(Reading time: 36 - 72 minutes)

21. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

ன்பாவையே பனிஷ் செய்யலாம்னு டிசைட் செய்துட்டேன்…….. ஏன்னா அவதான் என்ட்ட ஈசியா மாட்டிக்க மாதிரி நைட் தனியா சுத்திக்கிட்டு இருக்கா….” தார்கிகா இப்படி தொடர

அந்த நொடி மனோகரிக்கு என்ன செய்யவென தெரியவில்லை. இப்ப இவ யாரை கவனிக்கனும்..? கொதித்துக் கொண்டிருக்கும் தன்னவனையா அல்லது இன்பாவையா?

மித்ரனை இந்த கோலத்தில் பார்க்கும் முன்பு தார்க்கிகா இப்படி இன்பாவா வர்ஷனா என்று கேட்டிருந்தால்….

“பிங்கி பிங்கி பாங்கி போட்டு டிசைட் செய்துக்கோ லூசு” என பதில் சொல்லி அப்படியே காலை கட் செய்திருப்பாள் மனோ. ஆனால் மித்ரனை இப்படிப் பார்த்த பின்பு இப்ப ஒரு அர லூச கூட அலட்சியம் செய்ய முடியலையே…. கோமாளி வேஷத்துக்குப் பின்னால என்ன கோல்மால்  இருக்குமோ….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஆனாலும் மனோவுக்கு ஒன்று தெளிவாக தெரிந்தது…..இந்த கரப்பான் பூச்சிட்ட பேசி ப்ரயோஜனமில்ல…..

இன்பாவைக் காப்பாற்ற இவதான் ஏதாவது செய்தாகனும்…. ஆக எதுவும் சொல்லாமல் உடனடியாக இணைப்பை துண்டித்தாள்.

படுத்திருந்த மித்ரனை நோக்கி மீண்டுமாய் பாவையின் பார்வை பயணம். கண் மூடி அவன்.….. பேசக் கூட முடியாதவனிடம் இந்த விஷயத்தை சொல்லி என்னன்னு கேட்க? ஆனால் அதற்காக இன்பாவை எப்படி கவனிக்காம விட…..?

‘முதல்ல இன்பாவுக்கு மொபைல்ல ட்ரைப் பண்ணலாம்…அவங்க எடுக்கலைனா வேற வழி இல்ல, மனுட்ட கேட்க வேண்டியதுதான்…. ….அட்லீஸ்ட் அவன் டெம்பரேச்சர் கீழ வர்ற வரைக்காவது இந்த விஷயத்தை சொல்லி அவனை தொந்தரவு பண்ணாம இருக்க முடிஞ்சா நல்லா இருக்கும்…’

ஆக இப்ப ஃபோன் பேச அவனைவிட்டு கொஞ்சம் தள்ளிப் போக வேண்டும் இவள்……குறஞ்ச பட்சம் ரூம் வாசல் வரைக்காவது….. அவனுக்காகதான் போகனும் என்றாலும் அவனை விட்டு அவ்ளவு தூரம் போறதே அத்தனை கஷ்டமான முடிவா தெரியுது இவளுக்கு…..

ஆனா வேற வழி இல்லையே….பார்வையால் அவனை பொதிந்தபடி…. தர தரவென  மனதை இழுத்துக் கொண்டு அந்த அறையின் வாசலை நோக்கி ஓடினாள்….

அறையின் வாசலுக்கு வெளியில் நின்று கொண்டவள் சுற்று முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இன்பா எண்ணை அழைத்தாள். போன முறை முயன்ற போது எடுக்காத இன்பா இப்போது இணைப்பை உடனடியாகவே ஏற்றாள்….

“சாரி மனோ…இப்பதான் பார்க்கேன் நீ கூப்ட்றுக்கன்னு….” அவள் ஆரம்பிக்க மனோவோ பரபரத்தாள்.

“எங்க இருக்கீங்க அண்ணி….?” மித்ரனைப் பார்த்தவுடன் அழுது கொண்டிருந்தாளல்லவா அந்த குரலும்….பரிதவிப்பும்..… அவசரமும் ….கூடவே ஒரு அதட்டலும் கலந்த குரலில் இவள் கேட்க நிச்சயமாய் இன்பா அதை எதிர்பார்த்திருக்கவில்லை…

ஆனால் இன்பா எதுவும் சொல்லும் முன்பாக கூட மனோ மீண்டுமாய் “எப்டி போய் இருக்கீங்க…? செக்யூரிட்டி கூட இருக்காங்கதான…..? இப்ப உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க….” என அதே தொனியில் படபடத்தாள்…..

“உங்க தம்பி வந்திருக்காங்க….அவங்களுக்கு உடம்பு சரி இல்ல….” இதை சொன்னால் இன்பா உடனடியாக வந்துவிடுவாள் என நினைத்துதான் மனோ சொன்னது….ஆனால் சொல்லத் தொடங்கும் போதே இவள் குரல் பிசிற தொடங்கியது….

“மனோ என்னாச்சு மனோ….அதெல்லாம் ஒன்னும் ஆகாது…நீ ஏன் அழுற.....நான் இப்பவே வர்றேன்…… ஜெயகுமார் அங்கிள்கும் கால் பண்ணிடுறேன்…..இப்ப வந்துடுவாங்க…” இன்பாவின் குரலிலும் இப்போது பதற்றம்….

மனோவுக்கு அந்த ஜெய குமார் அங்கிள் டாக்டராக இருக்க வேண்டும் என புரிய… “ வேண்டாண்ணி …தெரிஞ்ச டாக்டர் யாரும் வேண்டாம்….அது ரிஸ்க்…..நான் வேற அரேஞ்ச் செய்துட்டேன்…இப்ப முதல்ல உடனே வீட்டுக்கு வாங்க நீங்க…. அதுவும் தனியா வராதீங்க……செக்யூரிட்டியோட வாங்க…”

இதில் இன்பாவுக்கு விஷயம் வெறும் உடம்பு சரி இல்லை என்ற அளவில் இல்லை என புரிய “இப்பவே கிளம்பிட்டேன் மனோ…..நீ அவனைப் பார்த்துக்கோ… என்னைப் பத்தி கவலப்படாதே…..நான் சேஃபாதான் இருக்கேன்” என்றபடி இணைப்பை துண்டித்தாள்.

திரும்பவுமாக வேக வேகமாக  மித்ரனிடம் போய் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் மனோ. இதுக்குள்ள என்ன மாறி இருக்க முடியும்னு பொண்ணு நினைக்குதுன்னு தெரியலை…..அதே கொதி நிலை….. ஜூஸ் எதுவும் குடுக்கலாம்…..அதோட காட்டனை ஈரமாக்கி நெத்தியில வைக்கலாமோ…?

அதற்காக இவள் எழும்ப நினைக்க….அவனோ இவள் செல்வதை தடை செய்யும் விதமாக அவன் நெற்றியிலிருந்த இவள் கையைப் பிடித்துக் கொண்டான்…… இவள் அருகாமையை அவன் விரும்புகிறான் என இவளுக்கு புரிகிறதுதான்….

“இப்ப வந்துடுவேன் மனுப்பா….”

என்றபடி எழுந்து ஓடியவள் அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரிய க்ளாசில் ஆரஞ்சு ஜூசும்….  காட்டன் எங்கிருக்கிறது என தெரியாமல்….. அதை தேடி நேரத்தை வேஸ்ட் செய்ய விரும்பாமல்……காட்டன் கர்சீஃபும் கிண்ணத்தில் தண்ணியுமாக வந்து…  அவன் அருகில் அமர்ந்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.