(Reading time: 27 - 54 minutes)

19. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

டு நிசியை நெருங்கிக்கொண்டிருந்த அவ்வேளையில் அந்தப் பிரதேசமே இருட்டின் ஆட்சியில் இருந்தது.

க்ரீச்..க்ரீச்சென்று சுவற்றுக்கோழிகளின் சப்தம் விடாமல் கேட்டது.காலடியில் காய்ந்த சருகுகள் சரக் சரக் என்று மிதிபடும் சப்தம்.எங்கோ ஆந்தை அலறும் ஓசை.யாராக இருந்தாலும் கொஞ்சம் பயம் ஏற்படும் சூழ்னிலை.

போர்வீரன் காளியின் பின்னால் அவனுக்கு மிக நெருக்கமாய் அவனைப் பின் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள் வைத்தியரும்,அந்தணரும்.காளியின் கையில் இருந்த தீவட்டி ஏறப்படாமல் அணைந்தே இருந்தது.காரணம் அப்படி தீவட்டி எரிந்துகொண்டிருந்தால் அதன் வெளிச்சம் தூரத்தில் சிறைப் பகுதியைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் பாது காவலர்களின் கவனைத்தை ஈர்க்கும்.பிறகு கேட்கவே வேண்டாம்.மூவரும் மன்னரின் முன் நிறுத்தப்படுவோம்..பிறகு மகாராணிக்காக ரகசியமாய்ச் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெளியே வர வெகுநேரம் ஆகாது.நம் நிலை மட்டுமல்லாது மகாராணியின் நிலைமையும் கேள்விக்குறியாகிவிடும் என்ற யோசனையுடன் தீவட்டியை அணைத்தே வைத்திருந்தான் காளி. அடிக்கடி வந்து போகும் பழக்கப்பட்ட இடம் என்பதால் காளிக்கு சரியான வழியில் இருவரையும் அழைத்துச் செல்வதொன்றும் சிரமமாக இல்லை. 

மரங்களடர்ந்த சமவெளி அது. குறிப்பிட்ட இடம் வந்ததும் அவனை அறியாமலே அவன் கால்கள் நின்றன.

நின்ற இடத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தான்.பாது காவலர்கள் யாரும் அவ்விடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டான் காளி.அவனை ஒட்டியே நின்று கொண்டிருந்தார்கள் வைத்தியரும் அந்தணரும். இடுப்பில் செருகியிருந்த வாளை எடுத்து ஓரிடத்தில் குப்பலாய் வளர்ந்திருந்த செடிகளை விலக்கியபோது அவ்விடத்தில் ஒரு ஆள் உள்ளே நுழையக்கூடிய அளவிலான வழியொன்று கனத்த இரும்பு மூடியொன்றினால் மூடப்பட்டிருந்தது.ஏற்கனவே அம்மூடி உள்பக்கமாய் திறக்கப்பட்டிருந்ததால் கொஞ்சமே முயன்றதும் மூடியைத் திறக்க முடிந்தது.அப்படி அது உட்புறமாய் திறக்கப்படாமல் இருந்திருந்தால் எவர் முயன்றாலும் அதை நகர்த்தகூட முடியாது. எல்லாம் மகாராணியின் ஏற்பாடு என எண்ணியவனாக மெள்ள உட்புறம் எட்டிப்பார்த்தான் காளி.அது ஒரு சுரங்கப் பாதை.கரிய இருட்டு மட்டுமே பரவியிருந்த அச்சுரங்கத்தில் கீழே இறங்க படிக்கட்டுக்கள் இருந்தன.        

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இருட்டின் காரணமாய் படிகள் எங்கே உள்ளன என்பதைக் கூட கண்டறிய முடியாமல் ஒரு குத்துமதிப்பாய்க் காலை வைத்தன் காளி.நல்ல வேளை அதுதான் முதல் படி என்பதை அறிந்த போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.மெள்ள மெள்ள நிதானமாய் ஐந்தாறு படிகளில் இறங்கியவன் கையிலிருக்கும் தீவட்டியை ஏற்ற அங்கு இருட்டு அகன்று வெளிச்சம் பரவியது.ஒருவர் பின் ஒருவராய் படிகளில் இறங்கிய வைத்தியருக்கும் அந்தணருக்கும் அதுவரை வெளிக்காற்றில் இருந்து விட்டு சுரங்கத்திற்குள் இறங்கியதும் குபீரென வியர்த்தது.ஒரே வவ்வாலின் புழுக்கை நாற்றம்.சுரங்கத்தின் கூரை மீது தொங்கிக்கொண்டிருந்த வவ்வால்கள் க்ரீச் என்று சப்தமெழுப்பிக்கொண்டே அங்குமிங்கும் பறந்தபோது அவற்றின் றெக்கைகள் மூவரின் முகத்திலும் இடித்துஇடித்துச் செல்ல வைத்தியருக்கும் அந்தணருக்கும் அவற்றைக் கைகளால் தட்டிவிட்டுக்கொண்டே மேலே நடப்பது பிரம்மப் ப்ரயத்தனமாய் இருந்தது.

