(Reading time: 8 - 15 minutes)

02. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

சிறு குழந்தை போல தன்னை இறுக கட்டி கொண்டிருந்த யாழினியை பார்த்தான் தமிழ் .. நல்லவேளையாய் அவள் பேசியது தமிழ் மற்றும் புகழைத் தவிர யார் செவிக்கும் எட்டவில்லை .. அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் தமிழ் ..

" அடியே , இங்க என்ன இறுதி சுற்று படம் க்ளைமாக்ஸ் ஆ நடக்கிறது ? எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க .. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணும்மா .. " என்றான் ..மேலும்  " நம்ம வீட்டு விஷயம் யாருக்கும் தெரிய வேணாம் சோ  கொஞ்சம் பொறுமையாய் இரு " என்றும் கூறினான் .. "அய்யயோ அவசரபட்டுடோமோ ?" என்று அப்போதுதான் தோன்றியது அவளுக்கு .. அவனை அணைத்தபடியே எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்தாள் ..

" மயக்கம் போட்டுரு டீ லூசு .. எப்போ சிட்டிவேஷன் சரி இல்லையோ அப்போ தூங்கிடனும் இல்லன்னா மயக்கம் போட்டிடனும் ..அப்போ தான் டக்குனு எஸ் ஆகிட முடியும் .. " சில வருடங்களுக்கு முன் அவளின் ஆருயிர் நண்பன் சொல்லி தந்த வழி அது .. சில நேரம் தனது தந்தையிடமும் , காலேஜில் ப்ரின்சியிடமும் இதை செயல்படுத்தி வெற்றியும் கண்டுவிட்டிருந்ததால் , அதையே பின்பற்றி தமிழின் மேல் மயங்கி விழுவதுபோல சரிந்தாள்  யாழினி ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

" யாழினிம்மா , யாழினி , யாழு " இப்படி அனைவரும் பதற , புகழின் இதழ்கள் கேலியான புன்னகையுடன் வளைந்தன .. அந்த தந்திரத்தை சொல்லி தந்தவனே அவன்தானே ! 

" யாழினிம்மா " என்று மோகன் பதற , அவளை அப்படியே அலேக்காய்  ஏந்தி சோபாவில் படுக்க வைத்தான்  தமிழ் .. 

" அவதான் விரதம் அது இதுன்னு சாப்பிடாமல் இருப்பாளே அங்கிள் ..அதான் மயங்கிட்டா போல ... இருங்க ப்ரெஷர்  செக் பண்ணுறேன் " என்றவன் தனது சூட்கேசை எடுத்து வந்தான் .. வந்திருந்தவர்களில் ஒரு ஆண்டி 

" நல்லவேளை மோகன் , உன் பொண்ணுக்கு டாக்டர் மாப்பிளையை பார்த்திங்க  ! இப்படி மயங்கி விழுந்தால் பதற வேணாம் பாருங்க " என்று பேசி அவரை இயல்பாக்கிட முயன்றார் .. பாவம் அவருக்கு என்ன தெரியும் அடுத்து வெடிக்க போகும் எரிமலையை பற்றி ! யாழினியின் ப்ரெஷரை  பரிசோதித்த தமிழ் அவளை குழப்பமாய் பார்த்தான் .. அதே நேரம் அவளின் மயக்கம் போடும் சமாளிப்பு பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால்  புகழை பார்த்தான் .. 

" அனைத்தும் யாம் அறிவோம் " என்பது போல புகழ் கண்மூடி திறந்து சிரித்திட , "உப்" என பெருமூச்சு விட்டான்   தமிழ் .. அவனது கர்சிப் எடுத்து ஈரமாக்கி அவளின் முகத்தை துடைப்பது போல " ஓவரா நடிக்காத டீ  பக்கி  ..கண்ணு முழிச்சிக்க " என்றான் .. யாழினியின் சிரிப்பை அடக்கி கொண்டு சோர்வை முகத்தை வைத்து கொண்டு கண் விழிக்க , எரிமலை குமுற ஆரம்பித்தது ..

