(Reading time: 20 - 39 minutes)

34. கிருஷ்ண சகி - மீரா ராம்

கத்தினை அங்கு பார்த்ததும், ஒரு நொடி கொஞ்சம் தடுமாறியவன், பின், ஒரு முடிவுடன் அவனிடம் பேச தயாரானான்…

“என்ன விஜய்… இங்க என்ன பண்ணுறீங்க?...”

“அது ஒன்னுமில்லை… சும்மா தான் மகத்…”

krishna saki

“அப்படியா?... பட் எனக்கு அப்படி தெரியலையே விஜய்…”

“இல்ல.. மகத்… நான்…”

“சொல்லுங்க… நீங்க?...”

“நான் வந்து… அது…”

“நீங்க…?... தைரியமா சொல்லுங்க….” என மகத் இருகைகட்டிக்கொண்டு அவனிடம் கேள்வி கேட்க,

ஒரு சில நொடிகள் சுவாசம் வாங்க எடுத்துக்கொண்டு, “நான் பவித்ராவை கல்யாணம் செய்துக்க விரும்புறேன் மகத்… உங்ககிட்ட தான் முதலில் இதுபற்றி நான் பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன்… ஆனா அதுக்குள்ள அவகிட்ட இன்னைக்கு…. சாரி மகத்… உங்க முடிவை நீங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க… என்னைப் பத்தி விசாரிக்கணும், தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா கூட எனக்கு ஓகே தான்… உங்களுக்கு எப்போ திருப்தி வருதுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அப்போ எங்கிட்ட சொல்லுங்க மகத்… இப்போ நான் நேரா என் வீட்டுக்கு தான் போறேன்… அம்மாகிட்டேயும் அப்பாகிட்டேயும் பேசிடுறேன்… அப்பா மறுத்தாலும், அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு… அது மட்டும் இல்லாம அம்மாவுக்கும் பவித்ராவை பிடிச்சிருக்கு… அதனால அம்மா கண்டிப்பா மறுப்பு சொல்லமாட்டாங்க… நான் பவித்ராகிட்ட இப்போ நடந்துகிட்ட விதம் தப்புன்னு நீங்க நினைச்சா மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன் மகத்… மன்…………..” என சொல்லி முடிப்பதற்குள்,

“டேய்… டேய்… போதும்டா… மச்சான் போதும்…” என்றபடி பிரபு வந்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மனோவின் "பூ மகளின் தேடல்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அவனது சிரிப்பு, விஜய்யை கலவரப்படுத்த,

“விஜய்… இன்னைக்கு நீங்க கண்ணாடியில பவித்ராவை பார்த்தது எனக்கு தெரியும்… பிரபுவும் சொன்னான், உங்களுக்கு பவித்ராவை பிடிச்சிருக்குன்னு… கண்டிப்பா எங்க பவித்ராவை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…” என்றவன், காவேரியை அழைக்க

அவரும் வந்து தனக்கு முழு சம்மதம் என்றார்…

அதிர்ச்சியில் உறைந்தவனாய் நின்ற விஜய்யினை, அசைத்து நனவுலகுக்கு கொண்டு வந்தான் பிரபு…

“என்னடா அதுக்குள்ள ட்ரீம்ஸா?...” என கிண்டல் செய்த பிரபுவிடம்,

“எப்படி மச்சான்?... இதெல்லாம்?....” எனக் கேட்டான் விஜய்…

“எங்க எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம்டா… பவித்ராவை உன் கையில பிடிச்சு கொடுக்குறதுக்கு… எங்க எல்லாருக்கும் சம்மதம் தான்…” என மனமார சொன்னான் பிரபு…

“ஆமா விஜய்… நிஜமாவே நீங்க இப்போ பேச வேண்டியது உங்க அம்மா, அப்பாகிட்ட தான்… முதலில் அவங்க கிட்ட பேசிட்டு வாங்க… அதுக்குப்பிறகு பவித்ராகிட்ட சம்மதம் கேளுங்க… என்னதான் நாங்க சொன்னாலும் உங்களையும் அவ மனசுக்கு பிடிக்கணும்… நான் சொல்லுறது சரிதானே?...” என்று கேட்ட மகத்திடம்

“ரொம்ப தேங்க்ஸ் மகத்… எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை… நீங்க இவ்வளவு சீக்கிரம் சம்மதம் சொல்லுவீங்கன்னு நான் நினைச்சேப் பார்க்கலை… அதும் ஜித் விஷயம் தெரிஞ்ச பின்னும் நீங்க எல்லாரும், எனக்கு பவித்ராவை திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னது நிஜமாவே பிரமிப்பா இருக்கு…” என்றான் விஜய்…

“இதுல பிரமிப்புக்கு என்ன இருக்குப்பா… ஜித் உன் அண்ணன் தான்… ஆனா அவர் போல நீ கிடையாது… உன் நல்ல மனசு, பேச்சு, சுபாவம், எல்லாமே எங்களுக்கு பிடிச்சிருக்கு… கண்டிப்பா பவித்ராவிற்கும் பிடிக்கும்… அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சா அதுவே போதும் எங்களுக்கு…” என விஜய்யிடம் சொல்லிவிட்டு, “அப்படித்தானே ராஜா?...” என்று மகத்திடம் அவர் கேட்க

“அதை விட வேற என்ன வேணும் மகர் நமக்கு… நம்ம பவித்ராவிற்கு கண்டிப்பா விஜய்யை விட பொருத்தமான மாப்பிள்ளை வேற எங்க தேடினாலும் கிடைக்காது… விஜய் தான் பெஸ்ட் & பெர்ஃபெக்ட் சாய்ஸ் பவித்ராவிற்கு…” என்றான் மகத் நிறைவாக….

