(Reading time: 12 - 23 minutes)

13. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

டேய் விஷ்ணு, பத்ர காளி கூப்பிடுற, நீ செத்த” என்று புலம்பிக் கொண்டே அவர்களை நோக்கி நடந்தான் விஷ்ணு.       

அருகில் சென்றவன் எதுவும் பேசாமல் நின்றான். அனு, திவ்யா என்ன சொல்ல போகிறாள் என்று அவளையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

திவ்யா விஷ்ணுவைப் பார்த்து “இங்கே பேச வேண்டாம், பக்கத்தில் இருக்கிற கூல் டிரிங்க் ஸாப் போகலாம்” என்று கூறிவிட்டு யார் பதிலுக்காகவும் காத்திருக்காமல் அனுவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

unakkaga mannil vanthen

விஷ்ணுவும் எதுவும் கூறாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான். அனுவும் திவ்யாவும் டேபிள்லின் ஒருபுறம் அமர, விஷ்ணு அவர்களுக்கு எதிரில் அமர்ந்தான்.

சிறிது நேரத்திற்கு அங்கு அமைதி நிலவியது. அதை உடைக்கும் விதமாக திவ்யா அனுவை பார்த்து “ஏண்டீ, என்ன ஜுஸ் சாப்பிடுர?” என்றாள்.

அனு திவ்யாவை முறைத்து விட்டு “எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றாள். அவள் முறைத்ததற்கு அர்த்தம் விஷ்ணு எதற்கு அழைத்தாயே அதைப் பற்றி பேசாமல் ஜுஸாம் ஜுஸ் என்பதுதான்.

அனு கடுப்பாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட திவ்யா, விஷ்ணு பக்கம் திரும்பி “சரி சொல்லுங்க” என்றாள்.

விஷ்ணு திருத் திருவென்று முழித்தான். திடீர் என்று வரச் சொன்னாள். எதுவும் கூறாமல் சொல்லுங்க என்றால் என்ன சொல்வது.

“என்ன சொல்லனும்” என்று புரியாமல் அவளிடமே கேட்டான்.

“ஆளுக்கு நாலு பீர் சொல்லுங்க, எல்லோரும் சேஸ் சொல்லிக் குடிப்போம்” கடுப்பில் இருந்தாலும் திவ்யாவின் நக்கல் குறையவில்லை.

தன்னை வாருகிறாள் என்று விஷ்ணுவிற்கு நன்றாகவே புரிந்தது. அதற்குப் பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற “ எனக்கு பீர் குடிக்கிற பழக்கம் இல்லை. இவங்கள பார்த்தாலும் அப்படி தெரியல” என்று அனுவை சுட்டிக்காட்டிக் கூறிவிட்டு “எங்களுக்கு ஆப்பிள் ஜுஸ்சே போதும், வேண்டுமானால் உங்களுக்கு மட்டும் பீர் சொல்லட்டுமா” என்றான் ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் கூறினான்.

கடந்த சில நாட்களாகவே விஷ்ணுவின் நாக்கில் நக்கல் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. தலைக்கு மேல் தண்ணீர் வந்துவிட்டது. இதற்கு மேல் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்பது போல் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் தன் மனதில் தோன்றியதை தைரியமாக வெளிப்படுத்தினான், அதில் நக்கல் பேச்சுக்களும் அடங்கும்.

விஷ்ணு கூறியதை கேட்டவுடன் அனுவிற்கு குபிர் என்று சிரிப்பு வரச் சிரித்துவிட்டாள். இது வரை திவ்யா மற்றவர்கள் காலை வாரி விட்டுத்தான் அனு பார்த்து இருக்கிறாள். அனுவினால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிரிப்பதை பார்த்த விஷ்ணு மெழுகைப் போல உருகிப் போனான். உருகாமல் எங்கே போவான், எத்தனை நாள் கனவு இது. அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டு தான் உலகை மறந்து பேசவேண்டும் அதைக் கேட்டு அவள் ரசிக்க வேண்டும், தான் கூறும் மொக்கை ஜோக்குகளுக்கும் அவள் அழகாய் சிரிக்க வேண்டும் என்று.

அதே சமயம் விஷ்ணு கொடுத்த பல்பிள், கசக்கிப் போட்ட பேப்பர் போல் திவ்யாவின் முகம் சுருங்கியது. பத்தா குறைக்கு விடாமல் சிரித்து அனு வேறு திவ்யாவை மேலும் மொக்கைச் செய்தாள்.

சிரித்துக் கொண்டிருந்த அனுவை ஒரு முறைப்பு முறைக்க, அவள் சிரிப்பை நிறுத்தினாள். விஷ்ணுவைப் பார்த்து “என்ன சார் நக்கலா” என்றாள்.

விஷ்ணு அதே தோரணையில் “அப்படி எல்லாம் இல்ல திவ்யா. நீங்க கேட்டீங்க, நான் பதில் சொன்னேன்” என்றான்.

திவ்யாவிற்கு புரிந்து போனது முதல் நாள் தயங்கி தயங்கி வந்து பேசியவன் இவன் இல்லை என்று. அதற்கு மேல் வாய் விட்டு வாங்கிக் கொள்ளக் கூடாது என்று முடிவுக்கு வந்தாள்.

“நீங்க யாரு, முதல உங்க பேரு என்ன னு சொல்லுங்க” என்று கேட்டாள் திவ்யா.

அனுவிற்கும் அவன் பேர் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சில நாட்களாகவே இருந்தது. அவளும் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.

“என் பேரு விஷ்ணு. சில்ஸி பத்திரிகையில் போட்டோ கிராபரா வேளை பார்க்கிறேன். வயது 26” என்று ஐடி கார்டை கையில் கொடுக்காத குறையாக தன் விவரத்தைக் கூறினான் விஷ்ணு.

இத்தனை நாள் தன்னை குழப்பியவனின் பெயர் விஷ்ணு என்று தெரிந்து அதை ஒரு முறை தன் மனதில் கூறிப் பார்த்துக் கொண்டாள் அனு. “விஷ்ணு. நல்ல பேர்தான்”.

“பார்க்க நல்ல பையன் மாதிரி தெரியிறீங்க. அப்பறம் ஏன் கல்யாணம் ஆகப் போகிறது என்று தெரிந்தும், அனு பின்னால் இப்படி சுத்துறீங்க?” அடுத்த கேள்வி திவ்யாவிடம் இருந்து.

“நான் எந்தத் தவறான எண்ணத்திலும் இவங்க பின்னால் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நான் வேறு ஒரு இடத்துக்கு நிறந்திரமாக போயிடுவேன். அது வரைக்கு இவங்கள நான் தினமும்ப் பார்க்கனும். அதற்குக் கூட அவங்க கிட்ட அனுமதி வாங்கிட்டேன்” என்று தன் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விளக்கினான் விஷ்ணு. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.