கிட்டத்தட்ட இரெண்டு நாழிகை நேரமாக நடப்பதாய்ப்பட்டது அந்தணருக்கு(ஒரு நாழிகை என்பது இருபது நிமிடம்).குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்றான்.அங்கே வெறும் சுவர் மட்டுமே காணப்பட்டது. காளி.மெல்ல உதடுகளைக் குவித்து சீட்டியடித்தான்.அது மிக மெலிதான சீழ்கை ஒலி.

என்ன ஆச்சரியம்?ஒரு சின்ன பிளவோ..விரிசலோ கூட காணப்படாத அந்த சுவரில் பருமனான ஒரு ஆள் நுழையக்கூடிய அளவில் வட்டமான திறப்பு ஒன்று ஏற்பட்டது.ஹா.. என்று அப்படியே அதைப்பார்த்து அசந்து போனார்கள் வைத்தியரும் அந்தணரும்.

முதலில் அவ்வட்டவடிவிலான திறப்பில் நுழைந்த காளி இரண்டடி உயரத்தில் இருந்த அத்திறப்பிலிருந்து கீழே தரையில் குதித்து முதலில் வைத்தியரையும் பிறகு அந்தணரையும் கையைப்பிடித்துக் கீழே இறக்கிவிட்டான்.

அங்கே கையில் தீவட்டியைப் பிடித்துக்கொண்டு எம கிங்கரர்களைப் போல் நின்றுகொண்டிருந்த இரண்டுபேரைப் பார்த்து மிரண்டு போனார்கள் வைத்தியரும் அந்தணரும்

காளீ....நடுக்கத்தோடு அழைக்கும் அந்தணரைப் பார்த்தான் காளி.அவ்விருவரையும் பார்த்து பயந்து போய் உள்ளார்கள் இருவரும் என்பது புரிந்து போயிற்று அவனுக்கு..

பயப்படாதீர்கள்..இவர்கள் நமக்கு உதவவே வந்துள்ளார்கள்..மகாராணியால் நியமிக்கப்பட்டவர்கள்...

நிம்மதியாயிற்று வைத்தியருக்கும் அந்தணருக்கும்...

மூவரும் அவர்கள் இருவரின் பின்னால் சிறிது தூரம் நடந்து சென்றனர்.அப்படிச் செல்லும்போது வெளியில் குதிரைகளின் காலடியோசை அடிக்கடிக் கேட்டது.

சிறைச் சாலையை நெருங்கிவிட்டோம் போலும்.சிறையைக் காவல் காக்கும் காவலர்கள் குதிரைமீது ஏறி சவாரி செய்தபடி சுற்றிச் சுற்றி வருகிறார்கள் போலும் எனத் தோன்றியது வைத்தியருக்கும் அந்தணருக்கும்.

page 2

வர்கள் நினத்தது சரிதான் என்பது போல் முன்னால் சென்ற கிங்கரர்கள் இரும்பினால் அமைக்கப்பட்ட மிக கனத்த கம்பிகளோடு கூடிய சிறையின் முன் போய் நின்றனர்.அந்தகாரம் சூழ்ந்திருந்த அவ்விடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது வைத்தியருக்கும் அந்தணருக்கும். 

கம்பிகளுக்கிடையே தெரிந்த அச் சிறையின் உள்ளே மிக மிக மெலிதான வெளிச்சத்தைத் தந்து கொண்டிருந்தது ஒரு விளக்கு.நிச்சயம் அவ்வெளிச்சம் அவ்விடத்தின் இருட்டை விரட்டக்கூடியதாய் இல்லை.அது ஒரு தனிச் சிறை.சாதாரணமாய் சிறைச் சாலையென்றால் அடுத்தடுத்து பக்கத்துப் பக்கத்தில் சிறை அறைகள் இருக்கும்.சிறையறைக்குள் இருந்தபடியே கைதிகள் பார்த்துக்கொள்வார்கள் பேசிக்கொள்வார்கள்.காவலுக்காக நிற்கும் காவலர்களும் கைதிகளோடு பேச்சுக் கொடுப்பதுண்டு.ஆனால் இந்த தனிமைச் சிறை அப்படியில்லை.இங்கு பயங்கரமான கொலைக்குற்றம்சாட்டப்பட்டவர்கள் மட்டுமே சிறை வைக்கப்படுவார்கள்.அதுவும் தனித்தனியாக.. பார்த்துக் கொள்ளவோ பேசிக்கொள்ளவோ முடியாது.மனித நடமாட்டமோ அதிக்கக் காற்றோ கூட கிடையாது.இருட்டு மட்டுமேதான் இங்கு உறவாய் இருக்கும்.

