(Reading time: 12 - 23 minutes)

17. என் மனதை தொட்டு போனவளே - VJ G

டுலேயே ஒரு ஊரில் இறங்கி விட்டாள், அது என்ன ஊரு என்று கூட தெரியாது கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருந்தாள் இன்னொரு பஸ் வந்தது அதில் ஏறினார்கள், அந்த பஸ் போன ஊரில் இறங்கினார்கள், அங்கு போர்டை பார்த்தால் பெங்களுரு என்று எழுதியிருந்தது, அங்கு நடந்து ஒரு வீட்டில் கதவை தட்டினார்கள், அந்த வீட்டு அம்மா கதவை திறந்தாள், கன்னடத்தில் ஏதோ கேட்டாள், இவர்களுக்குத் தெரியவில்லை, உள்ளிருந்து யாரோ மீனு என்று கூப்பிட,' நீங்கள் தமிழா' என்று கேட்டாள் கவிதா

'ஆமாம்' என்றாள்

'என் பெண்ணிற்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் பாத்ரூம் உபயோகப் படுத்தனும், இங்கு யாரும் தெரியாது, கொஞ்சம் உதவமுடியுமா,' என்று கேட்டாள்

en manathai thottu ponavale

'உள்ளே வாங்க, அது என்ன ஒரே அடி பாவம், என்று கேட்டாள் அந்த அம்மாள்

'அது ஒண்ணுமில்லை கீழே விழுந்து விட்டாள், வயது வந்த பெண்ணை வைத்துக் கொண்டு ஹோட்டலில் போய் இருக்க முடியாது, பிழைக்க வந்திருக்கிறோம், ஏதாவது வாடகை வீடு கிடைக்குமா குறைந்த வாடகைதான் கொடுக்க முடியும்,' என்றாள்

'நீங்க உள்ளே வாங்க, முதல்ல நீங்க குளிங்க, நான் காபி போடறேன், சூடா அதைக் குடிங்க பிறகு பேசலாம்' என்றாள் அந்த பெண்மணி

அவள் தன் பெண் சித்ராவை அழைத்துக்  கொண்டு 'பாத்ரூம் போய் நான் கூடவே நிற்கிறேன், போயிட்டு வா, முகம் அலம்பிக்கோ' என்று சொன்னாள்

'அவள் நீ வெளியே இரும்மா,' என்றாள்

அவர்கள் வெளியே வந்ததும், காபி வந்தது குடித்தார்கள், பிறகு அந்த மீனாக்ஷி அம்மா சொன்னாள், 'எனக்கு இங்கு ஒரு டிபன் கடை இருக்கு, எனக்கு வயதான அம்மா வேறு இருக்கா, தனியா எல்லாம் பார்த்துக்க கஷ்டமாகத்தான் இருக்கு,நீங்களும் உதவினா இங்கேயே நீங்க இரண்டு பேரும் தங்கிக்கலாம், வேலைக்கு உண்டான பணத்தையும் கொடுக்கறேன்,' என்றாள் அந்த அம்மாள்

'சரி' என்று ஒத்துக் கொண்டாள்

'எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்'என்று கேட்டாள் கவிதா, சித்ராவின் அம்மா

என்ன என்பதுபோல் பார்த்தாள் மீனாக்ஷி அம்மா

'ஒன்றுமில்லை, எனக்கும் என் பெண்ணிற்கும் மாத்து துணி இல்லை, வரும் போது எங்க பாக்கை யாரோ எடுத்து போயிட்டாங்க, அதனாலே நீங்க போய் வாங்கி தரமுடியுமா எங்களுக்கு பாஷை தெரியாது நான் அடுப்படியில் பார்த்துக்கறேன்,' என்று கேட்டாள் சித்ராவின் அம்மா

'அதுக்கென்ன போய் வாங்கி வரேன், உங்கப் பெண் அவள் சின்னப் பெண் நான் வாங்கினால் எப்படியிருக்குமோ என்னவோ,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

'இல்லை இப்போதைக்கு அவள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவா, நீங்கள் வாங்கி வாங்க, அவளால் இப்போ நடக்க முடியாது யாராவது டாக்டர் கிடைப்பாங்களா, அவளுக்கு மருந்து வேண்டும்,' என்றார் கவிதா

'இருக்காங்க, பக்கத்திலேயே என் அம்மாவுக்காக வரவழைப்பேன் நான் அவங்க கிட்டே சொல்லிவிட்டு போகிறேன், அடுப்பிலே முக்கல் வாசியும் செய்துட்டேன் கொஞ்சம் பார்த்துக்குங்க,' என்று அவள் ரூமிற்கு போனாள், கவிதா தன்பாகிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாள், மீனாட்சியிடம் ,

சித்ராவுக்கு உடம்பு வலி தாங்கவில்லை, அம்மா, அம்மா என்று அனத்தினாள், கவிதா சமையல் உள்ளிருந்து இட்லி கொண்டுவந்து 'சாப்பிடம்மா,' என்றாள், 'இல்லை வேண்டாம்,’ என்றாள் சித்ரா, ஆனால் அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள், அவள் அம்மா

எல்லா வேலையும் ரெடியாகி விட்டாது டிபன் கடை வாசலிலேயே இருந்தது, 'நான் போய் கடையைக் கவனிக்கிறேன் நீ கொஞ்ச நேரம் தூங்கு,' என்று கூறி கடைக்கு சென்றாள், அவள் அம்மா

சுரேந்தர் எல்லாத்தையும் தூக்கி போட்டு வேலையாளுங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தான், 'எப்படி அவர்கள் ஓடி போனார்கள், ஊர் முழுவதும் தேடுங்கள், பஸ் ஸ்டாண்டில், ட்ரைன் ஸ்டேஷன், எல்லாம் ஆள் அனுப்புங்கள்,' என்று கத்திக் கொண்டிருந்தான், 'மூன்று பேரை சென்னைக்கு அனுப்புங்கள்,' என்று கத்திக் கொண்டிருந்தான், அவன் அம்மா 'கத்தாதே, அவள் எங்கே போயிட போறாள், எப்படி இருந்தாலும் நம் ஆளுங்க அவளைத் தேடி பிடிப்பாங்க, வா சாப்பிடு,' என்று கூப்பிட்டாள்

அவன், கோவத்தில் அவன் அம்மாவை உலுக்கி 'அவள், நான் வேண்டாமென்று ஓடி விட்டாள், அந்த அத்தை கிழவி எனக்கு அவ்வளவு வாக்கு கொடுத்து எப்படி கூட்டிக்கொண்டு ஓடிவிட்டாள், என்னால் எப்படி சாப்பிட முடியும்,' என்று கத்தி விட்டு வெளியே சென்று விட்டான்

அவன் ஆட்கள் எல்லா இடத்திலும் தேடித் தேடி களைத்து விட்டார்கள் ஒரு வாரம் ஆகியும், அவர்கள் எங்கேயும் இல்லை, சென்னையில் இல்லை, அவள் சுத்திக் கொண்டிருந்த ஆள் வீட்டையும் கண் காணித்தார்கள் ஆட்கள் அங்கேயும் அவள் போகவில்லை, அந்த ஆள் மட்டும்தான் வெளியே போகிறான், அவனும் கொஞ்சம் சோகத்துடன்தான் இருந்தான், அதனால் அந்தப் பெண் இங்கேயும் வரவில்லை, என்று அவர்கள் கிளம்பி போய்விட்டார்கள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.