(Reading time: 8 - 15 minutes)

01. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்” …குளியல் அறையின் கதவை தாண்டி, யாழினி பாட்டு பாடும் சத்தம் அந்த அறை முழுதும் நிறைந்திருந்தது.  

“ உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்” … வெளியில் அவளுக்காக தடபுடலாய் ஏற்பாடுகள் நடக்க, அவளோ கூலாய் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த அறைக்குள் நுழைந்தான் அவன்.. அவள் இனிய குரல், அவனது செவிகளை மயக்கிட,மந்தகாச  புன்னகையை சிந்தினான் அவன்.

நாற்காலியில் அவள் போட்டு வைத்திருந்த துணியில், துப்பட்டாவை எடுத்து கழுத்தில் சுற்றிகொண்டு, நிலை கண்ணாடி முன் நின்று அவளின் சீப்பை எடுத்தான்.. அதை தனது அடர்ந்த கேசத்தை சீவியவன் அதன்பின் அந்த சீப்பை பார்த்து வில்லத்தனமாய் சிரித்து, இரண்டாய் உடைத்தான் .. அந்த உடைந்த சீப்பின் மேல்  ஒரு காகிதத்தை வைத்துவிட்டு, இன்னும் சில மாற்றங்களை அந்த அறையில் செய்துவிட்டு, தான் வந்த தடையமே அவளுக்கு தெரியாதப்படி பூனை நடைப்போட்டு, அங்கிருந்து கிளம்பினான்..

ஒருவழியாக இசைமழையில் நனைந்து முடித்துவிட்டு கதவை திறந்தவளின் முன் இரண்டு புடவைகள் ஹேங்கரில் மாட்டிவிடப்பட்டு இருந்தது.. ஒரு புடவை அவளுக்கு பிடித்த நீல நிறம்.. இன்னொரு புடவை, அவனுக்கு பிடித்த ஊதா நிறம்..!

“அய்ய்யோ, இது இரண்டுல ஏதாச்சும் நான் சூஸ் பண்ணனுமா ?எனக்கும் சூஸ் பண்ணுற செண்டிமெண்ட்க்கும் தான் ராசியே இல்லையே…எல்லாம் அவன் வேலையாய் தான் இருக்கும்..!!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

 “இம்ம்ம்ம்ம்ம்ம்சை !!!!!!!!!!” என்று ஒரு முறை அவனை சபித்தவள் அப்போதுதான், அறைக்கதவை பார்த்தாள்..

“ நாம குளிக்க போனப்போ இந்த எரும, இங்க இல்லையே! ..ச்ச கதவை லாக் பண்ணவே இல்லையோ…!!!!போச்சு இவன் அட்வைஸ் பண்ணியே சாவடிப்பானே..அது கூட பரவாயில்ல.. அப்பா கிட்ட இதை சொல்லிட்டான்னா, என்ன ஆகும் ??”.. எம்டன் மகன் படத்துல வர்ற நாசர் சார் மாதிரி விரைப்பாய் இருக்கும் தனது தந்தையின் முகம் கண்முன் நிற்கவும், வெடவெடத்து போனாள் யாழினி…

“ டேய் நாரதா, இன்னைக்கு ஒருநாளாச்சும் , அப்பாகிட்ட போட்டு கொடுக்காதேடா” என்று அவள் வாய்விட்டு கெஞ்ச, அதே நேரம்,அவளின் விரல்களோ செல்போனை தேடிப்பிடித்து, வாட்ஸ் அப்பில் அவனுக்கு அதே வசனத்தை மெசேஜாய் அனுப்பியது…இந்த மாதம் அவனுக்கு அவள் பதிவு செய்து வைத்திருந்த பெயர் “ இம்சை” .. மாதாமாதம், அவனது பெயர் அவளின் செல்போனில் வெவ்வேறாய் பதிவு செய்து வைக்கப்படும்.. உடனே பதில் அனுப்பி இருந்தான் அவளின் இம்சை !

“ முடியாது போடீ”

“டேய் ..டேய்…பாவம் டா நானு”

“யாரு நீயா?”

“ பின்ன இல்லையா ?”