இப்படியான இந்த சிறையின் முன் வந்து நின்றவுடன் அந்தக் கிங்கரர்களில் ஒருவன் இடுப்பிலிருந்து சாவியை எடுத்து சிறையின் இரும்புக்கதவினில் பூட்டியிருந்த பிகப்பெரிய கனத்த பூட்டினை வெகு ஜாக்கிரதையாய் மிக மெதுவாய்த் திறந்தான்.வெகு நிசப்தமாய் இருந்த அவ்விடத்தில் க்ளிக் என்ற மிக மெலிதான சப்தத்தை ஏற்படுத்திக்கொண்டு திறந்தது அந்த பூட்டு.அச்சிறு சப்தமே வெகு தெளிவாய் மிக சப்தமாய்க் கேட்டது அந்த அமைதியான இரவுப் பொழுதில்.பூட்டைத்திறந்ததுமே ஷணப்பொழுதில் அவ்விடம் விட்டு அகன்றார்கள் அவ்விரு கிங்கரர்களும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

றக்கம் வராமல் பலவிதமான சிந்தனைகளோடு படுத்துக்கிடந்தான் ஹஸ்த குப்தன்.கடந்த காலத்தை அசை போட்டபடி இருந்தது அவன் மனது.கொடிகட்டிப்பறக்கும் குப்த ராஜ்ஜியத்தின் வாரிசாய் பிறந்து வளர்ந்து தென்னாட்டின் பாரம்பரியச் சின்னங்களையும் அவற்றின் மகிமைகளையும் பற்றிக்கேள்விப்பட்டு அவற்றால் ஈர்க்கப்பட்டு அவைகளை நேரில் காணும் ஆவலோடு வெகு தொலைவிலிருந்து வந்த நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கு இன்னிலையை என்னென்று சொல்வது?வந்தோமா?பார்த்தோமா?சென்றோமா? என்றில்லாமல் இப்பண்டியனாட்டில் இவ்விடத்தில் நடந்த போட்டிகளில் பங்கேர்க்க வேண்டுஎன ஏன் விருபினோம்?ஏன் இளவரசி மதிவதனியைப் பார்த்தோம்? பார்த்த கணத்தில் நம் மனம் ஏன் அவர்பால் சென்றது?பாழும் மனது அவரை மறக்க மறுக்கிறதே?போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை என்றானதும் குதிரை மீதேறி வந்தவழியே திரும்பிப்போயிருக்கலாமல்லவா?மதிவதனியை நினைத்தவுடனேயே மனமும் கால்களும் இன்னாட்டைவிட்டுச் செல்லவே அலலவா மறுத்து விட்டன?

அதனால்தானே கொலை நிகழ்ந்த இடத்தில் தங்க நேர்ந்தது?.அவ்விடத்தில் இருந்ததாலேயே அல்லவா விமலாதித்தனைக் காப்பாற்ற முனைந்தோம்?பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது போல் விமலாதித்தனை மாறவர்மன் ஆட்கள் கொலை செய்ய காப்பாற்றச் சென்ற நம் மீதல்லவா கொலைப்பழி விழுந்துவிட்டது?

நான் விமலாதித்தனைக் கொல்லவில்லை மாறவர்மனே அதற்குக் காரணம் என்று எத்தனை முறை எடுத்துரைத்தாலும் இவர்கள் நம்பப்போவதில்லை போல்லல்லவா தெரிகிறது?நான் இச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலன்றி நான் நிரபராதி என நிரூபிப்பது சாத்தியமில்லை.என்னை விடுவிக்கவும் மாட்டார்கள்.....நானாய்த் தப்பிக்கவும் இயலாது..மதிவதனி நம்மைத் தப்புவிக்க ஏதும் முயல்வாரா?அட.. பைத்தியக்காரா..நீதான் மதிவதனியை சதா நினைத்து நினைத்துத் தவிக்கிறாய்..இளவரசி மதிவதனி அவ்வாறு உன்னை நினைக்கிறாரா?..நேசிக்கிறாரா?என நீ அறிவாயா?இல்லை..இல்லை..அவர் என்னை நினைப்பார்..அவர் என்னை நேசிக்கிறார்..என் மனம் சொல்கிறது..அது சொல்வது நிச்சயம் பொய்யாகாது..

இளவரசி..இளவரசி..மதிவதனி..என்னை சந்திக்க வருவீர்களா ஒரு முறையேனும்..?இவ்வறு பலவிதமாக சிந்தித்தபடி உறக்கம் வராமல் படுத்துக்கிடந்த ஹஸ்தனின் காதுகளில் பூட்டு திறந்துகொண்டதால் ஏற்பட்ட சிறிய சப்த விழுந்தது.அதோடு கூட கூடுதலாய் வெளிச்சம் அவ்விடத்தில் பரவியதையும் உணரமுடிந்தது.

திடுக்கிட்டுப்போனான் ஹஸ்தன்.திடுக்கிடல்தானேயொழிய அது பயம் இல்லை.ஏனென்றால் அவன் ஹஸ்தன்... குப்தன்...பயமறியாதவன்.

யார்?யார்?யாரது? கேட்டுக்கொண்டே எழ முயல இடுப்பில் காயம்பட்ட இடம் லேசாய் வலித்தது.மீண்டும் படுத்துக் கொண்டான் ஹஸ்தன்.

சாதாரணமாகவே எப்போதாவது வரும் காற்றைத் தவிற எந்த ஜீவனும் இங்கே வராது அப்படியிருக்க இந்த நடு நிசியில் யார் வரப்போகிறார்கள்?என்ற கேள்வி எழுந்தது அவன் மனதில்.

