(Reading time: 9 - 17 minutes)

01. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

வானம் அக்னிப்பிழம்பை கக்குவது.போல மின்னலடித்து கொண்டிருந்தது.செவிகளை பிளக்கும் இடி சப்தம் யாவரின் இதயத்துடிப்பையும் நிறுத்திவிடுவதாய் ஒரு உணர்வு!!

மெல்ல வீசிய தென்றல் காற்று திடீரென அக்ரோஷமாக பதற்றம் மனதினை சூழ்வதை உணரலாம்!!

அந்த சுற்றுவட்டாரமே நிசப்தமாக இருக்க,அதில் தனித்துவமாய் தெரிந்தது அந்த மாளிகை போன்ற இல்லம்!!

காற்றில் பறந்து வந்த புழுதிகள் நேராக அந்த வீட்டை அடைய விரைந்தன...

மிரள வைக்கும் தோற்றம் அந்த இல்லத்திற்கு!!!

வருடங்களாய் பூட்டியே இருந்தது அது !!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதன் பின்புற தோட்டத்தில் நெடுதுயர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது!!விழுதுகள் யாவும் பூமியை தொட இதயம் அதை காணும் நேரத்தில் நிச்சயம் நின்றுவிடும்.அதில் சந்தேகமில்லை!!

கண்களை சற்று உயர்த்தி அதை நோட்டமிட்டால் அதில் மூன்று கயிறு தொங்கி கொண்டிருப்பதை காணலாம்.

சற்று தூரத்தில் ஒரு அழுகை சப்தம்!!ஓசை வந்த திசை நோக்கினால் கரும் நிறத்தில் நின்றது அந்த உருவம்!!நிழலில்லாத ஓர் உருவம்!!

காலை நேர செஞ்சூரியன் உற்சாகமாக உதயமாகி அந்த நாளை புதியதாய் செதுக்க ஆரம்பித்தது.காற்றும் தன் பங்கிற்கு மனதிற்கு புத்துணர்வை வழங்கி கொண்டிருக்க அதன் ராகத்தில் அந்த ஜன்னலின் திரைச்சீலை மெல்ல சிணுங்கியது.திரைச்சீலை அகன்றதும் கிடைத்தது ஒரு சந்தர்ப்பம் என்று சூரியயொளி அந்த அறைக்குள் புகுந்து பளிங்கு போன்ற அவள் முகத்தில் பட்டு ஆனந்தமடைந்தது.அவளோ அதனை கண்டுக்கொள்ளாமல் திரும்பி படுத்தாள்.

சில நொடிகளில் உறக்கம் தானாய் கலைய மெல்ல கண்விழித்தாள் அவள்.எனினும்,எழ மனம் வராமல் படுத்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் அன்றைய தனது கடமைகளை மனதுள் கணக்கிட்டாள் அவள். மனமும்,அறிவும் மெல்ல மெல்ல விழிக்க ஆரம்பித்தன.அவை முழுதும் விழித்ததும் மெத்தையை விட்டு எழுந்தாள்.

தன்னிச்சையாக அவளது கண்கள் கடிகாரத்தை பார்த்தன.மணி ஆறு!!

மெல்ல தரையில் கால் பதித்தவள் தனது கடமைகளை முடிக்க கிளம்பினாள்.அரை மணி நேரத்திற்கு பின், தலையை துவட்டியப்படி குளியலறையில் இருந்து வெளி வந்தாள்.அவளோடு உடன் வந்தது அவள் இதழோரம் ஒட்டி இருந்த அந்தப் புன்னகை!!

தரையில் ஒரு சிறு போர்வையை விரித்தவள்,அதன் மீது அமர்ந்து தனது முழு கவனத்தையும் நடு நெற்றியில் வைத்து,இரு கைகளின் ஆள்காட்டி விரலையும்,கட்டை விரலையும் இணைத்து முதுகுத்தணடை நேராக்கி தியானத்தில் ஆழ்ந்தாள்.பதினைந்து நிமிடம் எதைக்குறித்தும் கவலைக்கொள்ளாத அந்த பதினைந்து நிமிட தியானம் அவளது மனதை வென்று வெற்று தாளாக்கியது.அவள் கண் திறப்பதற்குள் அவள் குறித்து கூறுகிறேன்..

அவள் பெயர் சிவன்யா!!ஐந்தரை அடி உயரத்தில் அளவான எடையில்,இடைவரை அலைப்பாயும் கரும் கேசத்தோடு,கண்களில் என்றும் தெரியும் தைரியத்தோடும்,இதழோரம் ஒட்டிய இனிமையான நகையோடும்,அன்பான உள்ளத்தோடும் யாவரையும் சட்டென கவர்ந்து விடுவாள் அவள்.

அவளுக்கென வாழும் ஒரே ஜீவன் அவள் அண்ணன் மகேஷ் மட்டுமே!!தாய் தந்தை இல்லாதவள்,நினைவு தெரிந்த நாள் முதல் அண்ணனது வளர்ப்பில் வளர்ந்தவள்,எனினும் சீரான குணங்களை கொண்டவள்.

மெல்ல கண்களை திறந்தாள் சிவன்யா!

போர்வையை மடித்துவிட்டு,அவளது அறையைவிட்டு 

வெளியே வந்தாள்.அமைதியாக இருந்தது அந்த இல்லம்!!

அதன் பொருள் இன்னும் அவள் தமையன் விழிக்கவில்லை.அங்கிருந்து நேராக படி இறங்கி பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

சிவன்யாவிற்கு இயற்கையிலே இறைப்பக்தி அதிகம்!!

அவளது வருகையை எதிர்ப்பார்த்தப்படி காத்திருந்தார் ஐந்தடி உயரத்தில் செதுக்கப்பட்டிருந்த சிவப்பெருமான்!!அவர் முன் இருந்த தீபங்களை உயிர்பித்தாள் சிவன்யா!!அழகிய கரங்களை தாமரை மொட்டுப் போல குவித்து,விழிகளை மூடி,இறைவனை பூஜிக்கலானாள்.மனதினில் புதுவித நம்பிக்கை பரவ ஆரம்பித்தது.

தட்டில் இருந்த தீபத்தை உயிர்பித்து இறைவனுக்கு ஆரத்தி எடுத்தாள்.

தாம்பூல தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து தன் நடு நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

பின் மீண்டும் ஒருமுறை இறைவனை வணங்கி வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும்,அவள் தமையனின் கைப்பேசி சிணுங்கியது.

"போனை இங்கேயே வச்சிட்டாரா!"-என்று எண்ணியப்படி கைப்பேசியை எடுத்து காதில் வைத்தாள்.

"மகேஷ்!கிளம்பிட்டியா?"-என்று யாரென்றும் விசாரிக்காமல் பேசியது ஒரு ஆண் குரல்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.