(Reading time: 10 - 20 minutes)

32. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

(னக்கு தெரிஞ்சு மனுஷன் வாழ்க்கையில காதலை விட கோபம் ஒரு படி அதிக அழகு தானுங்க..! யாரு பேசுறது பார்க்குறிங்களா? நாந்தான் புவி பேசுறேன்.. ரொம்ப நாளாய் ஆச்சுல, கதைக்கு நடுவில் நம்ம மைண்ட் வாய்ஸ் பேசி..அதான்  ஓடோடி வந்துட்டேன். ஏதோசொல்ல வந்தேனே எதுல விட்டேன்?? ஆங், காதலைவிட கோபம் ஒருபடி அதிக அழகுன்னு சொன்னேன்.

எப்படின்னு கேட்குறிங்களா? நமக்கு பிடிக்காதவங்க “போய் தொல” அப்படின்னு சொன்னால்கூட கொஞ்சம் கூட அசராமல் சரிதான் போன்னு விட்டுருவோம்..ஆனா நமக்கு பிடிச்சவங்க “போ”னு விளையாட்டுக்கு சொன்னா கூட மனசு வாடி போயிரும்..இயலாமையில் கோபம் கூட வரும்..

எங்க பார்த்தாலும் ஊழல்,லஞ்சம் பொய் பித்தலாட்டாம் இப்படி நடக்கும்போது ஒரு நியாயமான கோபம் மின்னல் வேகத்துல வந்துட்டு போயிரும்..ஆனா நமக்கு பிடிச்சவங்க சின்னதா ஒரு பொய்ய சொல்லிட்டா, அவங்க காலில் விழுர வரைக்கும் நமது கோபம் போகவே போகாது.. இது கோபத்தின் முதல் அழகு ..

ninaithale Inikkum

அதேபோல கோபத்துல, யார் பெத்த புள்ளையையோ கிழி கிழின்னு கிழிப்போம்..எரிச்சலைத் தவிர எந்த உணார்வும் வராது நமக்கு.. ஆனா நமக்கு ரொம்ப பிடிச்சவங்களைகொஞ்சம் திட்டிட்டோம்னா, அவங்களை விட நாமதான் அதிகமாய் ஃபீல் பண்ணுவோம்..இது கோபத்தின் இரண்டாம் அழகு..

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியில தான் சாவுன்னு சொல்லுற மாதிரி கோபப்பட்டவனின் மனசு உடனே நிம்மதியை அடைந்து விட்டதாய் சரித்திரமே இருக்காது.. கோபத்தை தந்தவனையும் அதை பெற்றவனையும் கோபம் விட்டே வைக்காது..இது மூனாவது அழகு..)

இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் இருந்தாள் தீப்தி.. அவள் எதிரில் நிற்பவன் யார் ? அவளின் ப்ராசந்த்..அவளுக்குள் காதலை விதைத்தவன்.. காதலை உணர வைத்தன், அன்பிற்கும் வசதிக்கும் சம்பந்தமே இல்லை என்று உணர்த்தியவன்…அவனை கோபிப்பது அவளின் பாதியை பிரித்து எடுப்பது போல வலித்தது..மயக்கமருந்து இல்லாமல்  அருவை சிகிச்சை செய்வது போல,துடிக்க வைத்தது. அவன் முன்னிலையில் அவள் சுக்குநூறாய்த்தான் போனாள். அவள் இதயத்தில்ஏதோஒன்று சுரீர் என்று தைத்தது..

ஆனாலும் பெண் அல்லவா ?மனோதிடம் என்பது,இயல்பிலேயே வரமாய் பெற்றபிறவி ஆயிற்றே!கொஞ்சமும் கலக்கத்தை காட்டாமல் பேச்சினை தொடங்கினாள்..

 தான் “தீரஜ்” என்று அழைத்ததும் நடுங்கி போய்நின்றவனை பார்த்து சிரித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ என்ன தீரஜ், நான் உங்க வீட்டுக்குள்ள வரலாம்தானே?அம்மா இருக்காங்களா தீரஜ் ??”

அவன் பெயருக்கு மட்டும் சற்று அதிகமாகவே அழுத்தம் கொடுத்தாள்.

அவள் பேச்சினை கண்டுக்கொண்டவனுக்கு மனதில் பாரம் கூடியது..தான் மாட்டிக்கொண்டோம் என்ற எண்ணத்தை விட, “ என்னவள் உண்மையை அறிந்து கொண்டு கலங்கி நிற்கின்றாளா?” என்ற கேள்வி அவனை பெரிதும் வாட்டியது.. எதுவும் பேசாமலவள் விழிகளுக்குள் வலியை தேடினான்.. தன்னவளின் காயத்தை போக்குவது தன் கடமை என்று எண்ணினான்..

அவனுக்கு சளைக்காமல் அவனின் பார்வையை எதிர்கொண்டாள் தீப்தி…மறந்தும் கூட தனது வலியை விழிகளில் தேக்கி வைக்கவில்லை அவள்.. கல்லூரியில் அனைவரின் பார்வையிலும் பவனி வரும் திமிர் பிடித்த தீப்தியாகவே தோற்றம் அளித்தாள் அவள்.

“ நீங்க என்னை எதிர்ப்பார்க்கவில்லயோ தீரஜ்? ரொம்ப அதிர்ச்சியில் இருக்கீங்கன்னுன் நினைக்கிறேன்”

“தீபா…..”

“ மன்னிக்கனும்.. என்னை அப்படி கூப்பிட வேணாம்.. என் பெயர் தீப்தி..! எல்லாருக்கும் நான் தீப்தி மட்டும் தான்.. உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி என்னை அழைக்க வேணாம்..அதுவும் ஒவ்வொருதர்கிட்ட , ஒவ்வோர் பெயர்சொல்லி பழகுற குணம் எனக்கில்லை” என்றாள் அவள்.

கள்ளிச்செடியை கொத்தாய் பிடுங்கி இதயக்கூட்டுக்குள் அடித்தது போல விவரிக்க முடியாத வலி அவனுக்குள் பரவியது..அவள் தன்னை விட்டு விலகுகிறாள்  என்பதை உணர்ந்து நின்றுகொண்டிருந்தான் தீரஜ்..உருவம் மட்டும் அங்கு நிற்க அவனின் மூளையோ மறுத்துவிட்டது..

“ எனக்கு கால்வலிக்கிறது.இப்படித்தான் வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பிங்களா? “ என்றால் தீப்தி..சட்டென சுதாரித்தவன்,சுற்றியும் முற்றியும் பார்த்தான்..அவன் அன்னை அங்கு இல்லை என்றவுடன்

“ எங்கூட வா” என்றபடி அவள்கையைப்பிடித்து இழுத்துகொண்டு தோட்டத்திற்கு போனான்..

“ விடுங்கள் தீரஜ்…

என்ன பண்ணுறிங்க?

விடுங்க

தீரஜ்…

ப்ரசாந்த் விடு !!!!!”என்று உச்சஸ்தாயியில் அவள்கத்தவும் கையை விடுவித்து அவள்முன் மண்டியிட்டான் தீரஜ் ப்ரசாந்த்..

“தீபா”

“என்னை அப்படி கூப்பிட வேணாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.