கையில் தீவட்டியைப் பிடித்தபடி தன்னை நோக்கி வரும் உருவத்தைப் பார்த்து அப்படியே அசந்து போனான் ஹஸ்தன்.

ஹஸ்தனின் அருகில் வந்து நின்றது அவ்வுருவம்.ஆம்..வந்து நின்ற உருவம் வேறு யாருமில்லை அந்தணர்தான்.

page 3

ப்படியே அதிர்ந்து போனான் ஹஸ்தன்.ஹா...ஹா..இதென்ன?இதென்ன?நீங்களா..நீங்களா? அந்தணரே..இவ்விடத்தில் இன்னேரத்தில் நீங்கள் எப்படி?...

எழ முயன்றான் முடியவில்லை.

அப்படியே படுத்திருங்கள் குப்த இளவரசே..நான் உங்களைக் கண்டு பேசவே அனுப்பப்பட்டேன்...

அனுப்பப்பட்டீர்களா?யார் அனுப்பியது உங்களை?

உங்கள் நலனில் அக்கறைகொண்டவர்தான் என்னை உங்களிடம் பேச அனுப்பினார்.நீங்கள் பேசும் மொழியை அறிந்தவன் நான் என்ற காரணமும் அதற்கு முக்கியமானது.

யார் அவர்? யார் அவர்?என் மீது அக்கறை கொண்டவர்..?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அது சொல்வதர்க்கில்லை...அது பற்றிக் கேட்காதீர்.அந்த முக்கியமானவரைப்பற்றிச் சொல்ல எனக்கு அனுமதி இல்லை.ஆனால் உங்களிடம் சிலவற்றைக் கேட்டு வரச் சொன்னார்.

என்ன கேட்க வேண்டும்?எது பற்றிக் கேட்க இந்த நடுனிசியில் வந்தீர்?

பின் பகலிலா வர முடியும் பலபேர் பார்க்க?மன்னர் அறிந்து விட்டால் மரணம் நிச்சயம்...

பேச அதிக நேரமில்லை...என் கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லுங்கள்...விமலாதித்தன் கொலையுண்ட இடத்தில் நடந்தது என்ன?நீர்தான் கொன்றீரா?அப்படி இல்லை எனில் அவரைக் கொன்றது யார்?எதனையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னால் ஒருவேளை நீர் தப்புவிக்கப்படலாம்.

அந்தணரே..இப்போது உம்மிடத்தில் சொல்லப்போகும் அனைத்தும் உண்மையானதுதான் என்று சொல்லிவிட்டு சோழ இளவரசர் கொலையுண்ட இடத்தில் நிகழ்ந்த அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு கடைசியாய் தான் உணர்வின்றி மயங்குவதற்கு முன் தன் செவியில் மாறவர்மன் வாழ்க..சேர இளவரசர் மாறவர்மன் வாழ்க எனும் கோஷம் விழுந்ததையும் சொல்லி முடித்தான் ஹஸ்தன்.

நீர் சொல்வது அனைத்தும் உண்மை என எப்படி னம்புவது?உண்மையில் கொலைகாரர் எவரும் தான்தான் கொலைசெய்தேன் என ஒப்புக்கொள்ள மாட்டாரகள் அல்லவா?

நம்பவில்லை எனில் நான் எப்படித்தான் நிரூபிப்பது?என்னை நிரபராதி என நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டுமல்லவா?

அந்தணர் ஏதும் பதில் சொல்லவில்லை சரி நான் கிளம்புகிறேன்...அதற்கு முன் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி இளவரசி மதிவதனி உங்களைக் காண வருவதாகச் சொல்லியனுப்பியுள்ளார்....என்று சொல்லிவிட்டு

ஹஸ்தனிடம் ஏற்படும் மாறுதல்களை உன்னிப்பாய்க் கவனித்தார் அந்தணர்.

என்ன என்ன..என்ன சொன்னீர்கள் அந்தணரே..?அந்தணரைப் பார்த்ததும் எழ முயன்று முடியாமல் படுத்தபடியே அவரிடம் பேசியவன் இளவரசியின் பேயரைக் கேட்ட உடனேயே வலியை மறந்து எழுந்து அமர்ந்தான். என்ன சொன்னீர்கள் அந்தணரே? மதிவதனி என்னைக் காண வருவதாச் சொன்னாரா?அவரை நீங்கள் கண்டீரா?அவர் எப்படி இருக்கிறார்?அவர் எப்படியிருக்கிறார்?சொல்லுங்கள் அந்தணரே சொல்லுங்கள் ...சொல்லுங்கள்...இளவரசி மதிவதனி எப்போது எனைச் சந்திக்க வருவார்..?மிகுந்த பரபரப்போடு கேட்ட அவனின் முகம் பிரகாசம் ஆனதுடன் அவனிடம் ஒரு தவிப்பும் ஏற்பட்டதைக் கவனித்தார் அந்தணர்.

