(Reading time: 14 - 27 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலா

மை டியர் ஃபிரண்ட்ஸ்...

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா!!!

பரத், அபர்ணா, விஷ்வா அப்புறம் மழை!!!! இந்த பெயர்களின் மீது எனக்கு ஏற்பட்ட காதல் எனக்கு ஏனோ குறையவே இல்லை. அதனாலே என்னோட இந்த கதையிலேயும் இவங்களை கொண்டு வரலாம்ன்னு ஒரு ஆசை. இந்த கதாப்பாத்திரங்கள் எல்லாரும் இந்த கதையில் வருவார்கள். ஆனால் உள்ளம் வருடும் தென்றலுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. இது வேறே பரத், வேறே விஷ்வா, வேறே அபர்ணா. சொல்லப்போனால் பழைய கதாபத்திரங்களுக்கு நேர் எதிராக கூட இவர்கள் இருக்கலாம். அதனாலே Uயை  மறந்திட்டு இந்த கதையை படிங்க ;-).

'காற்றினிலே வரும் கீதம்' முடிச்சிட்டுதான் இதை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனா ஒரு ஆசையிலே முதல் அத்தியாயம் எழுதிட்டேன். எழுதினதுக்கு அப்புறம் அதை அனுப்பாமல் இருக்க முடியவில்லை. KVG இன்னும் 3/4 அத்தியாயங்களில் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் இந்த கதையை முழு மூச்சாக தொடருவோம்.

'இந்த கதையில் காதலை நான் பாட வந்திருக்கிறேன் ;-) பூவிலே தேன் தேட வந்திருக்கிறேன் ;-) படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ;-)

Varthai thavarivitten Kannamma

பர்ணா!!!

மதுரை ரயில் நிலையத்தில் தனது மூன்று தோழிகளுடன் நின்றுக்கொண்டிருந்தாள் அவள். உடன் பணி புரியும் தோழியின் திருமணத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னை நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தனர் மூவரும்.

இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராக நின்றிருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்!!!! ரயில் பயணம்!!! அது அபர்ணாவுக்கு எப்போதுமே திகட்டாத ஒன்று. அதவும் ஜன்னலோர பயணம் அவளுக்கு ஆனந்தம்!!! அதனாலேயே ஏ. சி பெட்டியை தவிர்துவிடுவாள் அவள். இன்றும் கூட ஏ.ஸி இல்லாத முதல் வகுப்பு பெட்டி!!! முகம் புன்னகையில் மலர்ந்து போயிருக்க ரயிலில் ஏற தயாரானாள் அவள்.

அபர்ணா!!! ஒரு பிரபலமான மென் பொருள் நிறுவனத்தில் வேலை அவளுக்கு. ஆனால் அந்த வேலையில்  அவளுக்கு எப்போதுமே நாட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தழைய தழைய புடவை. பின்னி முடித்த நீளமான கூந்தல். ஏதாவது ஒரு பூச்சரம். காதோரம் எப்போதும் ஊஞ்சலடிக்கொண்டிருக்கும் சின்ன ஜிமிக்கிகள் அல்லது தொங்கட்டான்கள். இதுவே அவளது வழக்கமான அலங்காரம். இன்று தலையில் பூ மட்டும் மிஸ்ஸிங்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

''நீயும் உன் டேஸ்ட்டும்..' எப்போதும் அவளது தோழிகள் அவளை பார்த்து சொல்லும் வார்த்தை இது, 'இன்னும் திரௌபதி மாதிரி புடவையை சுத்திட்டு அலையறே' என்பார்கள்.

அவர்களுக்கு பிடித்த நிறைய விஷயங்கள் ஏனோ இவளுக்கு பிடிப்பதில்லை. இவளுக்கு பிடித்தவை அவர்களுக்கு பிடிப்பதில்லை.

'அதுக்கும் மேலே மாடர்ன் டிரஸ்ன்னா ஒரு சுரிதாரும் மடிச்சு பின் பண்ண துப்பட்டாவும். ஏன் அபர்ணா இப்படி இருக்கே??? ஜீன்ஸ் டி. ஷர்ட் இப்படி ஏதாவது ட்ரை பண்ணா என்ன???

'எனக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்றேன். இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை??? எனக்கு இதுதான் சௌகரியமா இருக்கு.

'நீ ஒரு முப்பது வருஷம் முன்னாடி பிறந்திருக்க வேண்டிய ஆளு. லேட்டா பிறந்திட்டே..' சிரிப்பார்கள் அவளை பார்த்து.  

'நான் இப்படித்தான் கடைசி வரை இப்படித்தான்..' தனக்குள்ளே சிரித்துக்கொள்வாள் அவள்.

ரயிலில் ஏறினாள் அவள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட, நான்கு பர்த்துகள் கொண்ட அந்த முதல் வகுப்பு கம்பார்ட்மென்டின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் மூவரும்.

ஒரு நொடி சரேலென விரிந்து, இமை தட்டி திறந்து அவளை பார்த்த வியப்பில் மூழ்கி களித்து கிடந்தன அந்த இரண்டு விழிகள்!!!! இத்தனை நாட்களாக அவளுக்காகவே தவமிருக்கும் அந்த இரண்டு விழிகள்!!! அந்த கம்பார்ட்மென்டின் அப்பர் பர்த்தில் படுத்திருந்தவனின் விழிகள்!!!!

'எத்தனை ஆண்டுகள் ஆகின்றன அவளை பார்த்து!!! பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறாள் என்னவள்.!!!!'

உள்ளே நுழைந்த நொடியில் கால் கொஞ்சம் தடுக்கி அவள் சற்று தடுமாற திடுக்கிட்டு, அவளை தாங்கிக்கொள்பவன் போல் சட்டென எழுந்து அமர்ந்துவிட்டான் அவன்.

'பார்த்துடா..' அவன் இதழ்கள் தன்னையும் அறியாமல் முணுமுணுத்தன. அவள் அவனை கவனிக்கவில்லைதான். அவள் சமாளித்துக்கொள்ள ஒரு ஆழ்ந்த மூச்சுடன் மறுபடியும் படுத்துக்கொண்டான் அவன்.

இப்படித்தான்!!! இப்படித்தான் பல வருடங்களாக அவளுக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறது அவனது இதயம்!!! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக!!!

ரயில் மெல்ல நகர துவங்க கீழே குனிந்து தனது பெட்டியை பர்த்தின் அடியில் தள்ளிவிட்டு முன்னால் விழுந்த சாட்டை பின்னலை அலட்சியமாக பின்னே தூக்கி போட்டு, சந்தோஷ சிரிப்புடன் ஜன்னலுக்கு அருகில் சென்று அமர்ந்து வெளியே பார்க்க துவங்கியவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்திருந்தான் அவன்!!!!

உள்ளே வந்தவர்கள் அவனை பெரிதாக கவனிக்கவுமில்லை, கண்டுக்கொள்ளவும் இல்லைதான். இன்னமும் அவளது விழிகளும் மேலே நிமிரவில்லை தான்!!! நிமிர்ந்தால்??? ஒரு வேளை அவனை பார்த்தால் என்ன செய்வாளாம்??? அவள் அவனை சந்திப்பதை எத்தனை தூரம் விரும்புவாள் என்றே புரியவில்லை அவனுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.