(Reading time: 21 - 41 minutes)

16. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 16

Puthir podum nenjam

காரை ஓட்டி வந்த ராகவ்.... அஞ்சனாவின் முகம் இன்னும் சமாதானமடையாமல் இருப்பது கண்டு,

“உனக்கு தெரியாதுடா... உன்னை பார்த்ததும்.. வருண்க்கு ஸ்பார்க் வந்திருக்கு! அதான் அன்னைக்கு நைட்டே அவங்க அப்பாவை ரஷ் பண்ணி உன்னை பொண்ணு கேட்டு வந்துட்டாங்க”, என்று அவள் மனதில் ஆசை விதையை நட முயன்றான்...

‘அது எனக்கு ஏற்கனவே பெல்லி பாய் காட்டிட்டார்..’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்...

“அதெப்படி ஸ்பார்க் வரும்???? லைட் எரியாம????.. மணி அடிக்காம???”

என்று அவனிடம் கேள்வி கேட்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

“உன் சிரிப்பிலே அதை விட பல மடங்கு ஸ்பார்க் வந்திடுச்சாம்”, அவள் போக்கிலே சொல்ல ஆரம்பித்தான் ராகவ்...

‘ப்ச்... போனா போகுதுன்னு சிரிச்சா!!! இடியட்!!!!”, என்று திட்டியவள் மனம் பொருமியது - நான் அன்னைக்கு சிபி கூட ஹாஸ்பிட்டலுக்கே போயிருக்க கூடாது என்று!!!

ஆம், அடித்து பிடித்து கிளம்பி ஊருக்கு வந்தவள்... சிபி வலியில் பட்ட வேதனையில் மிகவும் பயந்து போயிருந்தாள். சிபியை இந்த நிலையில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் தான் இருந்தாள்! பவதாரிணிக்குமே இதைக் காட்டியே அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள எண்ணம்!

அவள் வந்து ஐந்து நாட்கள் சென்ற விட்ட நிலையில்...கொஞ்சம் வலி குறைந்திருக்க... அஞ்சனாவுடன் சேர்ந்து  கொண்டு கேன்டி க்ரஷ் விளையாண்டுக் கொண்டிருந்தான் சிபி.

முடியாமல் இருக்கிறான் என்று  பவதாரிணியும் பாவம் பார்த்து அனுமதிக்க.. இருவரும் இது தான் சாக்கு என்று வெறித்தனமாக விளையாட்டிலே நேரத்தை கழிக்க.... அலைபேசியை நோண்டிக் கொண்டு  இருந்தவர்களைக் கண்டதும் பவதாரிணி டென்ஷனாகி விட்டார்...

“காலையில் இருந்து விளையாடிகிட்டு இருக்கீங்க.. ஹாஸ்பிட்டல் போகணும்”, என்று அதட்டி எளிதாக அலைபேசியை சிபியிடமிருந்து பறித்தவரால்... அஞ்சனாவிடம் அப்படி செய்ய முடியவில்லை.. அவளிடம் வருவதற்குள்ளே அவள் சிட்டாய் பறக்க...

“சொன்ன பேச்சை கேட்கலை! வீட்டிலே விட்டுட்டு போயிடுவேன்!”, என்று மிரட்ட... அதை கண்டு கொள்ளாமல்... மொட்டை மாடிக்கு போய் தன் விளையாட்டைத் தொடந்தாள். அப்பொழுது கார் கிளம்பும் சத்தம் கேட்க...

“அட....  ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிட்டாய்ங்களா!!!!!! நான் இல்லாமலா!!!!!”, என்று சந்தேகம் வர.. மாடியிலிருந்து கீழே பார்த்தவளுக்கு  அது உண்மை என்பது புலப்பட...

“ஹே.. ஹோல்ட் ஆன்... ஆன்....!!!! ஸ்டாப்!!! நானும் வர்றேன்”, என்று சத்தமாக கத்தி விட்டு... விழுந்தடித்து கீழே ஓடி வந்தாள்...

அய்யகோ! பரிதாபம்... அவள் வருவதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது... போர்டிகோவிற்கு வந்து ஏமாற்றத்துடன்.. ஒற்றைக் காலை பூமியில் உதைத்தவளுக்கு பவதாரிணி மீது கோபம் கோபமாக வர.. தன் தாத்தாவிடம் ஓடினாள்...

அங்கே மருத்துவமனையில்... கிட்டத்தட்ட கால் மணி நேர காத்திருப்பில் பொறுமை இழந்த பவதாரிணி,

“அண்ணா! கண்ணன்  இன்னுமா பிசியா இருக்கான்????”, அந்த டாக்டர் கண்ணன் அவர்கள் உறவினன். ராகவ்வின் சீனியரும் கூட... எப்பொழுதும் அவர்களை காத்திருக்க விடுவதில்லை என்பதால்....

என்னவென்று கேட்க மருத்துவர் அறைக்குள் நுழைந்தார் சிவகிரி... உள்ளே டாக்டர் கண்ணன் தன் நண்பன் வருணுடன்  பேசிக் கொண்டிருந்ததை எதுவும் பொருட்படுத்தாமல்...

“என்ன கண்ணா! எங்களை வெயிட் செய்ய வைச்சிட்டு நீ பாட்டுக்கு....”, என்று கோபமாக கேட்டுக் கொண்டு வர...

அந்த கோபக் குரலில்  கலவரமாகி கண்ணன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள...

அதைப் பார்த்திருந்த அவன் நண்பன் வருணிற்கு , ‘யார் இது? இன்டீசன்ட்டா உள்ள வந்தது மட்டுமில்லாம.. இவ்வளவு அதிகாரமா..’, என்று எண்ணம் வந்த சமயம்..

கண்ணனோ.. “இல்லை சித்தப்பா அது............ தாத்தா வர்ற வரைக்கும் உங்களை  காத்திருக்க வைக்கணும்ன்னு சொன்னார்...”, அவரை நோக்கி வேகமாக நடந்து வர..

அதற்குள், “நான் தான்டா சொன்னேன்!!!!”, என்று தன் மகனைப் பார்த்து சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார் சொக்கர்! அவரைக் கண்டதும்,

“வாங்க.. தாத்தா!!!”, என்று வரவேற்ற கண்ணனைப் பார்த்து தலையசைத்த

சொக்கரின் கூரியப் பார்வையோ... அவனையும் தாண்டி அவன் நண்பன் மீது சென்றது.. அவர் பார்வையைத் தொடர்ந்த கண்ணன்...

“டெக்ஸ்டைல்ஸ் ஸ்ரீராமன் இருக்கார்ல.. அவர் பேரன்  வருண்! யங் பிஸ்னஸ் மேன்! ஃப்ரண்ட்!!! சொந்தமும் கூட! ”, என்று அவனை அறிமுகப் படுத்தி வைக்க....

சொக்கர் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும்.. இவர்கள் எல்லாரும் கண்ணனின் சொந்தம் என்பதால் உரிமையுடன் பழகுகின்றனர் என்பதை அறிந்த வருணும் எழுந்து நின்று புன்னகைத்த படி பேச்சு கொடுத்தான். 

“கண்ணன் சொந்தம்ன்னு மட்டும் தான் தெரியும்.. எப்படின்னு எல்லாம் அவனுக்கும் தெரியாது! எனக்கும் தெரியாது”, என்று இயல்பாக அவரிடம் பேச...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.