(Reading time: 12 - 24 minutes)

12. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ஹாய்.. பிரண்ட்ஸ் .. போன எபிசொட்லே.. பிரயுவை அப்படி அனுப்பியதை அவள் பெற்றோர், அவள் மாமியார் ரெண்டு பேரும் விட்டு கொடுத்தது சரியானு சில பிரண்ட்ஸ் கேட்டிருந்தாங்க... இந்த எபிசொட் லே அத எக்ஸ்ப்ளைன் பண்ணியிருக்கேன்.. அது சரியாயிருக்கன்னு நீங்கதான் சொல்லணும்... அதனாலே இந்த எபிசொட் கல்யாணம் பற்றி சொல்ல முடியல.. நெக்ஸ்ட் எபிசொட் அத பார்க்கலாம்.. படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க..

தியோடு பேசிய பின் பிரயுவிற்கு அன்றைய மன வருத்தம் வெகுவாக குறைந்தது. அவன் பிரயுவின் திருமணத்திற்கு வருவதாக சொன்னது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் அவனை பார்ப்பது, அவனோடு அவன் லீவ் நாளில் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற கனவும், தன் தங்கைகளின் கல்யாணம் என்பதும் ரெட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ..

ப்ரயு தன் தங்கைகளின் நிச்சயதிற்காக இரண்டு, மூன்று நாட்கள் லீவ் எடுத்திருப்பதால், மறுநாள் காலை வீட்டில் இருந்தாள். அப்போது பிரயுவின் அம்மா, அப்பா இருவரும் வந்தனர். இருவர் முகத்திலும் சஞ்சலமும், வருத்தமுமே மேலோங்கி இருந்தது. முதல் நாள் தன் இரு பெண்களின் நிச்சயம் முடிந்த சந்தோஷம் இல்லை.

அவர்களை வரவேற்ற பிரயுவும், அவள் மாமியாரும் அவர்களுக்கு குடிக்க கொடுத்த பின் அவர்களும் அமர்ந்தனர்.

“அம்மாடி ... ப்ரயு .. நேற்று நடந்த விஷயத்திற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.. அந்த சம்பந்தியம்மா ஒரே பிடிவாதமாக இருக்கும் போது நான் உனக்கு சப்போர்ட் பண்ண முடியவில்லை. அதற்காக அப்படியே விட்டு விட்டோம் என்று எண்ணாதே.. இன்றைக்கு நானும் உன் அம்மாவும் சென்று அவர்களிடம் உனக்காக பேசுகிறோம்.

சம்பந்தியம்மா .. உங்களுக்கு மிகுந்த நன்றி.. அந்த இடத்தில் நீங்களும் கிளம்பியிருந்தால் சொந்தங்களின் நடுவில் மிக பெரிய பிரச்சினை ஆயிருக்கும். நீங்கள் எங்களை விட்டு கொடுக்காது நடந்து கொண்டீர்கள்.. “

“எனக்கு உங்கள் நிலைமை புரிந்தது சம்பந்தி.. அதனால் தான் என் மருமகளை பற்றி பேசுகிறார்கள் என்ற போதும், அவளை மட்டும் அனுப்பி விட்டு நான் இருந்தேன்.. நானும் கிளம்பியிருந்தால் பவித்ராவும், தாரிணியும் அந்த நிச்சயத்தை மறுத்திருப்பார்கள்.. அதன் பின் வேறு எப்படி அவர்களின் திருமணம் நடந்தாலும் வாழ்க்கை பூராவும், அந்த இரு பெண்களை இந்த நிச்சயம் நின்றதை வைத்து யாரவது ஏளனம் செய்து கொண்டிருப்பார்கள். அதை தடுக்கத்தான் நானும் அங்கே இருந்தேன்..”

“எங்களுக்கும் புரிந்தது அம்மா. சொல்ல போனால் ப்ரயு சென்ற உறுத்தல் இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து நிச்சயம் நடத்தியது நீங்கள் கொடுத்த தைரியத்தில்தான்.”

அப்போது ப்ரயு, “நாம் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமா அப்பா? நானும் சேர்ந்துதான் உங்களை அவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன்.. ஆனால் அவர்களின் கண்டிப்பையும், கறாரையும் பார்த்தல் பவி, தாரிணி வாழ்க்கை பற்றி பயமாக இருக்கிறது.”

“எங்களுக்கும் சந்தேகமாக இருந்தது.. சம்பந்தி.”

“நாங்களும் இதை பற்றி யோசித்துதான் இன்றைக்கு அவர்களிடம் நேரில் பேச முடிவு செய்திருக்கிறோம்.. இதை நாம் முன்னாடியே செய்திருக்க வேண்டும்.. ஆனால் அன்றைக்கு வேறு மாதிரி இருவர் திருமணமும் ஒன்றாக நடக்க வேண்டும் என்ற பிரச்சினை பற்றி பேசியதால் அவர்களின் இந்த எண்ணம் எங்களுக்கு தெரியவில்லை. அதனால் இன்று போய் பேசலாம் என்று எண்ணித்தான், இங்கே வந்து விட்டு அங்கே செல்ல போகிறோம். “

அப்போது பிரயுவின் மாமியார் “சம்பந்தி நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் பையன் கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான் தான். ஆனால் அவன் உள்ளூரில் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால் முன்னே பின்னே ஆகலாம். அப்போதும் இவர்கள் பிரச்சினை செய்தால் நானும் வர மாட்டேன். இப்போ அங்கே போகும் போது அவர்களிடம் தெளிவாக சொல்லி விடுங்கள். இதற்கு மேலும் நேற்று பேசியது போல் பேச வேண்டாம். “

இப்போது பிரயுவின் பெற்றோர் திகைத்தனர். அவர்களுக்கு இது நியாமாக தோன்றினாலும் அந்த அம்மாவை எப்படி convince செய்ய போகிறோம். இவர்களை எப்படி handle செய்ய போகிறோம் என்று முழித்தனர். இருந்தாலும் அதை வெளிக் காட்டமால் அவர்களிடம் விடை பெற்று சென்றனர்.

பிரயுவிற்கு அவள் மாமியார் கூறியது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவள் வெளிக் காட்டாமல் தன் வேலைககளை பார்த்தாள். 

பிரயுவின் பெற்றோர் தங்கள் வருங்கால சம்பந்தி வீட்டிற்கு சென்றனர். அவர்களை வரவேற்ற அந்த அம்மா, என்ன விஷயம் என்று கேட்க, பிரயுவின் அம்மா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.