(Reading time: 15 - 29 minutes)

17. காதல் பின்னது உலகு - மனோஹரி

பொதுவா ஜென்ட்ஸ் மேல இருக்ற அவநம்பிக்கை அந்த நேரத்துல நீங்க ஏற்கனவே என்ட்ட நல்லா பேசாத மாதிரி ஒரு ஃபீல்….எப்டியோ அப்டி நினைச்சுட்டேன்….” தன் விளக்கத்தை தொடர்ந்தாள் நிலவினி.

“உங்க மேல எனக்கு அப்ப கோபம்…பயங்கர கோபம்…. ஆனா அந்த ஃபோட்டோஸ் வெளிய போயிடக் கூடாதுன்னு என்னை தேத்திகிட்டு மேரேஜுக்கு வந்தேன்…. கூடவே நீரா கதை மாதிரி போய் மாட்றனோனு ஒரு பயம்….” அதன் பின் நடந்த அணில் கதை வரை சொல்லி முடித்தவளை புரியாமல் பார்த்திருந்தான் யவ்வன்.

‘அவ்ளவு தூரம் வில்லன் ரேஞ்சுக்கு நினச்சுட்டு…அதெப்டி கல்யாணத்துக்கு முந்தின நாள் பார்த்த வீடியோவில் அவ்ளவு கேஷுவலா…சொல்லப் போனா ஒரு வகையில் சந்தோஷமா கூட இருந்தா…..? அதுக்கும் மேல பயம்னு வரவும்…அதான் கொலுசு சத்தம் கேட்டு பயந்தேன்னு சொல்றாளே…அப்ப  இவன்தான் அவளுக்கு பாதுக்காப்புன்னு இவன ஓடி வந்து பிடிச்சாளே?....மனசுக்குள்ள நெருக்கமும் நம்பிக்கையும் இல்லாம அதெல்லாம் அனிச்சையா நடக்குமா என்ன?......இவன் அணில்ட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு அவ நடந்துகிட்டது மட்டும்தான் கோபம்ன்ற மாதிரி இருக்கு…’ அவன் மனம் இப்படி யோசிக்க

Kadhal pinathu ulagu

“அப்பதான் நகைய கொண்டு போய் வீட்ல கொடுக்கனும்னு முடிவு செய்தேன்…” வினியின் பேச்சை மீண்டுமாய் கவனிக்க தொடங்கிய யவ்வன்.

“ஏன்?” என விளக்கம் கேட்டான்.

“அது…..நகையோ பணமோ என் அம்மா வீட்ல இருந்து….. எதையும் நீங்க எடுத்துறக் கூடாதுன்னுதான்…… அங்க போய் குடுத்துடனும்னு நினச்சேன்…….கூடவே உங்களை இரிடேட் பண்ணனும்னும் ஒரு எண்ணம்….” தயங்கி தயங்கினாலும் தான் நினைத்ததை சொன்னவள் பரிதாபமாய் அவன் முகம் பார்த்தாள். “சாரி “

அவளை இலகுவாக உணர வைக்கவென இப்பொழுது புன்னகைத்த யவ்வன்…… “இட்ஸ் ஓகே…..எப்ப விஷயம் புரிஞ்சுதுன்னு சொல்லு…” என அவளை பேச தூண்டினான்.

வீட்ல இருந்து பைகல் கிளம்புனும்னு சொன்னீங்களா…..அத்தைல இருந்து எல்லோரும் வேண்டாம்னு சொன்னப்ப கூட  நாம இருகரை பங்க்ஷனுக்கு போகனுனு நீங்க சொல்லவே இல்லை……அங்க பைக்ல மட்டும் தான் போக முடியும்ன்றப்ப அவங்க ஈசியாவே சரின்னு சொல்லிருப்பாங்க…..ஆனா நீங்க சொல்லலை…..

