(Reading time: 8 - 16 minutes)

02. பைராகி - சகி

bhairagi

ற்றே சிந்தனை செய்து பாருங்கள்...

பரந்து விரிந்த இந்த ஞாலம் திடீரென்று குறுகிய நிலப்பரப்பாக மாறினால்???ஆர்பரிக்கும் அலைக்கடல் திடீரென மழைத்துளியாய் மாறினால்??மனித வாழ்வின் எதார்த்தங்களும்,நிதர்சனங்களும் எப்போதும் கேள்விகளாகவே உதிக்கின்றன...

மனதினை வியாபித்த கேள்விகளுக்கு விடை அறிய மனமானது துடிக்கின்றது!!!

விடை தேடி புறப்பட...மனம் சந்திப்பது யாது???மீண்டும் வினாவை தான்!!

ஆனால்,உண்மையை அறிந்த மனமானது,அனைத்தையும் அறியும் எல்லாம் மாயை என்று!!!!

வீட்டினுள் பரபரப்பாக நுழைந்தான் ஆதித்யா.

"தெய்வமே!இன்னிக்கு என்ன புயலடிக்க போகுதோ!"-என்று மனம் கூறியது.

சோபாவில் அமர்ந்தப்படி ரிமோட்டில் தன் கோபத்தை எல்லாம் காட்டி கொண்டிருந்தாள் யாத்ரா.அது அதன் கோபத்தை எல்லாம் உபயோகப்படுத்தி சேனல்களை மாற்றியது.

"போச்சு!காளி அவதாரம் எடுத்து நிற்கிறாளே!ஆதி...உஷாராகிக்கோடா!!"-என்று எண்ணியப்படி அவளருகே சென்று அமர்ந்தான்.

"டார்லிங்!!"

"..........."

"ஸ்வீட்டி!"-அவன் அவளை தன் பக்கமாக திருப்பமுய்சி செய்ய யாத்ரா அவன் கரத்தை தட்டிவிட்டாள்.

"ஸாரிடா!ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்!அதான்...வர முடியலை!"

"நான் உன்னிடம் எந்த காரணத்தையும் கேட்கலை!"

"யாத்ரா...ப்ளீஸ்!நான் தான் முக்கியமான மீட்டிங்னு சொல்றேன்ல?"

"அப்படி என்ன ஆதி உன் அம்மாவிட முக்கியமான விஷயம்?"

"............."

"இன்னிக்கு அவங்களுக்கு உடம்பு ரொம்ப முடியலை!செக் பண்ணிட்டு வந்துடலாம்,ஒரு நாளாவது சீக்கிரம் வா தானே சென்னேன்!மணி பத்தாகுது!!உன் அம்மாவையே பத்திரமா பார்த்துக்க தெரியலை...நாளைக்கு நீ எப்படி என்னை பத்திரமா பார்த்துப்ப?"

"ஜெஸ்ட் ஸ்டாப் இட்  ஓ.கே!நான் தான் வர முடியாத சூழ்நிலைன்னு சொன்னேன்ல!!எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து சண்டை போடுற?வீட்டுக்கு வந்தாலே இதே பிரச்சனை!!ச்சே.."-அலுவலகத்தின் வேலை பளு!!தன் பிரியத்திற்குரியவள் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்னும் எண்ணம் எல்லாம் அவனை கோபப்பட தூண்டியது.

பேச்சிழந்து போனாள் யாத்ரா.கண்கள் தன்னிச்சையாக கலங்கின...

எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் அவள்.

அவள் சென்றப்பின் நீண்ட நேராக தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.

மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது!!

சங்கடத்தை களையும் பொருட்டு தன் தாயை நாடி சென்றார்.

அவர் கண்கள் மூடி உறங்கி கொண்டிருந்தார்.

சத்தமில்லாமல் அவரது பாதத்தின் அருகே அமர்ந்து அவர் காலடிகளை பிடித்துவிட்டான்.

திடீரென உருவான ஸ்பரிசத்தினால் திடுக்கிட்டு கண்விழித்தார் ஜானகி.

"ஆதி!என்னப்பா?என்னாச்சு?"

"ஸாரி அம்மூ!இன்னிக்கு உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக வர முடியலை!!"

"யாத்ரா திட்டினாளா??"

"............."

"இதோப் பாருப்பா!!எனக்கு புரியுது!ஆனா,அவ சின்ன வயசுல இருந்து அம்மாப்பா பாசம் இல்லாம வாழந்தவ!இப்போ திடீரென்று தாய் பாசம் உணரவே அவளால அந்த பாசத்தை விட்டுக்கொடுக்க முடியலை!அதுக்காக இப்படி சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறது நல்லாவா இருக்கு?"

"உனக்கு என்ன மேலே கோபம் இல்லையா அம்மூ?"

"ஏன் கோபம்?அதான் என்னை பாசமா கவனிக்க நல்ல மருமகள் இருக்காளே!!நியாயப்படி நான் உனக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்!"-ஆதித்யா அவரது அணைப்பினுள் சேர்ந்தான்.

"ஒருவகையில எனக்கு சந்தோஷம் தான்!"

"எதுக்கு?"

"நீ பிறந்ததில் இருந்து உன்னை நான் திட்டியதில்லை.நீ என்ன தான் சேட்டை பண்ணாலும் அந்த கோபத்தை உன்னிடம் காட்டியதில்லை.இப்போ அதெல்லாம் என் மருமகள் மூலமா பழி வாங்கிக்கிறேன்!"-என்றார் புன்னகையோடு!!

"பாரேன்!!நல்ல காமெடி!"

"சரி போய் அவளை சமாதானப்படுத்து!போ!"

"ம்..."

"டேய்!அங்கே போய் விருமாண்டி மாதிரி முறைத்துக்கொண்டு நிற்காதே!!"

"ம்..."-சற்று தயங்கியப்படியே அவளது அறை கதவை திறந்தான் ஆதித்யா.

அவள் தரையில் அமர்ந்தப்படி மெத்தையில் சாய்ந்திருந்தாள்.

"ச்சீ...ரொம்ப திட்டிட்டோமா?!"-என்று அவளருகே சென்று அமர்ந்தான் ஆதித்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.