இல்லை..இல்லை..இதுவரை நான் இளவரசியை சந்திக்கவில்லை.உங்களைப் பார்க்க இங்கே யார் என்னை அனுப்பினார்களோ அவர்களே உங்களிடம் மதிவதனி உங்களைச் சந்திக்க வருவார் என சொல்லும் படி அறிவுறுத்தினார் என்றார்.இளவரசி இங்கு எப்போது வருவார் என்பது பற்றி எனக்குத் தெரியாது..சரி நான் வருகிறேன் என்றபடியே அந்தணர் சிறையின் வாயில் நோக்கி நடந்தார்.

அந்தணரே..நில்லுங்கள்..நில்லுங்கள்..இளவசரசி எப்போது எனைக்காண வருவார் தயவு செய்து சொல்லிவிட்டுச் செல்லுங்கள் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்...கெஞ்சும் குரலில் கேட்டான் ஹஸ்தன்.

ஐயா ஆளை விடுங்கள்..அடியேனுக்கு ஏதும் தெரியாது...என்று சொன்ன அந்தணர்..ஓ!அப்படிப்போகிறதா கதை..?என்று தனக்குள் சொல்லிக்கொண்டே தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டார்.

அந்தணரிடமிருந்து பதில் கிடைக்கத ஏமாற்றத்தில் மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொண்டான் ஹஸ்தன்.

ம்கும்..

யாரோ கனைப்பது போலத் தோன்றவே கண்களைத் திறந்தவன் கையில் தீவட்டியுடன் வைத்தியர் நிற்பதைகண்டு வியப்புற்றான்.அவரோடு கூடவே மீண்டும் அந்தணர்.

இவன் ஏதோ கேட்டபடி எழ முயல..வைத்தியர் பதில் ஏதும் சொல்லவில்லை..ம்..ம்..ம்..என்று ஓசை மட்டும் எழுப்பி அப்படியே படுத்திருக்கும் படி கையால் சைகை காட்டினார்.

ஹஸ்தனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.என்ன இது வைத்தியர் பகலில்தானே வருவார்?இது போல் இரவில் வந்ததில்லையே..? இன்று என்ன..எதற்கு புரியவில்லை அவனுக்கு..

ஒரு வெற்றிலையை எடுத்து அதில் ஏதோ பொடியை சிறிது வைத்து ஒரு குப்பியிலிருந்த திரவத்தைக் கொஞ்சமாய் பொடியில் ஊற்றிக் குழைத்தார் வைத்தியர்.

பார்த்துக் கொண்டே இருந்தான் ஹஸ்தன்..

ம்..வாயைத் திறவுங்கள்..ஹஸ்தனிடம் ஜாடை காட்டினார் வைத்தியர்..

page 4

ன்ன இது..?இந்த நடு இரவில் வந்து ஏதோ மருந்து தருகிறார் வைத்தியர்..அந்தணரே..என்னைக் கொல்ல ஏதும் சதி செய்கிறீரா இருவரும்..?இது மன்னரின் ஆணையா?சதிகாரர்களின் ஏற்பாடா?அல்லது என்னைத் தப்புவிக்க ஏற்பாடு செய்வதாக எனக்கு உதவ விரும்புவதாகச் சொன்ன நீங்கள் குறிப்பிட்ட அந்த முக்கியமானவரின் திட்டமா இது?..

இல்லை இல்லை..இதில் சதி ஏதும் இல்லை..உங்களின் நலனுக்காகவே செய்யப்படும் செயல் இது..

வாயைத் திறவுங்கள் குப்த இளவரசே..அந்தணர் கூறவும்..

முடியாது என மறுத்தால்..?

வலுக்கட்டாயமாகத் தரவேண்டியிருக்கும்...அப்படிச் செய்ய விரும்பவில்லை..நாங்கள் உங்களின் நலன் விரும்பிகள்..இது விஷமல்ல..குருதி அதிக அளவு வெளியேறியதால் மிகவும் பலவீனப்பட்டுள்ள உங்களை நீங்கள் நிரபராதி என நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் சிறையிலிருந்து தப்புவிக்கச் செய்தால் வெளியில் சென்று உங்களால் செவ்வனே செயல் பட முடியாது. உங்கள் உடல் நிலையை ஊக்கப்படுத்தும் மருந்து இது.இம்மருந்தை பகலில் தருவதால் பயனில்லை. இரவில்தான் தரப்படவேண்டும்.அதனாலேயே நடு இரவில் வந்தோமேயன்றி வேறு நோக்கம் ஏதும் இல்லை.எங்களை நம்புங்கள்....நான் தரும் இம்மருந்தால் தங்களுக்கு நன்மை ஏற்படுமேயன்றி தீமை ஏற்பட்டுவிடாது..இது சத்தியம் என்றார் வைத்தியர். வைத்தியர் சொன்ன அனைத்தும் ஹஸ்தனுக்கு அந்தணரால் சொல்லப்பட்டதும் ஹஸ்தன் சமாதானமானான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஸ்தனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினர் வைத்தியரும்,அந்தணரும்.

அந்தணரே..மகாராணி இட்ட கட்டளையை நல்லபடியாய் நிறைவேற்றியாயிற்று..

வைத்தியரே..இது என்ன மருந்து..?

மகாராணி இது பற்றி உம்மிடம் சொல்லவில்லையா என்ன?

