(Reading time: 6 - 11 minutes)

30. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

னை காணவில்லையே நேற்றோடு

இந்த பாடலா?

நீ எங்கே என் அன்பே

Ithanai naalai engirunthai

இந்த பாட்டா?

அல்லது

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாமன்பே போ

இந்த பாட்டா ? இந்த 10 நாளாய், உங்க அட்வைஸ் அழகன் நான் காணமல் போயிட்டேன்னு சொல்லி எல்லாரும் என்ன பாட்டு கேட்டு ஃபீல் பண்ணிட்டு இருந்தீங்க ? இதோ நம்ம ரசிகர்களுக்காக ஓடோடி வந்துட்டேன் உங்கள் அழகன். இன்னைக்கு நைட் எப்பவும் போலவானிலே தேன்நிலாநிகழ்ச்சி தொகுப்பில் சந்திப்போம் பை பாய்” என்று விளம்பரத்தில் மதியகழனின் குரல்கேட்கவும்  ஆசுவாசபெருமூச்சு விட்டார் மனோ.காரோட்டி கொண்டே  தந்தையை கவனித்து விட்டாள் தேன்நிலா..

“என்னப்பாபெருமூச்சு எல்லாம் விடுறமாதிரி இருக்கே!உங்க திருட்டு மருமகன் கூட கூட்டனி போட்டுட்டு ஏதும் சதிவேலை பண்ணுறிங்களா? “ என்றாள் சந்தேகப்பார்வையுடன். கணவன் திருதிருவென முழித்துகொண்டே தன்னிடம் உதவி நாடுவதை உணர்ந்த, பாக்கியம் சிரிப்பை மறைத்து கொண்டு வேறு புறமாய் திரும்பி கொண்டார்.

“ அம்மாவை என்னப்பா லுக்கு விடுறிங்க ?”

“அட என் பொண்டாட்டியை நான் சைட் அடிக்க கூடாதா?”

“ சைட் அடிங்க.. பட் அதுக்கு முன்னாடி பேச்சை மாற்றாமல் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க” என்றாள் நிலா கறாராய்.

“அய்யயோ எனக்கு எதுவும் தெரியாது பேபி..நான் பெருமூச்சு விட்டதற்கான காரணத்தை சொல்லிடுறேன்மா” என்று சரணாகதி அடைந்தார் மனோ.

“ ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் சொல்லுங்க”

“ இல்ல, மாப்பிள்ளை குரலை கேட்டதும் நான் கூட அவர் உங்கிட்ட பேசாமல் நேராய் எஃப் எம் க்கு போயிட்டாரோன்னு பயந்தே போயிருந்தேன்.. ஆனால், இது விளம்பரம்னு தெரிஞ்சதும் தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சே வந்தது..”

“ ஏன்.. ஏனப்படி?”

“பின்ன,அவர் ஒருவேளை அங்க இருந்திருந்தா நீ எங்களை கோவிலுக்கா கூட்டிட்டு போவ? நேராய் அங்க போயி சண்டை போட ஆரம்பிச்சுருப்ப.. அப்பறம் நாங்க எப்படி நிம்மதியாய் சாமி கும்பிட போயிருப்போம் சொல்லு?” என்றார் மனோ சோர்வான குரலில்.. “அம்மாடியோவ்,செல்ல மகளுக்கு நல்ல அப்பாவாய் இருக்குறது எவ்வளவு கஸ்டமாயிருக்கு” என்று மனதிற்குள் அவர் புலம்ப, அதை உணர்ந்துகொண்டவர் போல வாயை பொத்தி கொண்டு சிரித்தார் பாக்கியம்..

தந்தையை பார்த்து ஏதோசொல்ல வந்தவள்,அவரின் சோகமான முகத்தைப் பார்த்ததும் கோபத்தை கைவிட்டு விட்டு ஃபோனை தேடினார். அதற்குள் ஃபோன் மனோவின் கைக்கு போயிருந்தது..

“ அப்பா ஃபோனை கொடுங்க”

“பேபி நோ”

“ப்ளீஸ்ப்பா”

“ம்ம்ம்மஹ்ம்ம்ம்முடியவே முடியாது..நீ முதலில்கவனமாய் காரோட்டு.. உனக்கு என்ன இப்போ மாப்பிள்ளைக்கு ஃபோன் போடனும்.. அவ்வளவு தானே? நான் பார்த்துக்குறேன்”என்றவாரு மதியழகனின் கைப்பேசியை தொடர்பு கொள்ளும் முயற்சியிலிறங்கினார் மனோ..

“ எவ்வளவு சந்தோஷமாய்  இருந்தேன்?இந்த மது இப்படி கண்ணாம்பூச்சி ஆடி, ரொம்ப டென்ஷன் படுத்துறான்.. எல்லாம் இந்த சிங்கப்பூர் குரங்கு கொடுத்த ஐடியாவாய் இருக்கும்”என்று முணுமுணுத்தவள் கோவில் வாசலில் காரை நிறுத்தினாள்.

“அப்பா,அம்மா நீங்க முதலில் இறங்கிக்கோங்க.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன் “ என்றவள் மிகத்தெளிவாய் மனோவின் கையிலிருந்த தனது கைப்பேசியையும் எடுத்துக்கொண்டாள்…

“டேய் மது நீ மட்டும் கண்ணுல பட்ட,செத்த !!” என்று முணகிகொண்டே காரை லாவகமாய் பார்க் செய்தவள், காரில் இருந்து இறங்கும் முன், அவள் கதவை திறந்துவிட்டு இடைவரை குனிந்து ரோஜா பூங்கொத்தை நீட்டினான் மதியழகன்..

