(Reading time: 9 - 18 minutes)

03. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkaaraa

தோல்விகளைக்  கூட சுகமாய் உணர்கிறேன் நான்,

தோற்பது உன்னிடம் என்பதாலோ அன்பே !!!

மனம் முழுவதும் மகிழ்ச்சியும் பூரிப்பும் போட்டிப் போட்டு நிரப்ப, தனக்கு துணையாய் வரப் போகிறவளை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டு மேடையில் நின்றிருந்தான் கண்ணன்.

ரிசப்ஷனில் ஒவ்வொருவராய் வந்து வாழ்த்திச் செல்ல, பொறுமையாய் கிடைத்த கேப்பில் ஷண்மதியும் கண்ணனை சைட் அடிக்க தான் செய்தாள்.

உறவினர் கூட்டம் கொஞ்சம் குறைய தொடங்கியவுடன் மேடையில் இருந்த இருக்கையில்  சற்று ஆசுவாசமாக அமர்ந்த ஷண்மதியிடம்  “ஹேய் செல்லம்“ என சரசரக்க தொடங்கினான் அவள் கள்வன்.

எல்லோரும் அவர்களையே பாயிண்ட் அவுட் பண்ணி பார்த்துக் கொண்டிருப்பதால், அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனத்தையே மொழியாய் கொண்டாள் அவள்.

“ ஹெல்லோ..... மேடம்... ”

“ ……………………… ”

“ என்ன மேடம் ஸ்பீக்கர் அவுட்டா? “

“ .............. “

“ ஓய்............. ”

“ ஷு……. “

“ அடிப்பாவி!!!  என்னடீ, காக்காவ விரட்டுற மாதிரி ஷு, செப்பல்னு சொல்ற? “

“ கொஞ்சம் பேசாம இருயா.. “

“ என்னது யா வா??? “

“ ஏன் டா ? “

“ டா வா ??? அடியேய்... கட்டிண புருஷனை.... சே.. டைமிங் மிஸ்டேக், கட்ட போற புருஷனை இப்படி டக்குனு ‘டா’ ‘யா’னு கூப்டுடியே.. கொஞ்சம் டைம் எடுப்பனு பார்த்தேன் “

“ ம்‌ம்‌ம்ம்........ அது தமிழ் யா இல்ல, இங்கிலீஷ் யா....”

“ அப்போ டா..? “

“ அது சும்மா, செல்லமா!! “ என்று அவள் இழுத்ததில் அவன் விழுந்தே இருந்தான். (கண்ணன் கான்சியஸ்க்கு வரதுக்குள்ள வாங்க நாம கடக்குட்டி அனு என்ன பண்றானு பாப்போம்)

ரெட்டை சடையிட்டு, க்ரீம் டாப்ஸூம், ரெட் வித் கோல்டன் ஃப்ரில்ஸ்- லாங்க் ஸ்கர்ட்டுடன், பட்டாம்ப்பூச்சியாய் மண்டபத்தை வளைய வந்தாள் அனன்யா. அடக்கமும் அமர்களமும் சரி பாதியாக அமைய பெற்ற, பெர்ஃபெக்ட் மிக்ஸ் இவள்.

யார் கண்ணு பட்டுதோ, பிள்ளைக்கு வேலைக் கொடுத்துடாங்க அவள் அம்மா விஜயலட்சுமி. ஏதேதோ காரணத்திற்கு என உறவு பெண்கள் சிலரை அவர் அழைத்து போக, அவர்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வது என்று அனன்யாவை அவர்கள் தங்கி இருந்த அறையில் சோலோவாக மாட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

‘எவ்வளவோ பண்ணிடோம், இதை பண்ண மாட்டோமா!!’ என்று பொறுப்பை அசால்டாக அக்சப்ட் செய்தவள், சிறிது நேரத்தில்,

“ டேய், நானும் அடக்க ஒடுக்கமா, பொம்பளப்பிள்ளையா இருக்கனும்னு பார்த்தா, விட மாட்ட போலயே.. அப்ப இருந்து என் ஜடைய பிடுச்சு வண்டி ஓட்டிட்டு இருக்க ஒழுங்கு மரியாதையா நில்லுடா வாலு… ” என்று ஒரு நான்கு வயது பாலகனை மிரட்ட ஆரம்பித்தாள் அனு.

இவ்வளவு நேரமாய் தன்னைக் கொஞ்சியவள், திடீரென்று எகிரவும், அந்த பொடியனும்

“ மட்டேன் போ…. நான் அம்மா கிட்ட போறேன்… அம்மாமாமாமா……… ” என்று சௌண்ட் உடன் வெளியே செல்ல முயற்சி செய்தான்.

‘பத்து நிமிஷம் முன்னால ஆசையாய் ‘ அனுக்கா அனுக்கானு’ சொன்னவன் இப்படி இறங்கிடானே..  இந்த பொறுப்பால எனக்கு மரியாத போச்சே.. அனன்யா உனக்கு வந்த சோதனை பாரேன்’ என்று எண்ணியவள். அவனை ஒரே அமுக்காக அமுக்கி தன்னுடன் வைத்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஐந்து குட்டீஸும் சேர்ந்து அவளை ஒரு வழியாக்க.. கடுப்பானவள், தனது த்ரீ லேயர் ஸ்கர்டின் முதல் லேயரை எடுத்து.. மடித்து  கட்டிக்கொண்டு புல் ஹாண்ட்-ஐ சற்று ஏற்றி விட்டு, ஹரியின் செல் போனிலுள்ள பாடலை ஒளிபரப்பினாள்.

        “ கண்ணு சுவக்கனு….பல்லு கடிக்கனு..

          முஷ்டி சுருட்டனு.. ஆகே வியர்கனு..

          நாடி நரம்பு வரிஞ்சு முறுக்கனு… “

புரியாத பஷையில் பாடல் ஓட, பிள்ளைகளும் ‘பே’ என பார்த்தது. அவர்களின் அடேன்ஷனை கவர்ந்தவள். அடுத்தடுத்த பாடல்களில் அவர்களை ஆட வைத்து, ஒரு வழியாக சமாளித்தாள்.

ஷணுவின் பதிலில் இருந்து, கண்ணன் கஷ்டப்பட்டு கரண்ட் உலகத்திற்கு தத்தளித்து தாவி வந்துக்கொண்டிருக்க, ஷண்மதியின் அக்கா சமுத்திரா அவளின் ஒன்பது மாத குட்டி பொண்ணு ஸ்ரீநிதியுடன் இவர்களின் அருகில் வந்தார்.

“ என்ன மாப்பிள சார், என் சிஸ்ஸி என்ன சொல்றா? “ சமுத்திரா. 

“ சார் எல்லாம் வேணாம் அண்ணி. கண்ணானு கூப்பிடுங்க. உங்க சிஸ்ஸி தானே!! வாய திறந்தால், முத்து உதிருர மாதிரியே உக்காந்து இருக்காங்க “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.