(Reading time: 9 - 17 minutes)

23. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

த்தனை அழுத்தமான நிகழ்வுக்குப் பின் அப்படியே கிளம்பி வீட்டுக்குப் போக ஏனோ பிடிக்கவில்லை மனோவுக்கு….அப்படித்தான் அவனும் உணர்ந்தானோ……மித்ரன் அவளை அடுத்து கூட்டிச் சென்ற இடம் ஒரு பீச் ரிசார்ட்….

மனோவுக்கு பீச் என்றால் எப்போதுமே இஷ்டம்…. இப்போதைய நிலையில் காரைவிட்டு இறங்கி அந்த மணல் தரையில் கால் புதைய…..விரிந்திருந்த வானம் கண்டு மனம் திறக்க……ஒருவாறு அவளை ஆண்ட அழுத்தம் குறைய…..

அதுவரை ஏதோ ஒருவகை அமைதியில் இருந்தவள் அருகில் நடந்து வரும் தன்னவனை திரும்பிப் பார்த்தாள்….. ஒரு கணம் அவன் கையைப் பார்த்தவள் மெல்ல தன் விரல் கொண்டு அவன் விரல்களில் கோர்த்தாள்…

ஃஸ்….ஆஆ….. அவன் வலியை வெளியிட…

அச்சோ…….வலிச்சுட்டு போலயே…. இவள் உதறிக் கொண்டு விடுவித்தாள் தன் கையை…. “நான் என்ன கண்ணாடி பொம்மையா…கொஞ்சம் அழுத்திதான் பிடியேன் ….ஒன்னும் ஆகிடாது” இப்போது இவள் கையைப் பிடித்து சற்று இன்னுமாய் தன் அருகில் இழுத்து நடந்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவன் முகமும் அதில் முகிழும் இலகு நிலையும்…. அவன் இவளை கிண்டல் செய்திறுக்கிறான் எனப் புரிய…..இவளுக்குமே ஏனோ எல்லாமே இலகுவாகி அதன் பின் அவனிடம் பேசும் போது ஒரு விளையாட்டுத் தனத்துடனேயே நடந்தவைகளை கேலியோடும் கிண்டலோடும் பேச முடிந்தது….

இன்பாவைப் பற்றி மித்ரன் அடி பட்டு வந்த போது மனோ  இவனை அருகில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துட்டீங்களாண்ணி என ஃபோனில் தவித்த தவிப்பு…அடுத்தும் இரவில் தூங்காமல் இவனருகில் அவளது மறுகல்….மறு நாளும் தொடர்ந்த அவளது அமைதியின்மை….கண்ணில்  தட்டுப்படாத இன்பா…. இதில் கதை படித்துக் கொண்டிருந்தவள் ரெஸ்ட் ரூம் போய்விட்டு ஜூஸ் கொண்டு வர்றேன் என தலை மறைவானது…. இதில் படிப்படியாய் சந்தேகம் வந்து அவளை யாரும் மிரட்டுறாங்களோ என இவன் அவள் மொபைலை தேட…அது அந்நேரம் எங்கேஞ்ச்ட் டோனில்…. இவனை தவிர்த்து அவள் பேசுகிறாள் என்றவுடன் டிபார்ட்மென்ட் ஆக்க்ஷன்…..கால் மானிடரிங் சிக்னல் மானிடரிங் என…. அதில் தார்கிகா மிரட்டல் தெரிய வர….இவன் ஜூஸ் குடிக்கவில்லை…டிபார்ட்மென்ட் ஆட்களை அனுப்பி தார்க்கிகா இருந்த இடத்தை வளைக்க சொல்லி… தார்கிகா அன் கோ அலர்ட் ஆகிடக் கூடாதென மனோவை தடுக்காமல், போதிய பாதுகாப்பு கொடுத்து…இவனும் போய்….இன்பா மீட்பு படலம்…

அடுத்து தார்கிகா கதை என்ன என்று விசாரணைக்குப் பின்தான் முழுதாக தெரிய வரும்…

இதை இவர்கள் பேசி முடிக்கும் போது அந்த ஆளற்ற பீச்சில் இருந்த சில மரவரிசை நிழலில் கால் குவித்து அவன் படுத்திறுக்க…. அவன் குவித்திருந்த கால்களில் முதுகு சாய்த்து இவள்….. அத்தனை இலகுவாய் சென்றிருந்தது உரையாடல்….ஒரு வார்த்தை அவனும் இவளை குறை சொல்லி இருக்கவில்லை….இவளுக்கும் எதையும் ஏற்க முடியாமல் இடித்திருக்கவும் இல்லை…

