(Reading time: 18 - 35 minutes)

06. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

துவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் இதுவும் நல்லதற்கு தான் என்று தோன்றியது. ஊரிலிருந்து வருவதற்கு முன்பே மதியை சந்தித்து அவனிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணமடைந்து விட அதற்க்கான  வேலையில் மகளை சரிவர கவனிக்க இயலாது என்று மங்களத்திற்கு தோன்றியதால் திட்டமிட்டதற்கு முன்பே மதுவும் திவ்யாவும் பெங்களுரை வந்தடைந்தனர். மதியை சந்திக்கும் சந்தர்ப்பமும் மதுவிற்கு இல்லாமல் போயது.

ஆனால் இந்த வாரமே ஊருக்கு சென்று எப்படியேனும் மதியிடம் தன்னுடைய மனதினை வெளிப்படுத்திட வேண்டும் என்று திட்டமிட்டவள், இதற்க்கு நிச்சயம் யாருடைய துணையேனும் தேவைப்படும், யாரை உதவி கேட்கலாம் என்று எண்ணும்போதே சரணுடைய முகம் தான் நினைவில் வந்தது. ரகுவும் சரி சரணும் சரி அவளிடம் மிக அதிக அன்பை உடையவர்கள். ஆனால் ரகு எத்தனை விளையாட்டுதனத்துடன் இருப்பானோ அத்தனை முன்கோபியும்  கூட.அதனால் சரண் தான் எப்பொழுதும் மதுவின் பெஸ்ட் ப்ரெண்ட் அண்ட் பெஸ்ட் கைட், பிலாசபர் எல்லாம். சரணிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று அவள் எண்ணிய அடுத்த நொடி அவளின் விரல்கள் சரணை அழைத்து விட்டிருந்தது அவளுடைய மொபைலில்.

"ஹலோ அண்ணா ப்ரீயா இருக்கிங்களா"-மது

"என் மதுவை பொருத்தவரை சரண் எப்பொழுதும் ப்ரீ தான். சொல்லு என்ன விஷயம். "-சரண்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் அதுக்கும் முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீ என்னை தப்பா நெனைக்க கூடாது. என்னை திட்ட கூடாது." -மது

"உன்னை நான் என்னைக்காவது திட்டியிருக்கனா. திடீர்னு என்ன லூசு மாதிரி பேசற. நீ ட்விஸ்ட் வெக்காம விஷயத்துக்கு வாடா " -சரண்

"அண்ணா உனக்கு மதிவாணன் தெரியுமில்லையா " -மது

மனதிற்குள் சிரித்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “எந்த மதிவாணன்?" என்று சிறிது நேரம் யோசிப்பதை போல அமைதியாக இருந்தவன்  " ஹ்ம்ம் அப்பாவுடைய ப்ரெண்ட் கந்தசாமி அங்கிளோட பையன் தான. தெரியுமேடா. அவருக்கென்ன "-சரண்

"அண்ணா அது வந்து...அது என்னன்னா..."-மது

"அதான் வந்துட்டியே...சொல்லு " -சரண்

"நான் அவரை லவ் பண்றேன்னா. அவரும் தான். கிட்டத்தட்ட 7 வருஷமா என்னை லவ் பண்றாரு. "என்று தொடங்கி அந்த கதையையும் கூறி முடித்தவள் சரணின் பதிலை எதிர்நோக்கி படபடப்போடு காத்திருந்தாள்.

மதியின் மூலம் அன்று அந்த பிறந்த நாள் விழாவில் நடந்தவைகளை அறிந்த சரணும் மதுவை அவள் அங்கே இருந்த அந்த 2 நாட்களும் தொடர்ந்து கண்காணித்ததில், எல்லா விஷயங்களையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் தன் தங்கை இதை குறித்து எதுவும் கூறாததும் ஆனால் அதே சமயம் அவளின் முகத்தில் எந்தவிதமான குழப்பமும் தெரியாமல் முன்னிருந்ததை காட்டிலும் தெளிவுடனும் ஒரு ஜொலிப்புடனும் அவள் அங்கே சுற்றி வந்ததை கண்டவனுக்கு அவளின் மனம் கிட்டத்தட்ட புரிந்தாலும் எதையும் ஒரு யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டாம் என்று எண்ணி மதியிடம் சிறிது காத்திருக்க சொன்னவன் தானும் தன் தங்கையின் முடிவிற்காக காத்திருந்தான். அவள் விரைவில் தன் முடிவை அறிவிப்பாள் என்று எண்ணினான் தான். ஆனால் ஊரிலிருந்து வந்த அடுத்த நாளே தன்னை விளித்து நடந்தவைகளை சொன்ன , தன் தங்கையை எண்ணி மகிழ்ந்தான்.

தன் சகோதரனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவனுக்கு இதில் விருப்பமில்லையோ என்று எண்ணியவள்

"அண்ணா உனக்கு இது தப்பா தெரிஞ்சா நாம இதை இங்கயே நிறுத்திடுவோம்.நானும் என் மனசுல இருந்து அவருடைய நினைவுகளை அழிக்க முயல்கிறேன். ஆனா என்னால அது முடியுமான்னு தெரியல. பட் நிச்சயம் பிடிவாதம் பிடிச்சு உங்களை வருத்தபட விடமாட்டேன். " என்றாள்

"ஹெய் அதெல்லாம் இல்லை மதும்மா அதுக்குள்ள என்னென்னமோ பேசிட்டியே..நீ இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்பறம் நான் உண்மையை சொல்லலைனா அது தப்பு." என்று கூறியவன் தாங்கள் இந்த திருமணத்திற்கு மதியின் வீட்டில் பேசியதில் இருந்து அவளை காண்பதற்காகவே அன்று கோவிலுக்கு எல்லோரும் சென்றதும் அவளுக்கான மதியின் தவிப்பையும் அதற்காக மதுவை பொய் சொல்லி பிறந்தநாளை இங்கே கொண்டாட வைத்தது வரை எல்லாம் சொல்லி முடிக்கையில், மதுவின் வாய்க்குள் கொசு நுழைந்தாலும் தெரியாத அளவுக்கு ஆச்சர்யத்தில் இருந்தாள் அவள்.

"என்னம்மா சத்தமே இல்லை. வாயை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு கொசு போயிடும் " என்று சரண் கூறிய பின் தான் சுயநினைவு வந்தவளாய், "ஓஹ்ஹ்ஹோ எனக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு வேலை பண்ணிருக்கிங்களா? உங்க ரெண்டு போரையும் அப்பறம் கவனிச்சிக்கிறேன். ஆனா அண்ணா எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் அப்பறம் ஒரு ப்ராமிஸ் பண்ணனும். "-மது

"சொல்லுங்க மேடம். ஐ அம் ஆல்வேஸ் அட் யூவர் சர்வீஸ் " –சரண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.