(Reading time: 9 - 18 minutes)

17. சதி என்று சரணடைந்தேன் - சகி

ன்னும் சில நிமிடங்கள் தான் இதுவரை புதல்வி,சகோதரி,தோழி என்ற மகத்துவங்களை தாங்கிய பெண்மை அடுத்த மகத்துவத்தை ஏற்கவும்,அடுத்த தர்மத்தை காக்கவும்  தயாராகி கொண்டிருந்தது.ஆம்...!!அது பத்தினி தர்மம்!!

சில நிமிடங்களில் வெவ்வேறு இதயங்களை மாங்கல்யம் ஒன்றாக பிணைக்க காத்திருந்தது.

மாங்கல்யம்...ஒரு ஆண் அந்த ரட்ஷையை ஒரு ஸ்திரியின் கழுத்தில் கட்டுவதற்கான காரணம் என்ன??அவளை தனதாக்குகிறானா??அவனது பத்தினி என ஊர் அறிய வைக்கிறானா??

Sathi endru saranadainthen

இல்லை....அவன் ஓர் வாக்களிக்கிறான்.

முதல் முடிச்சு: பஞ்ச பூதங்களில் பவித்ரமான யக்ஞத்தை சாட்சி ஆக்கி பரிசுத்தமான உறவை உண்டோடு பிணைக்கும் நான் என் பத்தினியான உன்னிடம் வழங்கும் வாக்கிது!!

எவ்வாறு புவியை விட்டு பஞ்ச பூதங்களானது அகலாதவண்ணம் இருக்கிறதோ அதுபோல,எந்த இக்கட்டிலும் துன்பத்திலும் உனை பிரியாது இருப்பேன்.

இரண்டாம் முடிச்சு:

வேறு ஒரு ஆண்மகனுக்கு புதல்வி எனும் ஸ்தானத்தில் இருந்தவள் நீ!!உனது பெற்றோர் விட்டு நீ அகலும் வேளையில் உனக்கு ஓர் வாக்களிக்கிறேன்.நான் உன்னிடம் இருந்து பிரித்த அன்பை மறுவீட்டு தாய் தந்தை மூலமோ,(அ)என் மூலமோ மீண்டும் கிட்ட வழி வகுப்பேன்.

மூன்றாம் முடிச்சு: ஒரு தாயின் அன்பை பிரிந்திருக்கிறாய்.நாளைய நமது வாரிசு ஜெனனம் எடுக்கும் வேளையில் நீ அதே ஸ்தானத்தை உனக்கு உரிதாக்குவாய்.எனினும்,நமது பந்தம் ஔி பொருந்தி நிலைத்திருக்கும்.அது முக்தியிலும் மங்காது!!

இம்மூன்று வாக்கினை அவன் ஒரு ஸ்திரிக்கு நல்குகின்றான்.

ஏன் புரிகிறதா??திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிககப்படுகின்றன என்று!!!

இதயத்துடிப்பு உச்சத்தை தொட்டுவிடும் போல இருந்தது.

இன்னும் சில மணித்துளிகளே!!

"அனு!"

"அண்ணி?"-சதி அவளை உற்றுப் பார்த்தாள்.

"எவ்வளவு அழகா இருக்க?கௌதம் காலி...போ!!"

"போங்க அண்ணி!"

-சிரம் தாழ்த்தியவளின் முகத்தை நிமிர்த்தினாள்.

"கௌதமுக்கு உன்னை விட சிறந்த பார்ட்னர் கிடைக்க மாட்டாங்க!காலம் உன்னை கௌதம் பார்வைக்கு முதல்ல காட்டி இருக்கலாம்!"-அனுவிடம் தனது வாழ்க்கை குறித்து அனைத்தையும் அவனே கூறி இருந்தான்.அவனுக்கான அவகாசத்தையும் அவன் முன்னரே பெற்றுக்கொண்டான்.

