(Reading time: 6 - 11 minutes)

31. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ன்னமோ பெருசா மறைக்கிற கதிர் நீ.. அதான் உன் குரல் இப்படி தடுமாறுது”. அவர்கள் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் 12வது முறை இதை கூருகிறாள் அனு.

“ அனு டார்லிங், என் பேச்சு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“இதோ..இதோ நீ கொஞ்சுறியே இந்த கொஞ்சல், இதுவே காட்டிக் கொடுக்குது, நீ செம்மயா பொய் சொல்றன்னு… கதிர்ன்னா ஸ்வீட்..எவ்ளோ லவ் இருந்தாலும் அதை வார்த்தையால் பொங்கி பொழியுற ஆளே கிடையாது. உன் வாயல ஐ லவ் யுன்னு சொல்லி கேட்குறதும், வசிஷ்டர் வாயால ரிஷிப்பட்டம் வாங்குறதும் ஒன்னு.. அப்படி பட்ட நீ, இன்னைக்கு தானகவே கொஞ்சிக் கொழையுறன்னா,என் பேச்ச மாற்ற நீ முயற்சி பண்ணுறன்னு அர்த்தம்.. நீ மறைக்கிறதை நான் கண்டுப்பிடிச்சிட கூடாதுன்னு நீ நினைக்கிறன்னு அர்த்தம்… சொல்லு என்ன விஷயம்?”

ninaithale Inikkum

உண்மையில் மலைத்து தான் போனான் கதிர். ஒன்று மட்டும் அவனுக்கு நட்ராய் விளங்கியது,இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவன் அவளுக்குத் தெரியாமல் ரகசியத்தை வைத்துக் கொள்ளவே முடியாது.. அவன் மைன்ட் வாய்சை கேட்ச் பிடிச்ச தல தோனி மாதிரி

“ இப்போ மட்டும் இல்ல கதிர்,எப்போதுமே நீ எங்கிட்ட எதையும் மறைக்க முடியாது,மறைக்கவும் கூடாது” என்று ஒரே போடாய் போட்டாள் அவள்.

“ ஷ்ஷ்ஷ்…ஷபா….உங்கிட்ட எதையும் மறைக்கல அனு..நண்பனை பற்றிய விஷயம் வெளில சொல்லிக்க வேணாம்னு நினைச்சேன்”

“ஒஹோ , அப்போ நான் உனக்கு வெளி ஆளா?” அடுத்த அம்பு அவனை நோக்கி தொலைப்பேசியிலேயே புறப்பட்டது.

“ அய்யோ டேய் கதிரு, ஏன்டா, இப்படி சிக்கிச் சின்னாபின்னம் ஆகுற? தெளிவாத்தான் பேசித் தொலையேன்”என்றவன் மனம் கட்டளையிட

“ அய்யோ, மனசுல இருக்குறது என் வாயில் இருந்து வெளில வரக்கூடாதுன்னு சொன்னேன்மா” என்றான் அவன்.

“சும்மா சமாளிக்காமல் சொல்லு என்னாச்சு? “ என்று அனு தீவிரமாய் கேட்கவும், கதிர் சந்துருவின் வீட்டில் நடந்ததை கூறினான்.

“ஓ….. சரி இதுக்கு நீ ஏன் ஃபீல் பண்ணுற?”

“சந்துரு என்ன முடிவு எடுத்துருக்கான்னு தெரியல .. நேத்து நைட்ல இருந்து அவன் நந்துகிட்ட பேசவே இல்லன்னு நினைக்கிறேன்..”

“அது உனக்கு எப்படி தெரியும்?” – அனு

“லூசு நாந்தானே அவன் கூடவே இருக்கேன்?”

“லூசா?இப்போத்தான் டார்லிங்குன்னு கொஞ்சுன? இருடா இதுக்கு உன்னை அப்பறமாய் பழிவாங்குறேன்” என்றவள்,மீண்டும்

“ நம்ம நந்துவும் சந்துவும் சங்க காலத்து காதலர்கள் மாதிரி நிலவை பார்த்தே பேசிப்பாங்க..அதுனால நீ இதையெல்லாம் நினைச்சு கவலைப்படாமல் இரு.. அப்படியே ஏதாவது கை மீறி போற மாதிரி இருந்தால், இருக்கவே இருக்கு அனு& கோ.. எப்படியாச்சும் தகிடுதத்தம் பண்ணி டும் டும் டும் கொட்டிட வெச்சிரலாம்” என்றாள் பாவனையாய்.. அவள் பேச்சில் வழக்கம்போலகதிரும் கவலையை மறந்து சிரித்தான்.. அவர்களுக்கு எதிர்மாறாய் கவலை கடலில் மூழ்கி இருந்தாள் நந்திதா..

வழக்கம்போல சந்துருவிடம் இருந்து வரும் மெசேஜ் எதுவுமே அன்று வரவில்லை..அவளாக ஃபோன் செய்தப்போதும் அவன் துண்டித்து விட்டான்.

“ ஆசை முகம் மறந்து போச்சே,

இதை யாரிடம் சொல்வேனடி தோழி” தவறான நேரத்தில் சரியாய் அந்த பாடல் எங்கிருந்தோ ஒலிக்க, இன்னும் வாடித்தான் போனாள் அவள். இனி வரும் நாளெல்லாம் இதை விட மோசமாய் இருக்கப்போவது அவளுக்கு தெரியாதே !

அவளின் துயரத்திற்கு ஈடாக, சோகமாய் இருந்தாள் தீப்தி..தூக்கத்தில் இருந்து விழித்தவள், எழுந்து கொள்ளாமல் படுக்கையிலிருந்தப்படியே ஜன்னல் வழியாய் வானை வெறித்தாள்..

வானமும் தான் எத்தனை பாக்கியசாலி? சில மணி நேரங்கள் கதிரவன் இன்றி முகம் கருகி வாடினாலும், அடுத்த சில மணிநேரங்களில் வானுடன் இணைந்து விடுகிறான்.. அனைவருக்கும் இது போல ஒரே ஒரு உறவாவது கிடைத்து விட்டால்  ஆனந்தம் தானே!

உறவு என்றதுமேஅழையா விருந்தாளியாய் வந்தான் தீரஜ் ப்ரசாந்த்..” யாரை ஏமாற்றினேன் ?எனக்கு என் இவ்வளவு பெரிய ஏமாற்றம்?” என்று வாய்விட்டு புலம்ப முடியாத நிலை..புலம்புவதற்கு வார்த்தைகளெ இல்லாத விரக்தி.. அவள்கண்ணீர் சுரபிகள்கூட செயல்படாமல் தான் இருந்தன. இதயம் இறுகி போனது.. இலக்கு மறைந்தே போனது. கோபம் மட்டும் பெருகிக் கொண்டேபோனது..ஒரு முடிவுக்கு வந்தவளாய் கட்டிலில் இருந்து எழுந்தவள் நந்திதாவை அழைத்தாள்.

“நந்து..”

“..”

“நந்து !”

“ஆ… ஆங்க்…என்ன ?”

“நான் இன்னைக்குன் க்லாஸ்க்கு வரமாட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.