(Reading time: 5 - 10 minutes)

01. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

ந்த குற்று செடி தன்னை மறைக்குமா என்று தெரியாமல் கை வைத்து வாய் மூடி மூச்சு சத்தம் வெளிவராமல் மறைந்து உட்கார்ந்திருந்தால் அவள் யாரை பார்த்து பயம் என்ன என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை தன்னை யாரோ துரத்துவது போல் உணர்ந்தாள் பயந்து பொய் ஓடி ஓடி கால்வலிக்க இப்போது அமர்ந்து விட்டாள் மறைவாக .

மனதில் கந்தர் சஷ்டி கவசம் சொல்லி கொண்டே இருந்தாள் ... மனதில் வேலவனை நினைத்து கண்களில் கண்ணீருடன் அவள் அமரும் நேரம் காதில் அமிர்தமாய் ஒலிக்கிறது அந்த குரல் அந்த குரல் காதில் கேட்டவுடன் அவள் மனதில் ஒரு நிம்மதி பரவுகிறது .. அந்த குரல் வந்த திசையை நோக்கி மெதுவாக நகரும் பொது ...

தொபுக்கடீர் என்று கீழே விழுந்தாள் ... விழுந்த வேகத்தில் அன்னிச்சை செயலாய் கத்த  போனவள் சூழ்நிலை உணர்ந்து தன்னை அடக்கினால் ..அவள் இருந்த இடம் அது அவள் வீடு ..அவள் படுக்கை அரை ... அவள் தன்னையே பார்த்துகொண்டால் தான் அணிந்து இருந்த துணி நன்யும் அளவு வியர்வை வந்து இருந்தது ..அந்த கனவின் பயங்கரம் காரணமாக அவள் உடல் இன்னும் நடுங்கி கொண்டு இருந்தது 

நா வறண்டு போக கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் உணர்ந்தால் நேராக உட்கார்ந்து பக்கத்துக்கு டேபிள் இருந்த தண்ணீர் எடுத்து குடித்தாள் ... கொஞ்சம் படபடப்பு அடங்கியது மணி பார்த்தாள்  4 என்று கட்டியது  கடிகாரம் சரி இனி எப்படியும் தூக்கம் வராது என்று தோணி விட சரி ஒரு காபி போட்டு குடிக்கலாம் என நினைத்தால் .. அவளுக்கு அதிகாலை காபி எப்போதும் பிடித்தமான ஒன்று ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவள் எழும்போது ..அவள் புடவை எதிலோ மாட்டியது போல் உணர்ந்த்தால் கண்டகனவின் தாக்கம் குறையாத நிலையில் பயம் அடிவயத்தில் புளிகரைக்க ஆ என வீரிட்டு கத்தி விட்டாள் ......

ஐயோ அக்கா  என்ன ஆச்சி என்று பெடில் இருந்து எழுந்தாள்  அவள் தங்கை சிவரஞ்சினி ... 

அவளை பார்த்த ப்ரபன்ஜினி கண்கள்ளில் கண்ணீர் வர சிரித்தாள் ... அங்கே சிவா கையில் இவள் புடவை முந்தனி இருந்தது 

அவள் தங்கை எப்போதும் அம்மா முந்தானை பிடித்துகொண்டு தூங்குவாள் ..அம்மா இறந்த பிறகு அவளுக்கு எப்போதும் அக்க முந்தானை வேண்டும்..பல நாட்கள் அவள் குழந்தை போல் தூங்கும் அழகை இவள் ரசித்து இருக்கிறாள் 

இருந்தாலும் கனவின் பயம் இவள் கதி விட்டாள் ...

ஒருவழியாக கனவை பத்தி சொல்லாமல் தங்கஎலம் சமாளித்தாள் ... அவளோ அர்த்தராத்திரியில் இப்படி எலுபிட்டாயே என்று திட்டி கொண்டே தூங்கி விட்டாள் 

கிட்சென் போகும் மும் காலை  கடன்களை முடிக்க இவள் சென்றாள் ..

அவள் வரும் முன் அவளை பற்றி பார்போம் ....

பிரபஞ்சனி அமைதியான அழகு ..... ரோட்டில் போனால் பார்போரை திரும்பி பார்க்க வைக்கும் முகம்....இயற்கையாகவே  அமைந்த கோடி இடை .. அவள் வயது ஆண்களும் நிமிரிந்து பார்த்து பேசும் அளவு உயரம் இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம் ... சுருக்கமாக சொல்லணும் என்றாள்  பாரதி கண்ட புதுமை பெண் ..

பெற்றோர்கள் இறந்த உடன் தங்கைக்கு எல்லாம் ஆனவள் அவள் ..

தங்கை ரொம்ப செல்லமாக வளர்ந்தவள் அவளுக்கு அம்மா தான்  எல்லாம் பெற்றோர்களின் இல்லப்பு தன்னை விட தன தங்கை ரொம்ப பதித்தது என்று அறிவால் ...