மனோவின் நீண்ட பின்னல் அவள் முதுகு தாங்கி இருந்த அவன் கால்களில் தவழ்ந்திருக்க….சற்றாய் அதைப் பற்றி இழுத்தான் அவன்….”மனு…”

“ம்…?” இருந்த நிலையில் அப்படியே திரும்பி அவன் முட்டுகளின் மீது தன் கைகளை மடித்து வைத்து அதன் மீது தன் நாடி ஊன்றி அவன் முகம் பார்த்தாள் மனைவி….

“அதெல்லாம் சரி …இன்பா ஜோவன் விஷயத்தை என்ன செய்யனும் நாம? நீ என்னமோ அதுல அவ்ளவா இன்ட்ரெஸ்ட்ஸ்ட் காமிக்காத மாதிரி தோணுது எனக்கு…..”

“ம்…. அண்ணிக்கு மேரேஜாறதுன்றது நிறைய வகையில் அவங்களுக்கு நல்லா இருக்கும்னு தோணுது எனக்கு….ஆனா இந்த ஜோவன் விஷயம் சில இடத்துல உறுத்துது மனுப்பா…”

என்ன என்பது போல் பார்த்தான் அவன்.

“இல்ல…. அண்ணிய வீட்டுக்கு தெரியாம அங்க ஹாஸ்பிட்டல் ஸ்டே பண்ண வர சொல்லிறுக்காங்கல்ல ஜோவன்… ஒரு வேளை அவர் வர சொல்லாம இவங்களா போயிருக்கவும் செய்யலாம்….பட் நாமாளா இருந்தா என்ன செய்வோம் வீட்டுக்கு தெரியாம வந்து இப்டி தங்க கூடாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருப்போம்தானே…..இதென்ன செக்யூரிட்டி அரேஞ்ச் செய்து கொடுத்து கூட வச்சுகிடுறது….? அது கொஞ்சம் உறுத்துது…..அண்ணி ஒரு வேளை பிடிவாதம் பிடிச்சி தங்கியிறுக்கலாம்..…இல்லைனா அவர் உங்க அம்மா பாட்டியெல்லாம் பழி வாங்க இது நல்ல சான்ஃஸுனும் நினைச்சுறுக்கலாம் இல்லையா…. அது சரியா படலையே…. அவருக்கு அண்ணி மேல இஷ்டம் ஆனா இங்க யாரும் சம்மதிக்க மாட்டாங்கன்னா….கூட்டிட்டு போய் மேரேஜ் கூட செய்துகிடட்டும் அதை கூட ஒத்துகலாம்…ஆனா இத எப்டி எடுக்க?”

இவள் பேசுவதை ஆமோதிப்பாக பார்த்திருந்தவன்…. “எனக்கு தெரிஞ்சு நாம நேர்ல ஜோவன்டயே பேசிடலாம்னு நினைக்கேன்…” என்று இவள் முகம் பார்த்தான்.

ஒரு கணம் யோசித்தவள் “எதையும் பேசினாதான் முழுசா இதுக்கு ஒரு முடிவு வரும் என தன் பக்க சம்மதத்தை சொன்னாள்.

அடுத்து சுற்று முற்றும் விழி ஓட்டிவிட்டு அவன் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தபடி “வர்ஷன் அத்தான்…” என்றாள் மொட்டையாக…..வர்ஷனைப் பற்றி மட்டும் எதுவுமே சொல்லவில்லையே இவன்….

இப்போது எழுந்து உட்கார்ந்த மித்ரன் பதில் ஏதும் சொல்லாமல் இவள் எந்திரிக்கவும் கை நீட்டியவன்…… கிளம்ப ஆயத்தமானான்…. ஓ இது பத்தி எதுவும் பேசக் கூடாது போல என இவள் தத்தளிப்போடு புரிந்து கொண்டாள்.

மறுநாள் காலை இவளுக்கு விழிப்பு வந்த வேளை எதிரில் ஃபுல் ஃபார்மல்ஃஸில் கிளம்பி இருந்தான் அவன்…

எங்க போறான் இவன்….அதுவும் இப்ப வரைக்கும் நான் தூங்கியிருக்கேன்…என இவள் சற்று பரபரப்புடன் எழும்ப…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.