(Reading time: 15 - 30 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 11 - வத்ஸலா

'Katrinile varum geetham

கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா. அவளெங்கே அறிந்தாள் வேதாவுக்கும் திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது என!!!  நாளை அவளுக்கு நிச்சியதார்த்தம் என!!! தோழியிடமாவது எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருக்க வேண்டாமா வேதா??? இது எதையும் அறியாதவளாக கைப்பேசியை அணைத்துவிட்டிருந்தாள் கவிதா.

'எவன்டா அவன்??? என் பேரை சொல்லி அவளை ஏமாத்தறவன்' கோகுல் குழப்பத்துடன் கேட்க எதுவும் புரியாமல் தோற்று போனவர்களாக சில நிமிடங்கள் இருவரும் அமர்ந்திருக்க...

'ஒண்ணு பண்ணுவோம். அவ ஆஃபிஸ்க்கே நேரா போய் கவிதாவை பார்த்து பேசிட்டு, வருவோம்...' கோகுல் சொல்ல வேதாவின் அலுவலகம் நோக்கி கிளம்பினர் இருவரும்.

அதே நேரத்தில் அங்கே வேதா இருந்த இடத்தில்...சென்னை பெங்களுர் நெடுஞ்சாலையில் இருந்த அந்த  கெஸ்ட் ஹௌசில்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

பலமாக கேட்டது அருகில் இருந்த அந்த கோவிலின் மணி சத்தம். திடுக்கென விழித்துக்கொண்டாள் அவள். கை கடிகாரத்தை பார்க்க நேரம் காலை ஒன்பதை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது அது???

'எப்படி இத்தனை நேரம் உறங்கிப்போனேன்??? அவளுக்கே தெரியவில்லை. இரவு முழுதும் தனியே படுத்து அப்பாவை நினைத்து அழுதுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

'தெரிந்திருக்குமா??? இப்போது அவருக்கு விஷயம் தெரிந்திருக்குமா??? நினைக்கும் போதே உடல் நடுங்கத்தான் செய்தது.

'அதை எல்லாம் யோசித்து இப்போது என்ன ஆகப்போகிறதாம்???' ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள் வேதா. தலை பாரமாக இருப்பது போல் இருந்தது.. அப்போது அறையின் கதவு தட்டப்பட்டது.

''ஒரு வேளை கோகுலாக இருக்குமோ..' நினைத்தபடியே, ஒரு முறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக்கொண்டு  கதவின் அருகில் சென்றாள் அவள். அந்த கெஸ்ட் ஹவுஸின் இன்னொரு அறையில் தான் இரவு படுக்க சென்றான் அவன்.

அவள் கதவை திறக்க வாசலில் நின்றிருந்தது விக்கி. ஒரு முறை திடுக்கென்றது அவளுக்கு. அவனை அங்கே எதிர் பார்க்கவில்லை அவள்.

'ஹாய்... குட் மார்னிங்...' புன்னகைத்தான் அவன். எரிச்சல் மண்டியது அவளுக்குள்ளே. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெயருக்கு புன்னகைத்து விட்டு மெல்ல கேட்டாள் அவள்.

'கோகுல் எங்கே???'

'அவனா அவன் கொஞ்சம் வெளியே போயிருக்கான். இப்போ வந்திடுவான். உன்னை இந்த புது புடவை கட்டிட்டு ரெடி ஆக சொன்னான். நான் இங்கே எங்கே வந்தேன்னு பார்க்கறியா. என் ஃப்ரெண்ட் கல்யாணத்திலே நான் இல்லாம  எப்படி???.' கண்ணடித்தான் அவன்.

அவன் சிரிப்பு அவளுக்குள்ளே கொஞ்சம் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. பேசாமல் அந்த புது புடவையை வாங்கிக்கொண்டு கதவை மூடினாள் வேதா. மனம் முழுவதும் குழப்பம் மட்டுமே. சில நிமிடங்கள் யோசனையுடனே நின்றிருந்தாள் வேதா.

அதே நேரத்தில் அங்கே கோகுலும், முரளியும் வேதாவின் அலுவலகத்தை அடைந்தனர். கான்டீனில் தனியாக அமர்ந்திருந்த கவிதாவை தேடி பிடித்து அவள் முன்னால் சென்று அமர்ந்தனர் இருவரும். அவள் திகைப்புடன் நிமிர இதமாக புன்னகைத்தான் கோகுல்....

'ஐ யாம் கோகுல்...' முகத்தில் குழப்ப ரேகைகள் ஓட..... அவள் புருவங்கள் முடிச்சிட... புன்னகை மாறமால் மறுபடியும் சொன்னான் கோகுல்

'ஐ யாம் கோகுல்... ஜி... கே.... க்ரூப்ஸ்...' கொஞ்சம் திடுக்கிடல் அவளிடத்தில்.

ஏதேதோ யோசனைகள் மனதில் ஓட 'ஒன் செகண்ட்...'  என்றவள் சற்று விலகி சென்று தனது மொபைலை உயிர்பித்து துழாவி..... அவள் அன்று பார்த்த அதே புகைப்படத்தை ஒரு முறை பார்த்து...... இவன் நிஜமான கோகுல்தான்.... என்பதை உறுதி செய்துகொண்டு சின்ன புன்னகையுடன் அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தாள்.

'நான் தான் கோகுல் அப்படின்னு நெட்லே போட்டோ பார்த்து  கன்ஃபார்ம் பண்ணிண்டாச்சா???' அவனது பழைய புன்னகையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை.

'இல்லை... அது வந்து...'

'நோ.. நோ... தட்ஸ் குட். வெரி குட். பட் இது கொஞ்ச நாள் முன்னாடி நடந்திருந்தா வேதாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருந்திருக்கும்...' என்றான் மெதுவாக.

'வேதாவுக்கு என்னாச்சு????' கவிதா பதற

'சொல்றேன்... வேதாவுக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி இருக்கு. இவன் தான் மாப்பிள்ளை. முரளி!!! என்னோட பெரியப்பா பையன்...'

'கல்யாணமா அவ என்கிட்டே எதுவுமே சொல்லலை.. நீங்க தான் கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் பண்ணீங்களா??? சாரி எனக்கு தெரியலை...' என்றாள் சற்று தழைந்து போன குரலில்..

'இப்போ அது முக்கியம் இல்லை கவிதா...' என்றான் முரளி. 'நேத்து வேதா ஆத்தை விட்டு போயிட்டா... அவ எங்கே போயிருப்பான்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்க தான் வந்தோம். '

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.