடலும்.. மனதும் படபடப்பை குறைத்து சமாதானமடைந்து இருக்க.... இன்னும் தன்னையே வேதனையுடன் பார்த்திருந்த வாசுவைக் கண்ட ஆர்யமன்..

“கனவு வர்றதெல்லாம் நம்ம கையிலா இருக்கு!!”, என்றான் ஆறுதலாக..

அதை ஏற்காத வாசுவோ,

“இல்லைடா.. கொஞ்ச வருஷமா உனக்கு இந்த கனவு வர்றதில்லை.. அதுவும் பப்பி லெட்டர் உன் மனசுக்கு எவ்வளோ நிம்மதியைக் கொடுக்கும்ன்னு எனக்கு தெரியாதா!!! அப்படி இருந்தும் ....”

என்ற வாசுவின் கலக்கத்தைக் கண்ட ஆர்யமன்... அதை மாற்ற எண்ணி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.