(Reading time: 12 - 24 minutes)

04. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

hey sandakkaara

ரிமையற்ற ஒன்றை, உடைமையாக்கி கொள்ள உள்ளம் விழைகிறதே!

வலிகள் உணர்கிறேன், இருந்தும் தொடர்கிறேன்…

மைதியான அறையை தெறிக்கவிட்டது மகதியின் குரல்.

" என்னால தாங்க முடியலையே…!!! வர ஆத்திரத்துக்கு நான்.. " அறையைச் சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டவள்,

" இல்ல, இங்க எதுவும் பெர்பெக்ட் சைஸ் ப்ராபர்டி இல்ல, அவ தலைல தூக்கி போட. சே.. நான் தெரியாம தான் கேக்குறேன், அவளுக்கு என்னைப் பார்த்தா  இப்டி இருக்கா ? இல்ல அப்டி இருக்கா?  கொக்கமக்கா "

" யாரக்கா இப்படி திட்டுற? " அனன்யா பாவமாக கேட்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

" யாரா!! அதான்... உன் அரும அத்தான் தோஸ்த், நிஷா. அவள தான். அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ட இப்படி பேசுவா? "

இதுதான் தொடக்கம். அதற்கு மேல் "அப்படி என்ன சொன்னா, அந்த நிஷா?" என்று அனன்யா ஆல் டிரக்ஷன்ல இருந்து, அத்தனை அபிநயத்திலும் கேட்டது என்னவோ மகி காதுக்கு கேட்டதாகவே தெரியவில்லை. காற்றுப் போன பலூன் ஆகி போனால் அனன்யா.

வானத்துக்கும் பூமிக்கும் தை தை என குதித்த மகியின் எனர்ஜி மெல்ல குறைய, டையர்ட் ஆகி தரையிறங்கி தங்கையைத் தேட, அவளோ…சுவற்றைப் பார்த்தபடி, கன்னத்தில் கைவைத்து கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.

" இங்க ஒருத்தி எவ்ளோ பீல் பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட கண்டுக்காம நீ 'எனக்கென்ன'னு  போஸ் குடுத்து உட்கார்ந்திருக்க!! அப்டி என்ன தான் நடந்துச்சுனு ஒரு வார்த்தை கேக்கணும்னு உனக்கு தோணல, இல்ல?. "

" அடிங்க அக்கா, பேஸ் வாயிஸ்ல பேசினா பிச்சுபுடுவேன் பிச்சு. இவ்ளோ நேரமா NKPK விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு வளச்சு வளச்சு 'என்னாச்சு' னு கேட்டு, பீல் ஆகி போய் உட்கார்ந்திருக்கேன். இனி நீ சொன்னால் சொல்லு. சொல்லலைனா போ "

" ஓ.. நீ கேட்டியா! நான் தான் சொல்லலையா.." மகி சமாதானப் பேச்சை தொடங்க, மேலும் முறைத்தாள் அனன்யா.

" சரி சரி சொல்றேன், என்ன நடந்துச்சுனா...."

பெரியப்பா பேசும் வரை சமாளித்த மகதி அவர் நகரவும் வெடுக்கென திரும்பி நடந்தாள். ஹரியும் 'சரி தான் போடி..' என்று ஒரு தோள் உலுக்களுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். ஒரு வார்த்தை பேசாமல், இவர்கள் இருவர்குள் செய்தி பரிமாற பட்டதை  ஒரு ஆற்றாமையுடன் கண்டு நின்றாள் நிஷா.

முகம் எல்லாம் சீரியஸ்னஸ் பரவ, எடுத்துக்கொண்ட நோக்கில் வெற்றி பெறுவோமா என்ற கேள்வியுடன்  ஓட்டமும் நடையுமாக மகி சென்று நின்ற இடம் ஐஸ்-கிரீம் கொடுக்கும் இடம். அல்ரெடி கௌண்டர் கலை கட்டி இருக்க, மகி, " அண்ணா எனக்கு ஆறு ஐஸ்- கிரீம் குடுங்களேன்.. " என்றாள்.

அவர் ஒரு மாதிரி லுக் விட, " எனக்கில்லைண்ணா, என் தங்கைக்கு " என்று மனசட்சியுடனே அவள் புழுகினாள்.

அவர் எடுத்துக் கொடுக்க  முற்பட, அதற்குள்

" மகதி.. மகதி.." என்று இந்த குலவிளக்கை யாரோ கூவி அழைக்க,

'எங்கேயோ கேட்ட குரல், பட் முக்கியமான  சீன்ல வந்து இன்டரப்ட் செய்யுதே..' என்று எண்ணியவாறே மகதி திரும்பினாள்.

அங்கு நின்றிருந்தது நிஷா .

'ஓ... நம்ம அகோரி கூட்டத்து ஆளு. இவ முன்னாடி இப்டி ஆறு ஐஸ் சாப்ட அல்பத்தனமா தெரியுமே. சமாளிப்போம்' என்று எண்ணியபடியே

" ஹாய்.... ஹம்... "

" நிஷா "

" சாரிங்க, மறந்துட்டேன்"

" பரவால மகதி, நோ ப்ரப்ளம்"

  ஒரு புன்னகையுடன் அவள், " சொல்லுங்க நிஷா என்ன வேணும்? "

" உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே..பேசலாமா ? "

" இப்போவே வா?? " ஐஸ்-கிரீம் போகுதே என்ற கவலையில் பாவமாக கேட்டாள்.

" ஆமாங்க, நான் கிளம்பறேன். அதுக்குள்ள பேசிடலாம்னு வந்தேன். உங்களுக்கு எதாவது முக்கியமான வேலை இருக்க ..?"

" ஹீ.. ஹீ.. இல்லயே.. இல்லவே இல்ல... வாங்க போலாம்.." என்று நிஷாவுடன் நடந்தாள்.

" ஏம்மா... எம்மோய்.!!!!. அட ஆறு ஐஸ் பொண்ணு.. இந்தா மா.. " என்று பேக் கிரவுண்டில் ஐஸ் அண்ணா வாய்ஸ் கேட்டது மற்றுமொரு சோக நிகழ்வு.

மண்டபத்தின் முகப்பிலுள்ள தோட்டத்தில் அழகாய் அமைந்திருந்த ஒரு பெஞ்சில் சென்று இருவரும் அமர, நிஷா அமைதி காத்தாள்.

‘அவர்ட் படமா யா எடுக்குறாங்க இங்க?'  மைண்ட் கடுப்பாக, "என்ன நிஷா.. ஏதோ சொல்லணும்னு சொல்லிட்டு இப்டி அமைதியா இருக்கீங்களே. என்ன பேசனும்?"

" அது...நான் ஒன்னு கேட்பேன், தப்பா எடுத்துக்க கூடாது. கோபப்பட கூடாது.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.