(Reading time: 25 - 49 minutes)

22. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

ஸ்தம்பித்துப் போனாள் மனோ…இன்பாவின் மொபைலில் இருந்து அழைப்பு எனும் போது அசட்டையாகவும் நினைக்க முடியவில்லை. அவசர அவசரமாக அவள் பார்வை மித்ரனை நோக்கி ஓடுகிறது. நிச்சயமாக இதை சமாளிக்க அவன் தான் வந்தாக வேண்டும்….

“ உன் ட்ராமா டைரக்டர் ஹஸ்பண்ட்டயோ இல்ல வேற யார்ட்டயோ இதை சொன்ன……உனக்கு இன்பா உயிரோட கிடச்ச மாதிரிதான்…. உன் வீடு முழுக்க என் மானிடர்லதான் இருக்கு…” அதற்குள் இவள் எண்ணத்திற்கு விலங்கிட்டு தடை போட்டாள் தார்கிகா…

அசட்டை செய்யதக்க கிள்ளை தொனிதான்…. ஆனால் அது சொல்லும் விஷயம்? மனோவுக்குள் படபடப்பு ஏறத் தொடங்கியது…..இப்போது இவள் என்ன செய்ய வேண்டும்?

“ எனக்கு அண்ணிட்ட பேசனும்….” அழுத்தமாய் அறிவித்தாள் மனோ.

“அதெல்லாம் முடியாது….”

“அப்ப அண்ணி உன்ட்ட இல்லை…….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இன்பா மொபைல்ல இருந்து தானே பேசுறேன்…..”

“மொபைலமட்டும் நீ திருடி இருப்ப…”

“வெயிட் பண்ணு….திரும்ப கூப்டுறேன்…”

 தார்க்கியின் குரலில் விரைத்தாள் மனோ…

நிச்சயமாக இந்த தார்க்கிகா கூட யாரோ சேர்ந்துதான் இன்பாவ கடத்தியிருக்கனும்… அந்த நபர்ட்ட இப்ப அடுத்து என்ன சொல்லனும்னு கேட்க போய்றுக்கா இந்த தார்கிகா…..

அப்டின்ன இன்பா தார்கிகா கூட இல்லைனு அர்த்தமோ…..வேற இடத்துல அடச்சுறுக்காங்களோ!!!! தார்க்கிகா ஒரு பொண்ணுன்ற வகையில இன்பா அவ கூட இருக்கிறது சேஃப்…..இல்லைனா? நினைக்கவே பயங்கரமாய் இருக்கிறது மனோவுக்கு… 

ஒவ்வொரு விஷயமும் அதீத முக்கியம்….அதுவும் மித்ரனை இதில் உள்ளே கொண்டு வரும் வரை இந்த விஷயத்தை இவள் மட்டும் தான் கையாள வேண்டும் என்ற நிலையில்… மனோ கடும் தவிப்பாக காத்திருந்தாள்.

அடுத்த இரண்டாம் நிமிடம் மீண்டும் அழைப்பு ……இது வேறு எண்ணிலிருந்து…. பேசியது இன்பா.

“மனோ….சாரி மனோ நிச்சயமா இப்டி வந்து மாட்டுவேன்னு நினைக்கலை மனோ….ஜோவன் அம்மா தவறிட்டாங்கன்னு ஜோவன் நம்பர்ல இருந்து மெசேஜ் வரவும் யோசிக்காம வந்து மாட்டிடேன்….. இவங்க பணம் தான் கேட்பாங்க போல…..தயவு செய்து கொடுத்து சீக்கிரம் கூட்டிட்டு போய்டு மனோ……இங்க இருக்கிற ஒருத்தன் பார்க்கிறதும் பேசுறதும் எதுவும் சரி இல்ல…..”

என்ற இன்பாவின் குரலில் தவிப்பு, பரிதவிப்பு, பயம், குற்ற உணர்வு அவசரம் என அத்தனையும் இருந்தது….

அதை கேட்டதும், அத்தனையும் நின்று போனது போல் ஒரு உணர்வு மனோவுக்கு….. மிரண்டு போனாள் அவள்….இதென்ன இவள் இயல்பு வாழ்க்கையில் பார்த்து பழகிய விஷயங்களா….? இங்க இருக்கிற ஒருத்தனும்னு சொன்னா…உள்ள நிறைய பேர் இருக்காங்கன்னு அர்த்தம் ஆகுதே…..

ஆனால் அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டாள்….. ரிலாக்‌ஸ் மனோ ரிலாக்ஸ்‌….. டென்ஷனாறதுனால ஒன்னுமே நடக்கப் போறது இல்ல….தன்னைத்தானே இயல்பாக்க முயன்றாள்…

ஒரு கணம் மனதிற்குள் மித்ரனை கொண்டு வந்தாள்…..ரொம்ப ப்ரஷர்ட் சிச்சுவேஷன்ல ரொம்பவும் கேஷுவலா இருப்பது அவன் வழக்கம் என ஞாபகம் வருகிறது இவளுக்கு….

“பயப்படாதீங்க அண்ணி…” இவள் ஆரம்பிக்கும் போது அங்கு கால் கட் ஆக…. அவசர அவசரமாக அந்த எண்ணை திருப்பி அழைத்தாள்….ஸ்விட்ச் ஆஃப்……

அடுத்த சில நிமிடங்கள் இவள் ஃபோனோடு போராட இப்போது  இன்பா எண்ணிலிருந்து அழைப்பு…..மீண்டும் தார்கிகா

“சரி தார்கி உன் டீல் என்ன…..?” ரொம்பவும் இயல்பு போலயே கேட்டாள் மனோ.

ஆனால் மனதுக்குள்ளோ ‘இன்பாவ கடத்துனதுக்கே இந்த லூசு கம்பி எண்ணும்…..ஆனாலும் செய்துறுக்கு……அதுக்கும் மேல என்ன லாஜிக்ல இன்பாவ பத்தி என்ன மிரட்டுறா? பணம் வேணும்னாலும் மித்ரன் அம்மாட்ட  கேட்டாலாவது அர்த்தம் இருக்கு….’ என ஓடுகிறது இவள் சிந்தனை ப்ராசஸ்

“பெருசா ஒன்னும் இல்ல….. ஒரு 20 க்ரோர்ஸ் வேணும்…. என் அப்பா பிஸினஸ் மொத்தமும் போச்சு….அதுக்கு முன்ன இது ஒன்னுமே கிடையாது….”

“ஓ” என்றாள் மனோ….அதிர்ச்சியாய் மிரட்சியாய் எதையும் தார்கிகாவிடம் காட்டிக் கொள்ள பிடிக்கவில்லை இவளுக்கு….. அள்ளிக் கொல்லும் அத்தனை உணர்வையும் அடி நாக்கில் மறைத்தாள்.

இத்தனை பணத்தை இவளிடம் வந்து என்ன அர்த்தத்தில் கேட்கிறாள் இந்த தார்கிகா என்றே புரியவில்லை மனோவுக்கு…… எப்படி பார்த்தாலும் எல்லாம் மித்ரன் பேரிலும் வர்ஷன் இன்பா பேரிலும் இருக்கிறது….இதில் யாருக்கும் தெரியாமல் இவள் தர வேண்டும் என்றால்…????

“நீதான இப்ப பயோஸி சி ஈ ஓ வாமே…..பயோசில இருந்து எடுத்து தா….. எதாவது ப்ராஜக்டுக்கு அலாட் செய்ததா கணக்கு காமிச்சுடு….வெளிய தெரியாமலே போய்டும்…” தார்க்கிகா திட்டத்தை சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.