“ம்ம்ம்ம்ம இல்ல”

“சரி எனக்கு இன்னைக்கு பெர்த்டேல ?அதுக்காக வாச்சும் போட்டு  கொடுக்காத..ப்ளீஸ்… ” என்று சோகமாய் சில ஸ்மைலிகளை இணைத்து அனுப்பினாள்.

“15 நிமிஷத்துல ரெடி ஆகி கீழே வந்தால், எதையும் போட்டு கொடுக்க மாட்டேன்..  இல்லன்னா, ஐ எம் சாரி பேபி!” என்றவன் இரக்கமே இல்லாமல் நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டுவது போல ஸ்மைலி அனுப்பினான்.

 இதுதான் அவனின் கடைசி பதில்.. இனிமேல் பேசிப்பயனில்லை என்று நினைத்தவள், அவனுக்கு பிடித்த நிறபுடவையை அணிந்தாள்…அப்படியாவது அவனை மூளை சலவை செய்யலாம்  என்ற நல்லெண்ணம் தான் !

அடுத்த்து அலங்காரம்!! அதற்கும் அவளுக்கும் வெகுதூரம்.. வெளி தோற்றதிற்கு அவள் முக்கியத்துவம் தந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது! ஆகவே, முகத்தில் லேசாய் பவ்டரை பூசிவிட்டு சீப்பை தேடினாள்.. உடைந்த சீப்பும் லெட்டரும் அவளின் கவனத்தை இழுக்க,அதை அவசரமாய் எடுத்து பிரித்து படித்தாள்.

“ ஹேய் பண்டாரம், இன்னைக்காச்சும் ஆண்டி மாதிரி பின்னல், கொண்டைன்னு போடாமல் பழைய யாழினியாய் ஃப்ரீயா  ஹேர் ஸ்டைலில் வா ..ஹீ ஹீ “ என்று எழுதி இருந்தான்..

“அட மக்கு ! சீப்பை மறைச்சு வெச்சா, கல்யாணம் எப்படிடா நிக்கும்?” என்றுவிட்டு இன்னொரு சீப்பினை எடுத்தாள்…கண்ணாடி முன் நின்று அவள் தலை வாரவும் “ப்லீஸ் டீ எனக்காக” என்று அவன் சொல்வது போல பிரம்மை தோன்றவும், “இம்சைடா” என்று மீண்டும் முணகினாள். கூந்தலில் சிக்கெடுத்துவிட்டு, அவன் சொன்னது போல அப்படியே விரித்துவிட்டாள்… அவளுக்கு பிடித்த முல்லைப்பூ அருகிலேயே இருந்தது… அவன் தான் வாங்கி வந்திருப்பான்.. அதன் பக்கத்திலும் ஒரு பேப்பரில் “ப்லீஸ்டீ” என்று எழுதி இருந்தான்..

“ டேய் எரும்,இன்னைக்கு நீ கொஞ்சம் ஓவரா சீன் போடுற மாதிரியே இருக்கு” என்று முணுமுணுத்தபடி பூவை வைத்தவள், எப்போதும் வைக்கும் மங்காத்தா பெரிய பொட்டை விடுத்து அவள் நெற்றிக்கு பொருத்தமான அளவில் சிறிய பொட்டை வைத்தாள்.

“யாழினி..இன்னுமா ரெடி ஆகல?” வெளியில் இருந்து நம்ம எம்டன் அப்பா, குரல்கொடுத்தார்..

“வந்துட்டேன் பா” என்றவள் அறையில் இருந்த அன்னையின் புகைப்படத்தின் முன் நின்றாள்..

“ அம்மா, இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்.. உங்க ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்… நான் எப்பவும் அப்பாமனசு நோகாமல் நடந்துகனும்” என்று வேண்டினாள்.. அவன் கொடுத்த 15 நிமிடங்களில் இன்னும் மூன்றே நிமிடங்கள் இருந்ததால், சேலை கட்டி இருந்தாலும் தன்னால் முடிந்தவரை வேகமாய் ஓடினாள் யாழினி..

அங்கு சிறுவர்களுடன் பலூன் ஊதி கொண்டிருந்தவனின் கண்களில் அவளின் கால்கொலுசு தென்படவும் ரசனையுடன் நிமிர்ந்தான் தமிழ்.. தமிழ் என்கிற யாழினியின் இம்சை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.