(Reading time: 12 - 24 minutes)

03. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ஹேய்… தைஜூ… சீக்கிரம் வா…” என கிட்டத்தட்ட கத்திக்கொண்டிருந்தார் காதம்பரி…

“ஏண்டி… சதியும் உன்னோட தான படிக்குறா?... பாரு எவ்வளவு பொறுப்பா சீக்கிரமே காலையிலேயும் படிக்குறதுக்கு கிளம்பிடுறா… இப்பவும் பாரு எவ்வளவு பொறுப்பா காலேஜுக்கு ரெடி ஆகி வந்துட்டா… நீ மட்டும் ஏண்டி இவ்வளவு லேட் பண்ணுற?... பொறுப்பே இருக்காதா உனக்கு கொஞ்சம் கூட?...” என காதம்பரி பொரிந்து தள்ள,

பல்லைக்கடித்தபடி, சதியையே முறைத்துக்கொண்டிருந்தாள் தைஜூ…

“யாரு இவ பொறுப்பு தான?.. நீங்க பார்க் வந்திருந்தால்ல தெரிஞ்சிருக்கும் அந்த பொறுப்பு பருப்பு எல்லாம்…” என மனதிற்குள் குமுறியபடி இருந்த தைஜூவிடம்,

“இப்போ எதுக்குடி நீ அவளை முறைக்குற?... ஒழுங்கா டிபன்பாக்ஸை எடுத்து பேக்கில் வச்சிட்டு கிளம்புற வழியை பாரு… பாவம் அந்த பொண்ணு… வண்டியை ஸ்டார்ட் பண்ணி வச்சிட்டு இங்கேயே பார்த்துட்டு இருக்குறா நீ எப்ப வருவேன்னு…” என சதியை பாவம் என்று அவர் சொல்ல,

“பாவமா?... அவளா?... சரிதான்… காதம்பரி தாயே… எல்லாம் என் நேரம்… வேறென்ன நான் சொல்ல?... கிளம்பி தொலைக்கிறேன்… இல்லன்னா என்னை கழுத்தை பிடிச்சு தள்ளினாலும் தள்ளிடுவீங்க நீங்க…” என முணுமுணுத்தவளை முறைத்த காதம்பரி,

“என்னடி உனக்குள்ளேயே பேசிட்டிருக்குற?.. சத்தமா பேசித்தொலை எதையும்….” என கடுப்போடு சொல்ல,

“எதுக்கு?... சத்தமா பேசி, உங்க கையால ரெண்டு அடி வாங்குறதுக்கா?..” என தனக்கு மட்டும் கேட்கும்படி சொல்லியவள்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“நான் வரேன்மா….” என சத்தமாக சொல்லிவிட்டு சதியின் ஸ்கூட்டியில் அவளின் பின்னே அமர்ந்தாள்…

“என்னடி போகலாமா?...” என சதி கேட்க, அவளை நாலு அடி அடித்தவள்,

“எருமை மாடே… உன்னால டெய்லி நான் திட்டு வாங்கி தொலைக்கிறேண்டீ…” என கடுகடுக்க,

“ஏண்டி நான் என்ன செஞ்சேன்?....” என பாவமாக பார்த்த சதியிடம்,

“எல்லாம் செஞ்சிட்டு அப்புறம் இந்த அப்பாவி மாதிரி மூஞ்சியை வச்சிக்கோ… உன்னை திட்டுறதுக்கு கூட மனசு வந்து தொலைக்காது…” என்றவள், சதியின் முகம் பார்த்து சிரித்துவிட்டு,

“வண்டியை எடு… போகலாம்…” என்றதும், சதியின் வண்டியும் பறந்தது..

15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய இடத்திற்கு சதியின் ஸ்கூட்டியும் வந்து சேர, அவள் அமைதியாக ஸ்கூட்டியில் இருந்தபடியே, அவள் இருந்த இடத்தின் எதிர்பக்கம் பார்த்தாள்…

“என்னடி… இன்னும் ஆள் நடமாட்டமே இல்ல…” என்ற தைஜூவை திரும்பி பார்த்தவள்,

“ஆள் நடமாட்டமே இல்ல?......” என கேள்விக்குறியோடு கேட்க, தைஜூ நெளிந்தவாறே,

“இல்ல… நான்… முக்கியமான ஆள் இல்லையேன்னு சொன்னேன்… அவ்வளவுதான்…” என மென்று முழுங்க, சதி சிரித்தாள்…