“தேங்க்ஸ்…” என காவேரியிடமும், மகத்திடமும் சொல்லியவன், பிரபுவை கட்டி அணைத்துக்கொண்டான்….

விஜய் இல்லத்தில்,

“அம்மா….” என குரல் கொடுத்துக்கொண்டே சென்றவனின் காதில், கேசவனின் கெஞ்சல் காதில் விழுந்தது…

“எதுக்குடி இப்படி பிடிவாதம் பிடிக்குற?... நீ பேசலைன்னா நேக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு… பேசிடுடீ வைஜூ… ப்ளீஸ்…..”

“……………………………………..”

“நான் உங்கிட்ட நடந்துகிட்ட முறை தப்பு தான்… அதுக்கு என்னை நீ திட்டு, சண்டை போடு… ஆனா இப்படி பேசாம இருந்து கொல்லாத...”

“………………………………………..”

“உன்னை அடிச்சதுக்கு உங்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்குறேன்… மன்னிச்சிடு… எங்கிட்ட பேசு…”

“…………………………………………”

“விஜய் அன்னைக்கு சொன்ன வார்த்தை என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு.... நானும் என் அம்மாவும் வேற வீடு பார்த்து போயிடுறோம்னு அவன் சொன்னதுல இருந்து மனசு தவிக்குதுடீ… அவனுக்கு உதாரணமா நான் இருக்குறேன்னு சொன்னான்… ஆனா அதே நேரத்துல இப்போ அவனுக்கு பிடிக்காத மனுஷனாகவும், அப்பாவாகவும் நான் இருக்குறேன்… அதை நான் மாத்திக்கணும்னு நினைக்கிறேன்…”

“………………………….”

“ஜித் விஷயத்திலேயும், நான் செஞ்சது பெரிய தப்பு தான்… அது உன் அண்ணங்க மேல இருந்த கோபத்துல நான் அப்படி கண்ணு மண்ணு தெரியாம தவறுதலா நடந்துகிட்டேன்… ஜித் பண்ணின தவறான செயலை கண்டிக்காம, துருவனை நான் ஒதுக்கி வச்சது என்னோட மடத்தனம் தான்… அதை நீ சொல்லிக்காட்டினப்போ எல்லாம் நான் கண்டுக்கலை… ஆனா நீ பேசாம இருந்த போது, விஜய் வருத்தப்பட்டு பேசினபோது தான் எனக்குள்ள அது நாள் வரை இருந்த வன்மத்தை விலக்கி வச்சி நான் யோசிச்சேன்… அப்ப தான் புரிஞ்சது நான் செஞ்சிட்டு இருக்குற தப்பு…” என வைஜெயந்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கேசவன் பேச, அழுகையோடு கணவரை பார்த்தார் அவர்…

“அழாத வைஜூ… ப்ளீஸ்… நான் உன்னை காதலிச்சு கைப்பிடிச்சேன்… ஆனா ஜித் வாழ்க்கைப் பிரச்சினையில, எல்லாத்தையும் மறந்து உன்னையும் அடிச்சிட்டேன்… ஆனா நீ பேசாம இருந்தப்போ தான் தெரிஞ்சது உன் மேல எனக்கிருந்த காதல்…” என்ற கேசவனும் அழ, வைஜெயந்தி அவரின் கண்களை துடைத்துவிட்டு,

“நீங்க நிஜமாவே மாறிட்டீங்களா?... இல்ல என்னை பேச வைக்குறதுக்கு நடிக்கிறீங்களா?...” எனக் கேட்க, உடைந்தே போனார் கேசவன்…

மனைவியின் இருகைகளையும் பிடித்து நெற்றியில் வைத்துக்கொண்டவர், “நான் செஞ்ச தப்போட அளவு இப்போ எனக்கு தெரியுது… புரியுது… என்னை மன்னிச்சிடுன்னு வார்த்தையில நான் சொன்னா நீ நம்புவியான்னு எனக்கு தெரியல… அதனால அதை செயல்படுத்தணும்னு நான் முடிவு பண்ணிட்டேன்… வா…” என மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியில் கேசவன் வர, அங்கே விஜய் அப்போது தான் வருவது போல் காட்டிக்கொள்ள, அவனையும், வா என்றழைத்துக்கொண்டு நேரே ருணதியின் வீட்டிற்குச் சென்றார் கேசவன்….

கேசவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் உறைந்து நின்ற கோகிலவாணியிடம், மனைவியுடன் சேர்ந்து அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, கோகிலவாணிக்கு மயக்கம் வராத குறை தான்…

ருணதி……… என்ற கோகிலவாணியின் அழைப்பைக் கேட்டு, ஓடிவந்தவள்,

“கோகி… எதுக்கு இப்படி கத்துற?... நான் இங்க தான இருக்குறேன்….” என அவரை திட்ட,

“அவங்களை திட்டாதம்மா… என்னால தான் அவங்க அப்படி சந்தோசத்துல உன்னை சத்தமா கூப்பிட்டாங்க…” என்ற கேசவனின் மீது வெறுப்பு கடல் அளவு இருந்த போதும், வீடு தேடி வந்தவரை “வாங்க…” என்றாள் அமைதியாக…

வாங்க … என்ற அவளின் அந்த அழைப்பு அவரின் மனதில் சட்டென்று பதிய, அவளிடம் சென்றவர், “என்னை மன்னிச்சிடும்மா… என் பேரனோட நீ நம்ம வீட்டுக்கு வரணும்…. வாம்மா போகலாம்…” என்றதும், விழி விரிய அவரைப் பார்த்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.