சொன்னார்கள்..ஆனாலும்..

அந்தணரே..ஹஸ்தனுக்கு தரப்பட்டுள்ள இம்மருந்து இப்போது வேலை செய்ய ஆரம்பிக்காது..அதனால் ஹஸ்தன் ..நம்மீது எந்த சந்தேகமும் படமாட்டார்...

அப்படியென்றால்..?

ஆம் அந்தணரே..கொடுத்திருக்கும் இம்மருந்து நாளை முற்பகலில்தான் தனது வேலையைக் காண்பிக்கும். நாளை நீரும் நானும் மன்னரோடு காலை  இவ்விடம் வரும்நேரத்தில் ஹஸ்தன் மயக்கமும் மயக்கம் இல்லாத நிலையும் என குழப்பமான நிலையில் இருப்பான்.பேசுவான்.ஆனால் பேச்சில் தெளிவிருக்காது.

குளறிக் குளறிப்பேசுவான்.அவன் பேச்சை உம்மால் புரிந்து கொள்ள முடியாது.அதன் காரணமாய் மன்னர் ஹஸ்தனிடமிருந்து அறிந்து கொள்ள விரும்பும் எதனையும் உம்மூலம் அறிந்து கொள்ள முடியாது.

இது மகாராணிக்கு நிம்மதியைக் கொடுக்கும்.அவருக்குக் கிடைக்கும் முதல் வெற்றி இது...

வைத்தியரே மன்னர் அறியாது நாம் செய்யும் இச்செயல்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என அச்சமாக  உள்ளது..

ஆம்.. அந்தணரே எனக்கும்தான்...ஆனாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டுமல்லவா?..நம் உயிரே போனாலும்..

ஆம் சரியாகச் சொன்னீர்கள் வைத்தியரே..தாழ்ந்த குரலில் பேசியபடியே வந்த இருவரும் சிறையைவிட்டு வெளியே வரவும் அங்கே இவர்களுக்காகக் காத்திருந்தான் காளி.

மீண்டும் மூவரும் பழையபடியே எந்த வழியாக வந்தார்களோ அவ்வழியாகவே சென்று மரங்களடர்ந்த காட்டுப்பகுதியை அடைந்தனர்.அதற்குள் தீவட்டி எண்ணையின்றி உயிர்விட்டிருந்தது.

காலை வெகு சீக்கிரமே அரசவைக்கு வந்து மிகுந்த கவலையோடு அமர்ந்திருந்தார் மன்னர் அதிவீரன்.தளபதி மாரப்ப பூபதியும் மந்திரி அச்சுத ராயரும் ராஜ குரு ஆனந்தேஸ்வரரும் ஆசனத்தில் அமர்ந்திருக்க ஒற்றன் கொண்டுவந்திருந்த விஷயம் பற்றி அனைவருமே மிகுந்த கவலையோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தளபதி மாரப்ப பூபதி அவர்களே ஒற்றன் கொண்டு வந்திருக்கும் செய்தி மிகுந்த கலக்கத்தை எற்படுத்துகிறது..நம் மன்னரும் இவ்விஷயம் அறிந்ததிலிருந்து மிகவும் கவலையோடு உள்ளார்..மந்திரி அச்சுத ராயர் கூற..

ஆம் மந்திரி அவர்களே..நாம் உடனடியாக இதனை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டுமென சிந்திக்கவேண்டும்..

மகனை இழந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுக்க பெரும் படை திரட்டுகிறானாம்.நம்மோடு எப்போதும் கைகோர்க்கும் சேரனும் இப்போது சோழனோடு கை குலுக்குகிறானாம்.சோழன் அக்கம்பக்கத்து சிறுசிறு தேசத்து மன்னர்களுடனும் பேசி வருகிறானாம்.பெரும்பாலான சின்னஞ்சிறு நாடுகள் சோழனுக்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளனவாம்.சில ராஜ்ஜியங்கள் மௌனமாய் உள்ளனவாம்.சோழ இளவரசன் பாண்டிய நாட்டில் கொலையுண்டதால் பாண்டியனாடு குற்றவாளிதான் அதற்கு உதவுவது சிரேஷ்டமானது அல்ல எனக் கூறுகின்றனராம் பெரும்பாலான மன்னர்கள்.எனவே நாம் தனித்து விடப்பட்டோம் என்றே தோன்றுகிறது.நம் படை ஆற்றல் மிகுந்த பெரும் படைதான் என்றாலும் சோழன் திரட்டி வரும் பல நாடுகளின் மொத்தப் படைகளோடு நம் படை மட்டும் போர்புரிதல் எங்கனம்?மனம் ஒரு நிலையிலில்லாது சஞ்சலப்படுகிறது..பெரும் கவலையாய் உள்ளது என்று மன்னர் அதிவீரன் கூற அங்கிருந்த அனைவருமே என்ன செய்வதென்ற பெருங்கவலைக்கு ஆட்பட்டனர்.ஏதாவது உபாயம் காணவேணுமென நினைத்தனர்.