“எந்த முக்கியமான ஆளும்மா?.... இதோ வராரே இவரான்னு பாரு…” என சதி சொன்னதும், தைஜூவின் பார்வை எதிர்புறம் பார்க்க, அவள் கண்களில் ஒரு உற்சாகம் குடிகொண்டது…

“கண்ணுல சந்தோஷமெல்லாம் பயங்கரமா தெரியுதே… அப்போ இந்த ஆள் நடமாட்டம் இல்லன்னு தான் கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீயா?...” என கிண்டலோடு சதி கேட்டதும்,

“போடி… லூசு….” என்றபடி சொன்னாலும் தைஜூவின் பார்வை எதிர்புறம் இருந்த இஷானின் மீதே இருந்தது…

நகரத்தின் மத்தியில் இருந்த கமிஷனர் ஆஃபீஸ் அது… சாலையின் அந்த பக்கம் இருந்தபடி, கமிஷனர் ஆஃபீஸின் வளாகத்தின் முன் யாருடனோ பேசிக்கொண்டிருந்த இஷானை பார்த்தபடி இருந்த தைஜூவை பார்த்த சதியிடம்,

“போதும்டீ… ஓவரா சிரிக்காத… அப்புறம் ஒருநாள் நல்லா அழுவ பார்த்துக்கோ…” என விளையாட்டாக தைஜூ சொல்ல,

“யாரு… நானா?...” என்றவண்ணம் தோளை லேசாக குலுக்கினாள் சதி….

“இந்த ரியாக்ஷனுக்கு ஒன்னும் ஒரு குறைச்சலும் இல்லை…” என்றவள், இஷானை பார்த்தபடியே, “ஏண்டி இந்த நந்தி மட்டும் இருக்கே… எங்கே அந்த இன்னொரு ஆள்?...” என சதியிடம் கேட்க,

“அடிங்க… பேச்சுவாக்குல அடிக்கடி நந்தின்னே சொல்லிட்டு இருக்குற?.. நானும் போனா போகுதுன்னு பார்த்தா, எப்ப பாரு நந்தின்னே சொல்லுற?... என்னடி… கொழுப்பா?...” என சதி முறைத்ததும்,

“இதோடா அந்த நந்தியை நான் சொன்னா உனக்கென்னடீ வந்துச்சாம்?... நான் அப்படித்தான் சொல்லுவேன்… அது நந்தி தான்… நந்தி நந்தி…” என அவள் மீண்டும் அழுத்தி சொல்ல, சதி கடுப்பாகி ஸ்கூட்டியிலிருந்து இறங்க முயற்சித்து அவளை கடித்து குதற முற்பட்ட தருணம், சட்டென்று ஒரு கார் கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைய,

“ஹேய்… அங்க பாரு யாருன்னு…” என சதியின் கவனத்தை அங்கே திருப்பினாள் தைஜூ, தப்பிக்கும் முயற்சியில்…

காக்கிச்சட்டையில் கம்பீரத்தின் மொத்த அழகாய் இருந்தவனை விழிகளில் நிறைத்துக்கொண்டாள் அவள் கொஞ்சமும் அலட்டல் இல்லாது…

“உன் ஜெய் வந்தாச்சு போல….” என தைஜூ அவளின் காதோரமாய் கிசுகிசுக்க, சதியின் உதட்டில் புன்னகை பரவிய தருணம், அவளின் விழிகளின் அவன் மேல் நின்றது ஆடாது அசையாது…

“திரும்பி பாருங்க… திரும்புங்க… ஒரே ஒரு தடவை…” என மனதினுள் அவள் வேண்ட,

அணிந்திருந்த கருப்பு கண்ணாடியினை ஒருமுறை அழுத்தியபடி, “காரை அங்க நிறுத்திடுங்க…” என டிரைவரிடம் சொல்ல திரும்பினான் அவனும் அந்நேரத்தில் மிகச் சரியாக…

அவன் திரும்பிய நொடி, மலர்ந்து தான் போனது அவள் முகமும், அகமும் ஒரு சேர…

இஷானுடன் அவன் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தவள், அதன் பிறகே ஸ்கூட்டியை அங்கிருந்து கிளப்பினாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.