(Reading time: 15 - 30 minutes)

23. என் மனதை தொட்டு போனவளே - VJ G

en manathai thottu ponavale

வர்கள் இருவரிடமும், தன் நிலைமையை எடுத்துச் சொன்னாள்,

‘தான் இப்போது தன் குடும்பத்தோடு இருக்க வேண்டியது அவசியம் , இத்தனை வருடங்கள் நாங்கள் பிரிந்து இருந்தோம் இனிமேலும் அது முடியாது, அதனால் நாங்கள், உங்கள் இருவருக்கும் இந்த ஹோட்டலை பார்த்துக் கொள்ள முடியுமானால், பொறுப்பை உங்களிடம் தரலாம் என்ற முடிவு எடுத்திருக்கிறோம், என்ன சொல்கிறீர்கள்,'

'சித்ரா, எனக்கு இப்போ ஒன்னும் பெரிய கமிட்மென்ட் கிடையாது, நான் பொறுப்பு எடுத்துக்கலாம், ஆனா நீ இல்லாமல் எப்படி,'

'சரோஜ், உனக்கு என்ன நான் இருக்கனுமா என்ன, அப்பப்போ, இவர் பிசினெஸ் விஷயமா, இங்கே வருவார், அப்போ இங்கே வந்து கணக்கெல்லாம் பார்த்துப்பார், அப்பப்போ நானும் அவருடன் வருவேன், அப்புறம் என்ன,'

'ராகவேந்தர் நீ என்ன சொல்றே, சரோஜோடு ஒத்து போய், இங்கே பார்த்துக் கொள்வாயா, உங்க இருவருக்கும், சம்பளம் இல்லாமல் வரும் லாபத்தில் பத்து, பத்து பர்சண்ட் கொடுக்கிறோம்,ஆனால் இருவரும் ஒத்து ஒரு மன அபிப்ராயத்தோடு வேலை செய்ய வேண்டும்,' என்றாள், சரோஜும், ராகவேந்தரும் ஒருத்தரை, ஒருத்தர் பார்த்துக் கொண்டனர், என்ன தோணியதோ, ராகவேந்தர், எனக்கு ஒண்ணுமில்லை மேடம் அவங்க என்னோட ஒத்துப் போறதா இருந்தா, நானும் ஒத்துழைக்க ரெடி,' என்றான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

'நானும் ரெடி, சித்ரா, நாங்க ரெண்டு பேரும், பார்த்துக்கொள்கிறோம், நீ கவலைப் படாதே,' என்று கூறினாள், சரோஜ்

'நீ இவ்வளவு வருஷமா கஷ்டப் பட்டது எங்களுக்கு தெரியும், இனி உன் மக்களோடு நீ சந்தோஷமாக, வாழ வேண்டும்,' என்று கூறினாள், சரோஜ், அவள் கண்களில் நீர் துளிர்த்தது, சித்ராவுக்கும் கண்ணீர் துளிர்த்தது, ருத்ரா, அவளை தோளோடு அனைத்துக் கொண்டான்,

'நான் அக்ரீமெண்ட் கொண்டு வந்திருக்கிறேன், அதைப் படித்துப் பார்த்து கையெழுத்து போடுங்கள், இனி  இந்த ஹோட்டலின் முழு பொறுப்பும், என் புருஷனுடையது, அதனால் அவர் என்ன மாறுதலோ, முடிவோ எல்லாம் அவருடையது, அதனால் அவர்தான் அடிக்கடி இங்கு வருவார், கணக்கையெல்லாம் அவர்தான் பார்ப்பார், ஒரு ஆளை அக்கௌண்ட்ஸ் எழுத போட்டு விடுகிறோம், என்று எல்லாம் விரிவாக சொன்னாள், இந்த ஒரு வாரத்தின் கணக்கை கேட்டு சரி பார்த்தாள், ருத்ராவிடம் பகிர்ந்துக் கொண்டாள்,

ருத்ரா கணக்கை சரி பார்த்தான், எல்லாம் அவனை பொருத்தவரை சரியாக இருந்தது, அவள் தன் பர்சனல்,பேங்க் கணக்கை காண்பித்தாள், 'இதை ஏன் என்னிடம் காண்பிக்கிறாய்,' என்று கேட்டான்