மன்னரின் கவலையைத் தம் கவலையாய்க் கொள்ளும் நல்லவர்கள் அவர்கள்.

page 5

ஞ்சத்தில் கண்களை மூடிக் கிடந்தான் சுந்தரபாண்டியன்.கண்கள்தான் மூடி இருந்தனவே தவிர உறக்கம் வரவில்லை.விடி காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது.அக்கா மதிவதனியின் சிந்தனையாகவே இருந்தது அவனுக்கு.சில நாட்களாக அக்கா ஏன் இப்படி இருக்கிறார்? எப்போதும் உம்மென்று சிரிப்பே இல்லாமல் யாருடனும் பேசாமல்? தன்னோடு தினமும் விளையாடுவதும் சிரித்துப் பேசுவதும் கதைகள் கூறுவதும் ஓவியம் வரைவதும் அப்படி ஓவியம் வரையும் போது வண்ணக் கலவைகள் கலக்க தன்னை உதவும்படி கேட்பதுமாய் எப்படி கலகலவென்று இருப்பார்?ஆனால் இப்பொதெல்லாம் அப்படியெல்லாம் இல்லாமல் உம்மென்றே இருக்கிறாரே?நாமாய்ப்போய் பேசினாலும் ஓரிரு வார்த்தைமட்டுமே பதில் தருகிறார்..அதிகமாய்ப் பேசினால் சுந்தரா சும்மா இரு..என்னைத் தனியாய் விடு என்கிறார்.என்னோடு உணவும் அருந்த வருவதில்லை..அக்கா ஏன் இப்படி மாறிப்போனார்?புரியவில்லையே என வருத்தத்தோடு படுத்திருந்தவன் காதுகளில்..மகாராணி என்று யாரோ அழைப்பதும் அதற்குத் தன் தாய்   சுசீ..எல்லாம் நல்லபடியாய் முடிந்ததா என்று கேட்பதும்..மகாராணி..இளவரசர்..இளவரசர்..நாம் பேசுவது இளவரசர் காதுகளில் விழுந்துவிடப்போகிறதே என்று பதட்டத்தோடு சொல்வதும்..அதற்கு மகாராணியாகிய தன் தாய்..இல்லை சுசீ இளவரசர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்..

அவருக்கு நாம் பேசுவது செவியில் விழாது என்பதும் மிகத் தெளிவாகக்கேட்டது.

என்ன ரகசியம் இருக்கிறது இவர்களுக்குள் தனக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறார்கள்?என்று நினைத்த இளவரசன் சுந்தரனுக்கு அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நெஞ்சுக்குள் குறுகுறுத்தது.

வயது பதினொன்று அகிவிட்டதே?ஓரளவு உலகம் புரியாமல் இருக்குமா என்ன?இன்னும் நன்றாகக் கண்களை இறுக மூடிக்கொண்டான். காதுகளை நன்றாகத் திறந்து கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

சுசீ..வைத்தியரும் அந்தணரும் நேற்று இரவு சிறை சென்று ஹஸ்தனைச் சந்தித்து வந்தார்களா?ஏன் இன்னும் அவர்கள் என்னைச் சந்திக்க வரவில்லை?இன்னும் சற்று நேரத்தில் மன்னர் ஹஸ்தனைப் பார்க்க சிறைக்குக் கிளம்பிவிடுவாரே.இன்று ஹஸ்தனைப் பார்க்க சிறை செல்லவிருப்பதாகச் சொல்லியுள்ளார் அல்லவா?தன்னோடு வைத்தியரும் அந்தணரும் வரவேண்டுமென்றுமல்லவா சொல்லியிருக்கிறார்?நேற்று இரவு அவர்கள் இருவரும் சிறை சென்றார்களா?..நம் திட்டப்படி செயல்பட்டார்களா?அங்கு நடந்தது என்ன?

ஒன்றுமே தெரியவில்லையே.கவலையாக உள்ளது சுசீ...

மகாராணி அவர்களே..கவலை கொள்ளத் தேவவையில்லை.இன்று காலை இருள் பிரியும் வேளைக்குள்ளேயே காளி என்னை சந்தித்து நேற்று இரவு அவன் வைத்தியரையும் அந்தணரையும் சிறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர்களிருவரும் ஹஸ்தனைச் சந்தித்து செய்ய வேண்டிய செயல்களை செய்து முடித்துவிட்டதாகவும் சொன்னான்.அத்தோடு மன்னர் காலையில் வெகு சீக்கிரமே வைத்தியரையும் அந்தணரையும் தன்னை வந்து பார்க்கும்படி அழைத்ததால் அவர்களால் தங்களைக் காண வரமுடியவில்லை என்று தன்னிடம் சொல்லி அதனை தங்களிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் சொன்னான்.அதனால் மகாராணி எல்லாம் சரியாகவே செல்கிறது.தாங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை மகாராணி..

அப்படியா..?நல்லது சொன்னாய் சுசீ...இன்று நீ மதிவதனியைச் சந்திக்க வேண்டும் சுசீ..

இளவரசிக்கு ஏதும் சொல்ல வேண்டுமா மகாராணி?

ஆம்..சுசீ...

அவரை அழைத்து வரட்டுமா?