பெற்றோருடன் சொத்தும் போய்விட இவள் தங்கயின் மொத்த  பொறுப்பு மற்றும் வீட்டின் சம்பாத்தியம் இவள் தலையில் விழுந்தது ..

அவர்கள் குடும்பா வக்கீல் உதவியுடன் மீதி இருந்த பணத்தை வருவாய் வரும் முதலீடாக மாற்றியதுடன் தனக்கு ஒரு வேலையும் வாங்கி கொண்டாள் ...

தங்கை கல்லூரி செல்ல இவள் வேளைக்கு செல்ல என நாட்கள் பறந்து கொண்டிருகிறது...

துண்டால் முகத்தை துடைத்து கொண்டே வந்தவள் தங்கையின் போர்வையை சரி செய்து விட்டு .... பல் குக்கரில் பாலை வைத்துவிட்டு ... தங்கைக்கு பிடிக்கும் என தானும் பழகிக்கொண்ட பில்ட்டர் காபி பழக்கத்தால் ....பில்ட்டேரில் காபி பொடியையும் தண்ணீரையும் விட்டாள் ... அதிகாலை பாடல் கேட்பது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று  ...

வெளியே பூஜை அறைக்கு வந்தாள் ... வாடி இருந்த மலைகளை நீக்கி விட்டு திரி தூண்டிவிட்டு விளக்கு ஏற்றினாள் அந்த விளக்கு ஒளியில் தன் டார்லிங் கணேசனை மனமுருக வேண்டினால் ...

அந்த விளகொளியில் அவள் முகம் அன்று மலர்ந்த தாமரை போல் ஜொலித்தது ...

டிவி ஓட விட்டாள்  அதில் 

காதல் கண் கட்டுதே 

கவிதை பேசி கை தட்டுதே 

ஆசை முள் குத்துதே 

அருகில் போனால் தேன் சொட்டுதே 

ஓட இவள் தலையில் அடித்து கொண்டால் ... இவளுக்கு எப்போதும் இளையராஜா பாடல்கள் தான் சரி இருக்கட்டும் என விட்டுவிட்டு ... கிட்சென் பொய் இன்று என்ன சமையல் செய்யலாம் என யோசித்தாள் ..

அபோது தங்கை நேட்ட்று அவளிடம்" அக்கா  அம்மா செஞ்சு தரமாதிரி என்னக்கு உருண்டை குழம்பு வேணும் ... செஞ்சு தருவாயா  என்றாள் ... இவள் சரி என்க அப்போ அதுகூட எனக்கு உருளைக்கிழங்கு பொரியல் ... கீரை மசியல் வேண்டும் என்றாள் .. இவள் தங்கை எப்போதும் இப்படிதான் தாயின் வளர்ப்பு எல்லாமே வேண்டும் அவளுக்கு ..அவள் வேலை எதுவும் செய்ய மாட்டாள் ...

பால் குக்கர் சத்தம் போட்டு கூப்பிட்டது ...காபியை கலக்கி அந்த வாசனை நுகர்ந்து கொண்டே நேரம் பார்த்தாள் .. சமையலுக்கு இனூம் நேரம் இருந்தது...காபி கோப்பை எடுத்து கொண்டு பால்கனியில்  பொய் உட்கார்ந்தாள் ....அவள் மொபைலில் இளையராஜா பாடல்களை ஒலிக்கவிட்டு சேரில்  அமர்ந்தாள் ....

தந்தையுடன் இப்படி அமர்ந்து அரட்டை அடிக்கும் நினைவு வந்தது... சிரித்துகொண்டே காபி குடித்தாள் ... காலை  நேர பறவைகளின் கீச் கீச் சதம் கேட்டு ... தன்  வேலை கவனிக்க சென்றாள் ..

தங்கை விரும்பிய அனைத்தும் செய்தவள் கூடவே சுட்ட அப்பளம் எலுமிச்சை ரசம் என செய்து தாளித்து இறக்கும் பொது ....அந்த எரியவே கமகமத்தது.....

அவசரமாக காபிகலந்து ..கெஞ்சி கொஞ்சி தன்  தங்கை எழுப்பி அவளை குளிக்க அனுப்பிவிட்டு தானும் ரெடி ஆகும்போது இவளது பஸ் டைம் நெருங்கிவிட்டது......  ஓடிவந்த தங்கை இவள் கன்னத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ் க ... குழம்பு வாசம் அளை  தூக்குது என்றாள் ...

அந்த கலை பொழுது இவராக முடிய ஒரு ரம்யமான மனநிலையுடன் அலுவலகத்துக்கு சென்றாள் ...

அவளுக்கு என்ன தெரியும் அவள் வாழ்வில் அனுபவித்த துன்பம் போதாது என்று விதி அவளுக்கு பின்னால் சதி செய்து கொண்டிருப்பது .... கண்ணீர் மட்டுமே துணை ஆகும் என்பதும் ... சிரிப்பு என்பதை மறந்து போவாள் என்பதும்....

தொடரும்

Episode # 02

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.