" அறிவே இல்லையா உனக்கு ? நானும் சின்ன பொண்ணுன்னு பார்த்தால் , உன் சேட்டைக்கு அளவில்லாமல் போகுது யாழினி .. அப்படி என்ன விரதம் உனக்கு ? வேளாவேளைக்கு சாப்பிடுன்னு சொன்னா கேட்க மாட்டியா ?" இப்படியாய் ஆரம்பித்த மோகனின் வசனம் இன்னும் 15 நிமிடங்கள் தொடர , மற்றவர்கள் சங்கோஜத்தில் நிற்க, புகழ் வீட்டில் ஒருவன் போல பொறுப்பெடுத்து கொண்டான் ..

" அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் .. நீங்க வாங்க சாப்பிடலாம் " என்று அனைவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று அவர்களை கவனித்தான் .. ஒவ்வொருவராய் அங்கிருந்து நகரும்போதுதான் மோகனுக்கே தான்  கோபப்பட்டது அதிகம் என்று தோன்றியது .. மானசீகமாய் புகழை பாராட்டினான் தமிழ் ..

" தமிழ் இவளை பார்த்துக்கோ .. நான் புகழுக்கு ஹெல்ப் பண்ணுறேன் " என்று அவரும் நகர்ந்தார் .. வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த  யாழினியின் தோளில்  கை போட்டான்  தமிழ் ..

" ஹே குண்டுஸ்  , என்ன டீ மூஞ்சியே சரி இல்லை .. அங்கிள் எப்பவும் கோபப்படுறது தானே ? விடும்மா " என்றான் ..

" அட போடா, நான் எவ்வளோ கஷ்டப்பட்டு மயக்கம் போட்டு என் மானத்தை காப்பாற்றினேன் .. ஆனா ,உன் மாமா ஒரே மூச்சுல என்னை டேமேஜ் பண்ணிட்டார் .. ஸ்கூல் டீச்சர்  நானே , என்னமோ ஸ்டுடண்ட் மாதிரி முட்டி போடுற ரேஞ்சுக்கு  போயிட்டேனே... சுதா , ரகு வேற இங்கதான் இருந்தாங்க .. நாளைக்கு ஸ்டாப் ரூமில் என்  மானம் பறக்க போகுது " என்று அவள் சோகமாய் கூறவும் களுக்கென சிரித்தான் தமிழ் ..

" அதானே பார்த்தேன்... என்னடா திடீர்னு உனக்கு சூடு சொரணை வந்துடுச்சேன்னு பயந்தே போயிட்டேன் ..!" 

" ஆமா ஆமா , எனக்கு சொரனையே இருக்காதுன்ற நம்பிக்கையில் தானே அவனை கூட்டிட்டு வந்த நீ ?" என்றவளின் குரல் உயர்ந்திருந்தது ...

" அதில்லை டீ "

" என்ன நொல்லை டீ ? நான் அவனை கூட்டிட்டு வான்னு கேட்டேனா "

" இல்லைதான் " 

" அதுக்கு அப்பறம் ஏன்டா இந்த வேலை உனக்கு ?"

" யூ மிஸ் ஹிம் டீ ..அது எனக்கு தெரியும் .. "

" வர்ற ஆத்திரத்துக்கு ராஜா ராணில நயன்தாரா ஆர்யாவுக்கு அறை  விட்ட மாதிரி , அறைஞ்சு ஹீரோவா நீன்னு கேட்கணும் போல இருக்கு "

"  ஓஹோ அப்பறம் .. "

" அப்பறம் என்ன அப்பறம் ? விளையாட்டுக்கு எல்லாம் சொல்லல தமிழ் .. நிஜமாத்தான் சொல்லுறேன் அவனை திருப்பி அனுப்பிடு " என்றாள்  யாழினி .. எந்த உணர்ச்சியும் காட்டாமல் யாழினியை பார்த்தான் தமிழ் .. அவனுக்கு தெரியும் அவள் இன்னும் பேசி முடிக்கவில்லை ..அவள் உணர்ச்சி வசப்பட்டால் , கொஞ்சம் கொஞ்சமாய் இடைவெளி விட்டு பேசி கொண்டே இருப்பாள் .. மனதில் இருப்பதை மொத்தமாய்  கொட்டியபிறகுதான்  அவளால் நிம்மதியாகிட முடியும் .. ஆனால் , தற்பொழுது அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இந்த பேச்சு தேவை இல்லை என்று அவனுக்கு தோன்றவும் , அவளை அலேக்காய் தூக்கி கொண்டு அவளின் அறைக்கு சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.