(Reading time: 9 - 18 minutes)

04. பைராகி - சகி

bhairagi

றுநாள் மாலை....

காரின் வேகம் காற்றை கிழித்துக் கொண்டு சென்றது.

ஜானகி முந்தய நாள் இரவே பயணம் மேற்கொண்டிருக்க மற்ற இருவரும் மறுநாள் காலை தான் பயணத்தை தொடங்கினர்.அதிகாலை அவள் வழிபாடு முடித்து தொடர்ந்த பயணம் மாலை வரை நீடித்தது.

காரில் ஏதும் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் யாத்ரா.இயற்கையை தோழியாக ஏற்றிருந்த பெண்மனம் இப்போது ஏனோ அவளை கவனிக்க தவறி எதையோ சிந்தித்து கொண்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவனோ பொறுமை இழந்து தன் கோபத்தை எல்லாம் அவர்களை சுமந்து செல்லும் வாகனத்திடம் காட்டி கொண்டிருந்தான்.

'பைரவக்கோட்டை தங்களை அன்புடன் வரவேற்கிறது!'என்ற வரவேற்ப பலகை ஊர் எல்லையை அவனுக்கு சுட்டியது.ஏனோ ஊர் எல்லைக்குள் நுழைந்ததும் மனதில் ஒருவித 'திக்'என்ற உணர்வு யாத்ராவின் மனதை வியாபித்தது.

அச்சத்தில் தனது புடவை நுனியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

ஒருவழியாக இருட்டும் சமயம் இருவரும் அந்தக் கோட்டையை அடைந்தனர்.

அவர்கள் உள்ளே வந்ததும் ஒரு 35 வயதான பெண் ஆதித்யாவை உற்று பார்த்தாள்.இவனும் பதிலுக்கு உற்றுப் பார்த்தான்.

"நீங்க தான் ஆதித்யா,யாத்ராவா?"என்றாள்.

"இல்லை..நான் யாத்ரா!இவ ஆதித்யா!"-என்று மாற்றி பதில் கூறினான் அவன்.

அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள்,

"அம்மா!சின்னய்யா வந்துட்டாரு!"-என்று கூவ,அங்கு ஒரு பத்து பேர் எட்டிப் பார்த்தனர்.

"பா!என்ன வாய்ஸ்கா உனக்கு?ஊரையே கூப்பிட்டு வர வைத்துவிட்ட?"

-அந்தப் பெண் அவனை மீண்டும் முறைத்தாள்.

யாத்ராவிற்கு சிரிப்பு வந்த போதும் அடக்கி கொண்டாள்.

சில நொடிகளில் ஜானகி இறங்கி வந்தார்.

"ஏன்டா இவ்வளவு நேரம்?"

"இவதான் அம்மூ லேட் பண்ணா!"-என்று யாத்ராவின் மேல் பழி போட்டான்.

"ஏன் எப்போ பார்த்தாலும் அவ மேலே பழி போடுற நீ?"

"பழி இல்லை அம்மூ!நிஜமா! பூஜை எல்லாம் முடித்து பத்து மணிக்கு தான் கிளம்புனா!அதுக்கு மேலே நான் வழி விசாரித்து வரணும்ல?"

"சரி..போய் ரெஸ்ட் எடுங்க!அம்மா கௌரி அவங்க ரூமை காட்டும்மா!"

"சரிங்கம்மா!"-என்று ஒரு பெட்டியை தூக்கினாள் அவள்.

"பரவாயில்லைக்கா!எங்களுக்கு அவ்வளவு வயசாகவில்லை!"-என்று அந்த பெட்டியை வாங்கி கொண்டான் அவன்.

இதுவே அவனது சிறப்பம்சம் எனலாம்!!!யாவரிடத்தில் சிநேகமாக பழகும் பண்பு!!!யார் ஒருவர் அனைவரையும் தனக்கு சமமாக மதிக்கின்றாரோ!அவர் இறைவனின் மனதிற்கு பிரியமானவர் ஆகிறார்!!

"நீங்க வருவதை ஒரு வாரத்திற்கு முன்னாடியே சொல்ல கூடாதா சின்னய்யா?"

"ஏன்?"

"இவ்வளவு பெரிய கோட்டையை சுத்தம் பண்ணி வைக்கணும்ல!!எங்களால கொஞ்சம் தான் சுத்தம் பண்ண முடிந்தது!மிச்சத்துக்கு கொஞ்சம் நாள் ஆகும்!!

"அப்போ ரூம் குறைவா இருக்கா?அப்படின்னா யாத்ரா நீ என் கூடவே தங்கிக்கோ!"-என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.

அவள் ஆதித்யாவை சாம்பலாக்கி விடுவதை போல ஒரு பார்வை பார்த்தாள்.

"சின்னய்யா!'

"என்னய்யா?"

"ரூம் எல்லாம் உங்க மூணு பேருக்கும் தயாரா இருக்கு!மாடி,மிச்சம் இருக்கிற ரூம் எல்லாம் சொன்னேன்!"

"ஓஹோ!"

"இது தான் நீங்க தங்க போற ரூம்!"-என்று அருகருகே இரண்டு அறைகளை காட்டினாள்.

"தேங்க்யூ சிஸ்டர்!"

"அப்பறம்...எதாவது வேணும்னா கூப்பிடுங்கய்யா!"

"நீங்க முதல்ல ஐயா போட்டு கூப்பிடுவதை நிறுத்துங்க!எனக்கு அப்படி ஒண்ணும் வயசாகலை!ஆதித்யா...என் பெயர் ஆதித்யா!"-என்றான் சற்று கோபமாக!!கௌரி ஒரு விசித்ரமான பார்வையை அவன் மேல் வீசினாள்.

"சரிப்பா!உங்களுக்கும் எதாவது வேணும்னா கூப்பிடுங்கம்மா!"-அவள் கூற,

"என் பெயர் யாத்ரா!"என்றாள் அவள்.திருதிருவென விழித்தவள் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

சில நொடிகள் அமைதி காத்தவர்கள் பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

யாத்ரா தலை குனிந்தப்படி தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஒரு பெருமூச்சை விட்டவன்,தன் அறைக்குள் நுழைந்தான்.நுழைந்தவனின் பார்வை அந்த அறையை அளவெடுத்தது.

எங்கோ பார்த்த ஒரு உணர்வு!!

மிக பெரிய அறை அது!!

அங்கிருந்த. மெத்தை மட்டுமே சென்னையில் அவன் இருந்த அறையின் பாதியை பிடித்துக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.