(Reading time: 22 - 43 minutes)

18. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

ரவு முழுதும் உறக்கம் இல்லாததால் இரு கண்களிலும் எரிச்சலாய் இருந்தது சுசீக்கு.காலையில் வெகு சீக்கிரமே மதிவதனியைக் காணக் கிளம்பிவிட்டாள்.பாவம் மதி ஹஸ்த குப்தன் கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டான் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக உள்ளான் சிகிச்சை முடிந்து உடல் நிலை சீரானதும் அவனுக்கு மரண தண்டனை வழங்க மன்னர் முடிவெடுத்துள்ளார் என்பதை அறிந்த பிறகு கடந்த ஏழு நாட்களாக எப்படியெல்லாம் இளவரசி தவித்துப் போகிறார்?எப்படியெல்லாம் புலம்புகிறார்?நேற்று ஹஸ்தனைக் காண வேண்டும்..காண வேண்டுமென அழுதே விட்டார் அல்லவா?அவரைக் காண முடியுமா? காணமுடியுமா?ஏதாவது உபாயம் சொல்வாயா?என்று என் கைபிடித்தல்லவா கேட்டார்.இப்படி ஒன்றுமறியாதவர் போலப் பேசுகிறீர்களே மதி.. சிறைச்சாலைக்குப் பெண்கள் செல்வது அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எவ்வளவு கடினம்?சிறைச் சாலை இருக்குமிடம் செல்வதோ அங்கிருக்கும் கைதிகளைச் சந்திப்பதோ மகாராணிக்குமே கூடஎளிதான செயல் இல்லை அப்படியிருக்க நான் ஒரு சாதாரண சேடிப்பெண் இதில் நான் என்ன உபாயம் சொல்வது என்று கூறி அவரை சமாதானம் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது? கடந்த ஒருவாரமாய் சரியாக  உணவு கூட உண்ணவில்லையே.   தாயையும் தந்தையையும் கூட சந்திக்கவில்லையே? தம்பி சுந்தர பாண்டியனை நிமிடமும் பிரிந்திருக்க விரும்பாதவர் அவரைப் பற்றி பேசக்கூட இல்லையே?காதல் இப்படியெல்லாம் செய்யுமா என்ன?என்று எண்ணியவாறு இளவரசி மதிவதனியின் இருப்பிடம் நோக்கி நடந்தவளை

சுசீ..சுசீ..நில்லு..கொஞ்சம் நில்லேன் என்ற அழைப்பு மேலே நடக்கவிடாமல் நிறுத்தியது.

நின்றுகொண்டிருந்த சுசீயின் அருகில் வந்தார்கள் அந்த இரு சேடிப்பெண்களும்.சுசீ ..இளவரசி மதி எப்படி இருக்கிறார்?சோழ இளவரசர் விமலாதித்தன் கொலை செய்யப்பட்டதால் அவர் மிகவும் வருத்தத்தில் உள்ளாரா?பாவம் நம் இளவரசி..இளவரசி மட்டுமா?நம் மன்னர்.. மகாராணியும் கூட மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்..பாண்டிய நாட்டின் பாதுகாப்புக்கு என்ன நேரிடுமோ?இளவரசியின் எதிர்காலம் என்னாகுமோ எனற அச்சத்தில் மன்னரும் ராணியும் மட்டுமல்ல இந்த நாடே உள்ளது..சொன்ன அவர்களின் குரலில் அரச குடும்பத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசமும் பாண்டிய நாட்டின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் விளங்கியது.

அவர்களிடம் எதையும் அதிகமாகச் சொல்லாமல் ஆம்..என்பதைப்போல் தலையை ஆட்டினாள் சுசீ.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சுசீ..முக்கியமான ஒன்றைச் சொல்லவே உன்னை அழைத்தோம்..மகாராணி உன்னை உடனடியாகக் காண வேண்டுமாம்.கையோடு அழைத்து வரச் சொன்னர்கள்..வா..செல்லலாம்..

என்னையா?சரி வருகிறேன்..எதற்கும் இளவரசியை பார்த்துவிட்டு வருகிறேனே..நீங்கள் செல்லுங்கள்.இதோ நான் வருவதாக மகாராணியிடம் சொல்லுங்கள்.

இல்லை..இல்லை..கையோடு அழைத்துவர மகாராணி உத்தரவு இட்டுள்ளார்...

அப்படியென்ன அவசரமாய் இருக்கும்?புரியவில்லை சுசீக்கு...பாவம் அங்கே அவளுக்காக எப்பேற்பட்டப் பொறுப்புக்கள் காத்திருக்கின்றன..அப்பொறுப்புக்களால் அவள் சந்திக்கப் போகும் கஷ்டங்கள் என்னென்ன.. அக்கஷ்டங்கள் கடைசியாய் அவளை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றன?என்பதை அவள் எப்படி அறிவாள்?

சரி..வாருங்கள்.. என்றபடி அவ்விரு சேடிப்பெண்களுடன் மகாராணி ருக்மாவைச் சந்திக்கக் கிளம்பினாள் சுசீ.

மகாராணி ருக்மாவின் அறை வாசலிலேயே அவ்விரு சேடிப் பெண்களும் நின்றுகொள்ள உள்ளே நுழைந்தாள் சுசீ.

வணங்குகிறேன் மகாராணி அவர்களே..தலை தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கிய சுசீ..அழைத்தீர்களாமே?

என்றாள்..

ஆம்..ஆம்..வா..வா..சுசீ..

மகாராணியின் முகம் இரவு முழுதும் தூக்கமின்மையால் சோர்வாய் இருந்ததைக் கவனித்தாள் சுசீ..அதே சமயம் முகம் பாறைபோல் இறுகிப் போயிருந்ததையும் கண்டாள்.

யாரங்கே?..

மகாராணி....ஓடிவந்தாள் சேடிகளில் ஒருத்தி..

உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம்...

உத்தரவு மகாராணி..ராணியை வணங்கி விட்டு வெளியே சென்றாள் சேடிப் பெண்.

சுசீ..உட்கார்..

இதுவரை ரணியின் முன் அமர்ந்தது இல்லை என்பதால் நின்றுகொண்டே இருந்தாள் சுசீ.

பரவாயில்லை   அமர்ந்துகொள் சுசீ என்றபடி ராணி ஆசனத்தில் அமர அவரின் காலருகே அமர்ந்து கொண்டாள் சுசீ.

ராணி தன்னை எதற்காக அழைத்தார்?அவர் என்ன சொல்லப் போகிறார்?என்று என்ணியபடியே அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சுசீக்கு அவர் கேட்ட முதல் கேள்வியே தலை சுற்ற வைத்தது.அப்படியே அரண்டு போனாள் சுசீ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.