'இனி நீங்கள் தான் இந்த பொறுப்பெல்லாம் ஏற்க வேண்டும், இனி என்னால் முடியாது,'

அவன் அதைப் பார்த்தான், ஒன்னே கால் கோடி, அவனால் நம்ப முடியவில்லை, தன் மனைவி கோடீஸ்வரி, 'என்ன மேடம் கோடீஸ்வரி,இந்த வெறும் ஆளை, எப்படி மணக்கச் சம்மதீச்சிங்க?' என்று அவளை வம்பிழுத்தான்,

'இந்த பணத்துக்கு இப்போ வால்யு இல்லீங்க, நீங்க வரதுக்கு முன்னால், நம்ம ரூப்புக்கு பிற்காலத்துக்கு  வேண்டும் என்று, நினைத்தேன், இப்போதோ, நீங்கள் வந்துவிட்டீர்கள் , எங்களுக்கு இதெல்லாம் எதற்கு,' என்றாள்

அவன் அவளை இழுத்துக் கட்டிக் கொண்டான், 'இவ்வளவு பணம் வரும்போது,நீயும் ரூப்பும், எங்கேயாவது லீவு நாட்களில் வெளியே போய் என்ஜாய், செய்திருக்கலாம் இல்லையா,'

'நீங்கள் தான், என் முழு சந்தோஷமும், நீங்கள் இல்லாமல், நான் என்ன என்ஜாய் செய்வது,'

'சரி இனிமேல் நம் ரூப்பின் ஒவ்வொரு லீவுக்கும் நாம் எங்கேயாவது போகலாம், அவனுக்கும் அப்போதுதான் வெளி உலகம் தெரியும்,' என்றான் ருத்ரா

'இன்னும் பதினைந்து நாளில், தீபாவளி வருகிறது, இந்த ஹோட்டலில் வேலை செய்கிறவர்களுக்கு டிரஸ் வாங்கிக் கொடுப்பேன், கூட ஆயிரம் ரூபாயும் கொடுப்பேன், அதையும் இப்போ செய்துவிடலாம், பிறகு நம் வீட்டாருக்கும் துணிகள் எடுக்க வேண்டும்,' என்றாள்,

'சரி நீ எங்கே எடுப்பாயோ, நாளைக்கு அதை முடித்து விடலாம்,  நாளை காலை நம் ரூப்பின் ஸ்கூலுக்குப் போய் டிசி வாங்க வேண்டும், பிறகு மத்த வேலையெல்லாம் பார்க்கலாம், உன்னுடைய இந்த வீட்டை பராமரிக்க ஆட்களை போடனும், அதனால் இன்னும் கொஞ்சம் வேலைபாடுகளை செய்து அதை கெஸ்ட் ஹவுஸ் மாதிரி செய்யலாம், என்ன சொல்கிறாய்,'

‘நீங்கள் என்ன செய்தாலும் சரி, இது என் வீடு மட்டுமில்லை, நம் வீடு, நான் தான் சொன்னேனே இனி எல்லாம் உங்கள் பொறுப்பு, என்னையும் சேர்த்து, அதனால்….’

'சரி அதை நான் ஏற்பாடு பண்ணுகிறேன்,' என்று ருத்ரா சொன்னான்

'சரி,' என்றாள், அவளுடைய பணமெல்லாம், எப்படி போட்டிருக்கிறது என்று பார்த்தான், 'ஒரு ஆடிட்டரை பார்க்க வேண்டும், என் பிசினெஸ் ப்ரெண்ட் இருக்கார் அவரிடம் பேசுகிறேன், அவர்தான் உன் ஹோட்டலைப் பற்றி சொன்னார், எப்போது வந்தாலும் அங்கே போகலாமா என்று கேட்பார் நான்தான் பிறகு பார்க்கலாம், என்று சொல்வேன் அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போது புரிகிறது, எது எப்போது நடக்க வேண்டுமோ, அது அப்போது நன்றாகவே நடக்கும் என்ற கருத்து, சத்தியம், ' என்றான் மனத்தாங்களோடு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.