"இப்போ தாமதமா காட்டினாலும் பிரச்சனை ஏதும் இல்லையே அண்ணி!"சதி அவள் கரத்தைப் பற்றினாள்.

"கௌதம் சில நேரத்துல காரணமே இல்லாம கோபப்படுவான் அனு.அதுக்காக...நீ அவன் மேலே இருக்கிற அன்பை வெறுப்பாக மாற்றிக்க வேண்டாம்!'

"புரியுது அண்ணி!!அவருக்கும் கொஞ்சம் அவகாசம் வேணும்!நான் உங்களுக்கு ஒரு சத்தியம் பண்றேன்!அவரை உங்க பழைய கௌதமா மாற்றி கொடுப்பேன்!"-மனம் நெகிழ்ந்து போனது அவளுக்கு!!அவள் உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் சதி!!

"சரி...வா!!"-அதற்குள் சில தோழிகள் வந்துவிட,மணகோலத்தில் மேடையை அடைந்தாள் அனு.

நிர்மூலமான இவ்வுண்மையை கௌதம் ஏற்றதாகவே கருத வேண்டும் அவன் முகம் அவளை நோக்கி புன்னகை பூத்தது.ஆனால் இதயத்தில் தனக்கு ஒரு நல்ல துணை கிடைத்தாள் என்பதை விட தோழி கிடைத்தாள் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது.

"கெட்டிமேளம்!கெட்டிமேளம்!"-புரோகிதர் கூற,மேளதாளம் முழங்க அனைவரும் ஆசீர்வதிக்க திவ்யத்துவம் நிறைந்த மாங்கல்யத்தை அவளுக்கு உரிதாக்கி அங்கீகாரம் நல்கினான் கௌதம்.

சரணின் கண்களில் கண்ணீர் சுரந்தது.ரகு அவரை ஆறுதல் படுத்தினார்.

மணம் நிறைந்த குங்குமத்தை அவள் நெற்றியில் அணிவித்து அந்த அங்கீகாரத்திற்கு அந்தஸ்த்தை தந்தான் அவன்.

அவள் கண்கள் ஒருமுறை அவனால் அணிவிக்கப்பட்ட புது பந்தத்தை கண்டு கசிந்தது.

இருவரும் அக்னி குண்டத்தை வலம் வந்தனர்.

அவன் அக்னியை சாட்சியாக்கி அவளை தனதாக்கினான்.

அழகிய பயணம் இனிதே தொடங்கப்பட்டது.

பெரியோர்களின் பாதங்களை பணிந்தனர் இருவரும்.

அவர்கள் ரகுவின் பாதம் பணிந்த போது ராகுலின் மனம் கொதித்தது.காரணம்,அவரோடு அவர் பத்தினியும் உடன் இருந்தார்.

"அண்ணா!"-என்று அவன் சரணங்களை பரிசிக்க சென்றவளை தடுத்தான் ராகுல்.

வேண்டாம் என்று தலையசைத்து அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டான்.

பொங்கிய கண்ணீரை சிரமத்தோடு கட்டுப்படுத்தினான்.

ஒரு ஸ்திரி விவாஹம் முடிக்கும்போது யார் கலங்குவார்களோ!நிச்சயம் இருவர் கலங்குவர்..ஒன்று அவள் தந்தை,பின் அவள் தமையன்!!மற்றவர் தங்கள் தேவதையை தாரை வார்க்கலாம்!இவ்விருவர் மட்டும் தங்கள் ஆனந்தத்தை தாரை வார்க்கின்றனர்.

தந்தை,தமையன் நன்முறையில் கிடைக்கப்பெற்ற எந்த நங்கையும் பாக்கியவதியே!!!

ன்றிரவு....

தனிமையில் நின்றிருந்தான் கௌதம்!!!

இது அவன் எதிர்நோக்கா வாழ்க்கை தான்!!

இருந்தாலும் இவ்வாழ்க்கையில் அவன் மனம் சற்று நம்பிக்கை வைத்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.