(Reading time: 10 - 20 minutes)

05. பைராகி - சகி

bhairagi

காலத்தினால் உருவான யாதும் நிரந்தரமானவை தான்!!!அழியக்கூடியது என்பது எல்லாம் வஸ்துகளே!!காலத்தினால் உருவான வாயு நிரந்தரம்.ஆனால்,அதன் ஊடகமான விருட்சமோ அழிவை ஏற்கலாம்!!காலத்தினால் உருவான ஆத்மாவோ நிரந்தரம்!ஆனால்,அதன் வஸ்துவான தேகமோ அழிவது நிச்சயம்!!இயற்கையாக பிறந்த எதுவும் தனது வரலாற்றினை தொலைப்பதில்லை...மாறாக,மறைக்கவே செய்கின்றன...

"என்ன சொன்னான் அவன்?"-கண்கள் சிவக்க ரௌத்திரத்தில் கேட்டான் ராகவ்.

"அந்தக் கோட்டையை விட்டுக் கொடுக்க முடியாதாம் சார்!"

"டேமின்!"-அவன் அருகிலிருந்த கண்ணாடி சிலையை தள்ளி உடைத்தான்.

அவ்வழக்கறிஞரின் சட்டையை பற்றி,

"இதை சொல்ல தான் வந்தியா?"-என்று சீறினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவர் முகம் அச்சத்தில் வெளிறி போனது.அவன் அவரை பிடித்து கீழே தள்ளினான்.

"அவன் பெயர் என்ன?"

"ஆதித்யா!"

"ம்..என்ன?"

"ஆதித்யா சார்!"

"ஆதித்யா...."-அவன் உச்சரித்த குரலில் குரோதமே தொனித்தது.

ஜென்ம ஜென்மமான குரோதம்! அவன் நாமத்தை கேட்கையில் உடலெல்லாம் எரிந்தது ராகவிற்கு!!

பூஜைக்காக மலர்களை பறித்து கொண்டிருந்தாள் யாத்ரா.

குளக்கரையில் அழகழகாய் மலர்ந்திருந்தன மலர்கள்!!

கண்ணை பறிக்கும் எழிலோடு இயற்கையானது அவளோடு இசை பாடிக்கொண்டிருந்தது.

"ம்கூம்!"-தொண்டைய செறுமிய விதமே வந்தவர் யார் என்பதை அவளுக்கு விளக்காமல் விளக்கியது.

"என்ன சார்?இங்கே என்ன வேலை உங்களுக்கு?"

"உன்னை சைட் அடிக்கிறது தான்!"-சட்டென அவன் கூறிய பதிலால் திடுக்கிட்டு திரும்பினாள் யாத்ரா.கண்களில் குறும்பு மின்ன நின்றிருந்தான் அவன்.

அவள் மீண்டும் திரும்பி மலர்களை பறிக்க ஆரம்பித்தாள்.

அவளருகே வந்து பூத்திருந்த மலர்களை வருடினான் ஆதித்யா.

அது ஏனோ இவளுக்குள் சிலிர்ப்பூட்டியது.

"பேசாம போ!இங்கிருந்து!"

"இரு..நான் உன் பேச்சுக்கு வந்தேனா?நான் என் டார்லிங்க்ஸிடம் ரொமான்ஸ் பண்றேன்!உனக்கு என்ன?நீ உன் வேலையை பார்!"-இதுதான் தருணம் என்று வெறுப்பேற்ற தொடங்கினான் அவன்.

அவள் அவனை முறைத்துக்கொண்டே மலர்களை பறிக்க ஆரம்பித்தாள்.

"எவ்வளவு அழகா இருக்க நீ?"-அவனது வாக்கியத்தை கேட்டவள் திரும்ப,அவன் பூக்களிடம் பேசுவதாய் பாவனை செய்தான்.

"உன்னை தான்...எவ்வளவு அழகா இருக்க?கலாரசிகன் உன்னை படைத்தவன்...உன்னை இப்படியே பார்த்துட்டே இருக்க ஆசை!"

"ஹலோ!"

"எஸ் மேடம்!"

"என்ன பண்றீங்க?"

"ரொமான்ஸ்!"

"கெஞ்சம் உங்க ரொமான்ஸ்சை விட்டுட்டு எனக்கு தாமரைப்பூ எடுத்து தருகிறீர்களா?"

"கண்டிப்பா!மகாராணி சொல்லி சேவகன் செய்யாம இருப்பானா?"-என்று குளத்தின் அருகே சென்றான்.

தாமரை மலர்கள் சற்று தொலைவில் தான் மலர்ந்திருந்தன.

மெல்ல குளத்தில் இறங்கியவன் தாமரை மலர் ஒன்றை பறித்து தன்னவளுக்காக எடுத்து கரை சேர்ந்தான்.சில நொடிகள் யாத்ராவின் முகத்தை பார்த்தவன் பின் மண்டியிட்டு,யாத்ராவை நோக்கி,

"வில் யூ பீ மை பெட்டர் ஆப்?"என்றான்.

அவனது செய்கையில் திடுக்கிட்டு போனாள் அவள்.அவள் சுயநினைவு அடைய சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

அவனது கரத்திலிருந்து மலரை வாங்கியவள் முகம் சிவக்க அங்கிருந்து ஓடினாள்.சற்று தொலைவில் சென்றவள் எதிர்ப்பாராமல் ஒருவனின் மீது மோதினாள்.

"ஓ..ஐ ஆம் ஸாரி சார்!"-அவளின் அழகிய மன்னிப்பினை ஆழமாக ஊடுருவியது அவனது பார்வை!!

மீண்டும் நாணத்தோடு அங்கிருந்து ஓடிவிட்டாள் அவள்.

அவளது ஸ்பரிசம் பட்ட தோளை  தொட்டு பார்த்தான் அவன்.அவன் ராகவ்!!

எதையோ எண்ணிக்கொண்டு மதுவை தொண்டையில் சரித்துக் கொண்டான் அவன்.

அன்று காலை அவன் அணிந்திருந்த சட்டையை எதிரில் மாட்டி இருந்தான்.அதனருகே சென்று அதன் தோள் பகுதியை இறுக்கமாக பற்றினான்.கண்கள் மூடி எதையோ நினைவு கொணர்ந்தான்.

அவளின் நாணத்தோடு கூடிய எழில் முகம் விழிகளில் வந்து போனது.

"என்னாச்சு?"-செந்தில்நாதனின் குரல் அவனை திடுக்கிட செய்யவில்லை.

"இன்னிக்கு ஒருத்தியை பார்த்தேன்!"-அழைக்கும் மூலமே மரியாதை அற்று இருந்தது.

"தங்க சிலை மாதிரி இருந்தா!"

"யாரு அது?"

"தெரியலை...இதுவரைக்கும் அவளை இங்கே பார்த்தது இல்லை!ஆனா,அவ அவ்வளவு அழகு!!"-தன் மகனின் பேச்சானது தந்தையை திடுக்கிட தான் செய்தது.அவன் எவ்வளவு அட்டூழியம் செய்தாலும் இதுவரை பெண்ணிடம் அவன் கவனம் சென்றதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.