முதல்ல இங்க இருந்து பைக்ல கிளம்புறொம்னதும் சந்தோஷமா இருந்துது எனக்கு ஒரு விஷயத்துல…..பொதுவா நம்ம சைடு மேரேஜுக்கு அடுத்த நாள் நகை போடாம  எங்கயும் கிளம்பல்லாம் விட மாட்டாங்கன்னு தெரியும்….. பைக்னா எதாவது கேட்டாங்கன்னா கூட ….சேஃப்டி ரீசன்….நான் கைல தான் வச்சுறுக்கேன்….அங்க போய் பார்த்துகிறேன்னு எதாவது சொல்லி சமாளிச்சுடலாம்னு இருந்துது

ஏன்னா நான் கழுத்துல நகை போட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்க அதை கழட்டி வச்சுட்டு கிளம்புனா அம்மா கழுத்துல போட்றுந்த நகையவாது போட்டுட்டுப் போன்னுதான் சொல்வாங்க….. எனக்கு அத சமாளிக்றது கஷ்டம்…

ஆனா அம்மா வீட்ல வச்சு அப்பா அதட்டவும் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை…..பட் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்க….அதுவும் அவங்க எதை சொன்னா ஒத்துப்பாங்களோ அதை சொல்லி அவ்ளவு ஈசியா அவங்கள சம்மதிக்க வச்சுடீங்க… அதுவும் என்னமோ முன்னமே என்ன பேசனும்னு யோசிச்சு வச்சிறுந்த மாதிரி ஒரு ஃப்ளோ.….

அப்பவும் சும்மா ஏமாத்றீங்களோன்னு எனக்கு தோணிச்சுதான்……ஆனா கூடவே நான் ஜுவல்ஸை இங்க குடுக்கதான் வர்றேன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ…. என் அம்மா அப்பாவ  என்ன சொல்லி சம்மதிக்க வைக்கனும்னு நீங்க முன்னமே யோசிச்சுட்டு வந்துறுக்கீங்க…. எனக்கு ஹெல்ப் பண்றதுக்காகதான் பைக்ல வந்திருக்கீங்களோன்னும் ஒரு தாட்…. திரும்பி வர்றப்ப அதைத்தான் யோசிச்சுட்டே வந்தேன்….

ஒரு பக்கம் நீங்க நடிக்கீங்கன்னும் நினைக்கிறேன்….இன்னொரு பக்கம் எனக்காக ப்ளான் செய்து ஹெல்ப் பண்றீங்களோன்னும் எனக்கு தோணுது….. உங்கள இவ்ளவு க்ரிமினல்னு ஒரு பக்கம் நம்புறேன்…இன்னோரு பக்கம் நான் உங்களை கல்யாணமும் செய்துறுக்கேன்……ஏன் இப்டி முன்னுக்கு பின் முரணா இருக்கேன் நான்னு யோசிச்சேன்….

அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது…. அந்த ஃபோட்டோ விஷயத்துல நான் எடுத்ததும் உங்கள தப்பா நினைக்க காரணம் ஆண்கள் பத்தி எனக்கு பொதுவா உள்ள  அடிப்படை நம்பிக்கைஇன்மை….ஆனா அடிமனசுல ஒரு ஓரத்துல அது அப்டியா இருக்காதுன்னு ஒரு கீத்து மாதிரி நம்பிக்கை….ஃபோட்டோவ திரும்ப எடுத்து மெயில்ல என்ன சொல்லிருக்கீங்கன்னு முழுசா படிக்க பயம்…..எங்க நம்பிக்கை முழுசா செத்து போற அளவுக்கு மோசமான விஷயம் அதுல இருக்குமோன்னு ஒரு கலக்கம்…

இப்ப நினச்சா நான் எப்டி அப்டிலாம் இருந்திருகேன்னு தெரியலை…..உங்கள மேரேஜ் செய்யனும்னு மனசுல ஆசை… அதை தாங்காம நீரா விஷயத்துக்கு பிறகும் நீ இப்டி கல்யாணம் செய்ய நினைக்கிறியேன்னு என்ன கொத்திப் பிடுங்கிகிட்டு இருந்தது என் அனுபவ அறிவு….என் பயம்…. அது எல்லாத்தையும் அவன் என்ன மிரட்டுறான் அதான் கல்யாணம் செய்றேன்னு ஒரே காரணத்தை எனக்கு நானே சொல்லி சமாளிச்சுட்டு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.