(Reading time: 11 - 22 minutes)

09. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele panithuli

ன் வேலைகளையெல்லாம் முடித்து களைப்புடன் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் மெல்ல தன் கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். நேரம் 11.30 என்று காட்டியது. "அய்யயோ இவ்வளவு நேரம் ஆயிடுச்சா.. அம்மா தூங்காம வெயிட் பண்ணுவாங்களே" என்று எண்ணியவன் அடுத்த இரண்டாவது நிமிடம் காரை தன் வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டின் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கதவில் கையை வைக்கும் முன் திறந்து கொண்டது. கதவின் அருகே நின்ற தன் அன்னையை நோக்கியவன் "என்னம்மா எவ்வளவு தடவை சொல்றது. இவ்வளவு நேரம் எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்னு. இவ்வளவு லேட்டா தூங்கினா ஒடம்பு கெட்டுடும்மா." அவன் பேசுவதை காதில்  வாங்காதவரை போல சென்று டைனிங் டேபிளில் உணவு பாத்திரங்களை எடுத்து வைத்து கொண்டிருந்தவரை பார்த்தவன் "நீ கத்தறத கத்து. நான் இப்படி தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிக்கரிங்க " என்றவனை இப்போது திரும்பி ஒரு ஆழமான பார்வை பார்த்தார். "உன் பிடிவாதத்தை விடவா என்னுடையது பெரியது " என்ற செய்தி அதில் இருப்பதை உணராதவன் அல்லவே.

"ரொம்ப பசிம்மா. நான் போயி டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்." என்றவன் அவரின் பதிலுக்கு காத்திராது தன் அறைக்கு சென்று விட, அவனை நோக்கி ஒரு நீண்ட பெருமூச்சை எறிந்தார். அவருக்கு தெரியும் அவரும் காத்திருந்து உணவு பரிமாறவில்லை என்றால் அவன் இதோ இப்போது சாப்பிடுவதை போல கடமைக்கு கூட சாப்பிட மாட்டான். ஏதோ ஒரு தாயாய் அவரால் இதை மட்டுமே செய்ய முடிந்தது. அவனின் பிடிவாதத்தை மாற்ற இயலவில்லை. ஏதேதோ எண்ணங்களில் இருந்தவர் மகன் வரவும் எதுவும் பேசாமல் அவனுக்கு உணவினை பரிமாறினார்.

"அம்மா ப்ளீஸ் மா இனியும் இப்படி பண்ணாதிங்க எனக்கு கஷ்டமா இருக்கு" என்றவனிடம் "உனக்காக ஒருத்தி வந்தா நான் ஏன்டா இப்படி காத்திருக்க போறேன் " என்றார். அவருக்கு தெரியும் இனி இவன் வாயை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டான் என்று. அமைதியாக சாப்பிட்டு விட்டு "குட் நைட் மா" என்ற படி சென்ற மதியையே பார்த்திருந்த அபிராமி அம்மாள் வேதனையுடன் தன் அறைக்கு சென்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

தன் அறைக்கு வந்தவன் மெல்லிய ஒலியில் தனக்கு பிடித்ததை பாடல்களை ஓடவிட்டவன் மெல்ல பால்கனியில் வந்து அமர்ந்தான். அங்கிருந்த டேபிளில் அவனுக்கான தபால்கள் கிடந்தன. மெல்ல ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்தவன் கீழே ஒரு திருமண பத்திரிகை இருக்கவும் மெல்ல அதை கையில் எடுத்தான்.

                       "சரண் வெட்ஸ் திவ்யா "

என்று அழகான பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்.

உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அதை கையில் எடுத்து பிரித்து பார்த்தான். நாள் நேரம் இடம் எல்லாம் பார்த்து கீழே பார்க்க

"உங்களை அன்புடன் வரவேற்கும் " என்று குடும்பத்தார் அனைவரின் பெயர்களுடன் இருந்தது மிஸ்.மதுமதி என்று கடைசியில்.மெல்ல அதை விரல்களால் வருடியவன் தன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே

போகாதே போகாதே

உன்னோடு சென்றாலே

வழியெல்லாம் பூபூக்குமே

வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்

உயிர் தின்ன பார்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே?

மெய் எழுத்தும் மறந்தேன்

உயிர் எழுத்தும் மறந்தேன்

ஊமையாய் நானும் ஆகினேன்

கையை சுடும் என்றாலும்

தீயை தொடும் பிள்ளைபோலே

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?

நீ என்ன சொல்வாய் அன்பே ?

உயிர் தோழன் என்பாயா ?

வழிபோகன் என்பாயா ?

விடை என்ன சொல்வாய் அன்பே ?

சாயிஞ்சாடும் சூரியனே

சந்திரனை அழவைதாய்

சோகம் ஏன் சொல்வாயா ?

செந்தாழம் பூவுக்குள்

குயிலோன்றை அழவைதால்

என்னாகும் சொல்வாயா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.