(Reading time: 14 - 28 minutes)

16. என் மனதை தொட்டு போனவளே - VJ G

ன்னும் நான்கு நாளில் வித்யாவின் கல்யாணம், வீட்டில் எல்லோருக்கும் புடவை, வேஷ்டி எல்லாம் எடுத்தார்கள், சித்ராவுக்கும் எல்லாம் எடுத்தார்கள், சித்ரா இரண்டு நாள் முன்னாடி போன் செய்தாள் நான் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வீட்டுக்கு போகிறேன், இப்போது நர்ஸ் உதவி இல்லாமல் அம்மாவால் எல்லாம் செய்ய முடிகிறது அதனால் நர்ஸ் வேண்டாம்,' என்றாள்

'சரி உன் இஷ்டம் நீ என்னோட கண்ட்ரோலில் இல்லை, நான் என்ன சொல்வது,'

அவளும் ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டாள், அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது,

en manathai thottu ponavale

அவன் உள்ளே போகும் போது தாத்தா அவனை கூப்பிட்டு, 'என்னப்பா ஒரு மாதிரியா இருக்கே, சித்ராவோட அம்மா எப்படியிருக்காங்க, சித்ரா எப்படி இருக்கா, ஏன் அவ வரலே,' என்று கேட்டார் நீலகண்டன்

'அவங்க அம்மா நன்னாயிருக்காங்க, அவளும் நன்னாயிருக்கா,'

'சரி நம்ம வித்யா கல்யாணத்துக்கு வருவாளா,'

'இல்லை தாத்தா, அவ தான் அவ அம்மாவை கவனிக்கிறாள், அதனால் அவளால் வர முடியாது,”

“சரி நாம் போய் பார்க்கலாமில்லையா,'

'வேண்டாம் தாத்தா அவள் கூப்பிடுவாள் அப்போது போகலாம், அது வரை நாமே போக வேண்டாம்,' என்றான் கொஞ்சம் வருத்தத்துடன்,

'சரி நீ வேலையை கவனி,' என்று வருத்தத்துடன் சொன்னார்,

அவனும் அவளையே நினைத்திருந்தாலும் தன் வேலையை ஒழுங்காகச் செய்தான்,

அன்று வித்யாவுடைய கல்யாணம், செந்திலும், வித்யாவும் நல்ல அழகாய் இருந்தார்கள், செந்தில், வித்யாவின் கழுத்தில் தாலியை கட்ட, சிவேஷும், கற்பகமும் பெண்ணை தாரை வார்க்கும் போது கண்ணில் நீரை வார்த்தார்கள், ருத்ராவும் அப்படித்தான், கண்ணில் நீர் அருவியாய் கொட்டியது, வித்யாவுக்கும் அப்படித்தான், அண்ணனைப் பார்த்தாள், செந்தில் அவளின் கண்ணீரை துடைத்தான், எல்லோரும் கொஞ்சம் சமாளித்துக் கொண்டனர்,

கல்யாணம் முடிந்த அன்று

கதவை தட தட என்ற சத்ததில் பயந்து கதவை திறந்தாள் சித்ரா, ஒரு ஐந்தாறு பேர் உள்ளே நுழைந்தார்கள், 'நான் வரேனென்று சொன்னேனில்லே, நீ எங்கே போனே,’ என்று அவள் அம்மாவிடம் கேட்டார் ஒருவர்,’

'நான்..... நான்,’ என்று தடுமாறினாள் அவள் அம்மா,

‘நீங்கள் எல்லாம் யார்?’ என்று கேட்டாள் சித்ரா

சித்ராவையோ அவள் கேள்வியையோ லட்சியம்செய்யவில்லை அவர்கள்   'சரி கிளம்புங்கள்,' என்றார் வந்திருப்பவர்

கவிதாவோ நிதானமாக, 'எனக்கு இப்பதான் ஆபேரஷன் ஆயிருக்கு, கொஞ்சம் சரியானவுடன் வரேன்,' என்றாள்

'அதெல்லாம் அங்கே நம் ஊரிலே பார்த்துக்கலாம், நல்ல டாக்டர்செல்லாம் இருக்காங்க வா, கிளம்பு,' என்று அவர்களை கிளப்பினார்,

'என்னம்மா இதெல்லாம், யார் இவர்கள், எங்கு போகிறோம், எதற்கு போகிறோம்,' என்று கேள்விமேல், கேள்வி கேட்டாள்,

அவள் அம்மாவிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை, அவர்களிடமே கேட்டாள், 'எங்கே கூப்பிடுகிறீர்கள், எதற்கு, ஏன், நாங்க உங்களுடன் எதற்கு வரணும் சொல்லுங்கள் நான் போலீசைக் கூப்பிடுகிறேன்,' என்று தன் போனை எடுத்தாள், அதை அவள் கையிலிருந்து பிடுங்கி தன் ஆள் ஒருவனிடம் கொடுத்து ஏதோ சொன்னான் அவளுக்கு அந்த பாஷை புரியவில்லை, ‘அது என் போன் எனக்கு வேணும்,’ அவர்கள் காதிலேயே வாங்கவில்லை,

அக்கம் பக்கம் யாரையும் வெளியே காணோம்

'அம்மா சொல்லம்மா என்ன நடக்கிறது, சொல்லு,' என்று கேட்டாள் அவள் அம்மா, வேண்டியதை எடுத்துக் கொள், நாம் இப்போது போக வேண்டும்,' என்றாள்  

அவள் அம்மா அவர்கள் இருவருக்கும் துணிகளை எடுத்து வைத்துகொண்டாள், தன்னுடைய மருந்துகளை எடுத்து வைத்துகொண்டாள், எல்லாம் எடுத்தவுடன் அவர்களைப் பார்த்து' கிளம்பலாம்' என்றாள்

'சொல்லும்மா எங்கே போறோம்,' சித்ரா அழுதாள்' நான் ஆபிசில் சொல்லனும்மா, சொல்லு எங்கே போறோம் எப்போ வருவோம்,'

'நீ யாருக்கும் போன் பண்ண வேண்டாம், நாம் இங்கே திரும்பி வரமாட்டோம், நம் ஊருக்குப் போறோம், வாயை மூடிண்டு வா,' என்றான் அந்த ஆள்,

என்ன திரும்பி வரமாட்டோமா, அப்போ என் ருத்ரா, அவரை பார்க்காமல் எப்படி, அவர் இல்லாமல் எப்படி வாழ்வேன், என்று பல விதமாக நினைத்தாள்,

'வரவில்லை நீ போய்விட்டு வா,' என்று அவள் சொல்ல, கூட வந்தவர், அவள் கையை பிடித்து அவளை கொண்டு வேணில் ஏற்றினார்,

அம்மாவும் ஏறியவுடன், அங்கிருந்த ஒரு வீட்டில் கதவை தட்டினான், 'அவர்கள் இனி இங்கு வரமாட்டார்கள் இருக்கும் பொருளை யாராவது எடுத்துக் கொள்ளுங்கள்,' என்று கூறி சாவியைக் கொடுத்தான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.