அவனை பார்த்த அடுத்த நொடி அவளின் மனதில் நிம்மதி நிறைந்துவிட்டது..அனினும் அவளின் கோபம் எள்ளளவும் குறையவில்லை..பூங்கொத்தை வாங்கி தூக்கி எறிந்துவிட வேண்டும் என்ற வேகத்தில் அவனிடம் இருந்து பிடுங்கியவள்கடைசி நொடியில்மனதை மாற்றிக் கொண்டு,காரில் அதை கோபமாய் வைத்தாள்.. இன்னமும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்காமல்மதி நின்றான்..

அப்படியே அவன் தலையில் இரண்டு கொட்டு வைக்கலாமென்று அவள் கைய்யோங்க, “மகனே உஷார்” என்று குரல்கொடுத்தார் வாசுதேவன்.. அவர் குரலில்தூக்கி வாரி போட சட்டென காரில் இருந்து இறங்கினாள் நிலா.

“மாமாஅத்தை “ என்று முகம் விகாசிக்க,அவள் அழைக்கவும், இருவரும் அருகில்வந்தனர்.. அவள் முகத்தில் தெரிந்த இன்ப அதிர்ச்சியை ரசிப்பதற்காக நிமிர்ந்தான் மதியழகன்.

“நிலா” என்றபடி அவள் கன்னத்தை வருடி நெற்றியில்முத்தமிட்டார் மலர். வாசுவும் அவள் தலையை பாசமாய் வருடி சிரித்தார்.. அந்த கண்கொள்ளாகாட்சியை மது ரசிப்பதைக் கண்டவள்,குறும்புடன் அவனை வேகமாகவே கிள்ளினாள்..

“ஸ்ஸ்ஸ்ஸ் ஆ” என்று அவன் அலருவான் என்று எதிர்பார்த்தவள்,அவன் “ஈஈஈ” என்று இளிப்பதை கண்டு இன்னும் கோபமானாள்.. “நிலா, முயற்சி பண்ணாதே,அவன் தூரத்தில் உன்னை பார்த்ததுமே சூடு சொரணை எல்லாத்தையும் மறந்துட்டான்” என்றார்  வாசு குறும்புடன்..

“ இது கனவு இல்லை கண்ணம்மா, நிஜம்தான்” என்று மலரும் எடுத்துகொடுக்க மலர்ந்து சிரித்தாள்நிலா..

“ஆனா,இந்த சர்ப்ரைஸ் நான் எதிர்பார்க்கவே இல்ல…”

ஒரு அர்த்தமுள்ளபார்வையை பறிமாறிக்கொண்டனர், மலரும் மதியும்.பிறகு

“எல்லாம் நல்ல விஷயம் தான்மா..  மதி,நீ அவகிட்ட சொல்லிகூட்டிட்டு வா..நாங்க முன்னாடிபோறோம்” என்று அங்கிருந்து நடந்தார் மலர்..அவருடன் வாசுவும் செல்ல, அவர்களை பார்த்துகொண்டே நின்றாள் நிலா.. அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்ட மதியழகனின் கரங்கள் நிலாவின் இடையில் லேசாய் குருகுருப்பூட்ட துள்ளி நகர்ந்தாள் நிலா.. திடீரென தடுமாறியவளை தாங்கிப் பிடித்தான் மதி..

“ஷ்ஷ்ஷ்ஷ்…இது கனவு இல்லை நிஜம்ன்னு என் ஸ்டைலில் ப்ரூவ் பண்ணேன் பேபி. தப்பா ?” என்று பாவமாய் கேட்டான் அவன்.. எதுவும் பேசாமல் அவனை காருக்குள் தள்ளினாள் தேன் நிலா..

“ பேபி”

“பேசாத..! எங்க போயி தொலைஞ்ச ? உன்னை நான் தேடுவேன்னு தெரியாதா ?”

“ஹேய் நானும் உன்னை தான் முதலில்பார்க்கனும்னு நினைச்சேன் டா.., ஆனா அதுகுள்ள இந்த திடீர் ஏற்பாடு நடந்துருச்சு… உன்கிட்டசொல்லாமல் இதை ஆரம்பிச்சதே எனக்கு கஸ்டமாய் இருக்கு தெரியுமா ?” என்றான் அவன் சோகமாய்… அவனை பிலுபிலுவென பிடிக்க நினைத்தவள்,  அவன் பேச்சை கவனித்து

“இதெல்லாம் என்ன ஏற்பாடு மது?”என்றாள்.

அவள் வலது கரத்தை பற்றி முத்தமிட்டவன்

“கல்யாணம் டா” என்றான்..

“யாருக்கு ?” என்று அதிர்ச்சியாய் கேட்டாள்நிலா..

ப்ரண்ட்ஸ்  இந்த எபிசோட்காக நிறைய ப்லேன் வைத்திருந்தேன்.. ஆனால்மீண்டும்  ஒரு நண்பனின் மரணம் என்னை சிந்திக்கவிடாமல் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.. விரைவில் வெளிவந்துவிடுவேன்னு நம்புறேன்..

முன்பு எல்லாம்,வயசாகினால் தான் மரணம் வரும்னு சொல்லுவாங்க.. ஆனா இப்போ மரணத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது.. அருகில் இருக்கும் அன்பிற்கினியவர்களுடன் அதிக நேரம் செலவளியுங்கள்நமது கடைசி நாள் என்று என்பது நமக்கே தெரியாத ரகசியம்!!

ஷக்தி- மிது ரசிகர்கள், மன்னிச்சிருங்க..அடுத்த அத்தியாயத்தில் அவர்களை கூட்டிட்டு வரேன்.. உங்கபொறுமைக்கு நன்றிஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்புவி

தொடரும்

Episode # 29

Episode # 31

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.