வேண்டாம்..வேண்டாம்...மதியை சந்திக்கும் போதெல்லாம் அவள் சோகமாக இருப்பது என் மனதை வருத்துகிறது...சுந்தரனோடு கூட அவள் முன் போல் இல்லை..அவள் தந்தை மன்னரும் அவளைக் கண்டு வருதுகிறார்.தன் மகள் தன்னால்தான் இவ்வளவு சோகமாக ஆகிவிட்டதாகக் கருதுகிறார்.அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்ததால்தானே போட்டி என்று ஒன்றை வைத்தேன் அதில் கலந்து கொள்ளத்தானே சோழ இளவரசன் நம் நாட்டுக்கு வந்தான்.போட்டியில் ஜெயித்தான்..திருமணம் பேசப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டான்..அந்த வருத்தத்தினால்தானே என் மகள் மதி இவ்வாறு சோகமாய் உள்ளாள் என்று சொல்லிச் சொல்லிப் புலம்புகிறார்.அவ்ள் சோகத்திற்கு சோழ இளவரசனின் கொலை காரணமில்லை அவள் ஹஸ்தன் மேல் கொண்டுள்ள காதல்தான் என்பது மன்னர்க்குத் தெரியாது.பாவம் மன்னர் என்றார் மகாராணி.அவரது குரலில் சோகம் அப்பிக்கிடந்தது.

மகாராணியின் ஒவ்வொரு வார்த்தையும் இளவரசன் சுந்தரனின் செவிக்குள் நுழைந்து அவன் நெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டது.கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்தது அவனுக்கு.மேலே கேட்பதில் தீவிரமானான்.உறக்கம் சுத்தமாய் விட்டுப்போனது.

சுசீயின் முகத்திலும் வேதனையின் சாயல்..

சுசீ..

page 6

சொல்லுங்கள் மகாராணி..கைகளைக் கட்டியபடி பவ்யமாய் நின்றுகொண்டிருந்தாள் சுசீ..

சுசீ இன்று நீ மதியைச் சந்திக்கும் போது அவளிடம் இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும் எனச் சொல்லி சிலவற்றைக் கொஞ்சம் தாழ்ந்த குரலில் மகாராணி சொல்ல நிசப்தமாய் இருந்த அந்த வேளையில் மகாராணி சொன்ன அனைத்தும் ஸ்பஷ்டமாய் சுந்தரனின் காதில் விழுந்தது.தாயா இப்படிச் சொல்வது என்று அதிர்ந்து போனான் அந்த பதினோறு வயது பாலகன்.ஆனால் தாய் ஏன் இப்படி ஒரு முடிவை எடுதார்..?அப்படி ஓர் முடிவுக்கு அவர் வரவேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியது எது?என அவன் அறிந்திருக்கவில்லை அறிந்திருந்தால் இப்படியொரு கேள்வி அவனுள் எழுந்திருக்காது.இப்படிப் படுத்தபடி தூங்குவது போல் பாசாங்கு செய்தபடி தாய்க்கும் சுசீக்கும் இடையே நடந்த உரையாடல் அனைத்தையும் கேட்டவனுக்கு எல்லாவற்ரையும் யாரிடமாவது சொல்லவேண்டும் போல் இருந்தது.இவற்றை எல்லாம் வெளியே சொல்லலாமா சொல்லக் கூடாதா என சிறு பிள்ளைதானே அவன் எப்படி அறிவான்?

எவ்வளவு மதி நுட்பம் உடையவர்களாயினும் சரி எவ்வளவுதான் எச்சரிக்கையோடு செயல் படுபவராயினும் சரி சில நேரங்களில் மிகச் சிறிய விஷயத்தில் கோட்டைவிட்டுவிடுவதுண்டு.இங்கேயும் மகாராணி ருக்மா மகன் உறங்குவதாய் நினைத்து அவ்வாறு தனது திட்டத்தை அம்பலப்படுத்தி விட்டாரோ?கொஞ்சம் சறுக்கிவிட்டாரோ? வரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

ளவரசி ..இளவரசி என்று அழைத்தபடியே வரும் சுசீயை தலை குனிந்தபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மதிவதனி நிமிர்ந்து பார்த்தாள்.

இளவரசி எப்படி இருக்கிறீர்கள்..இளவரசி..?

ம்..ரொம்ப மகிழ்ச்சிதான்... பார்த்தால் தெரியவில்லை..?

ஏன் இப்படி நொந்து கொள்கிறீர்கள் இளவரசி..ஒரு முக்கியமான செய்தி இளவரசி...அதனை நீங்கள்..கேட்டால்...

சொல்லு....கேட்டால் அப்படியே மகிழ்ந்து போய்விடுவேனா?

ஆம் இளவரசி....நீங்கள் இளவரசர் ஹஸ்தனை சந்திக்கப்போகிறீர்கள்...

என்னடி உளறுகிறாய்?உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன..இப்படி உளற..?இல்லை.. என்னை ஏளனம் செய்கிறாயா?

இல்லை இளவரசி...நான் உளரவில்லை..உண்மையைத்தான் சொல்கிறேன்...இளவரசி கொஞ்சம் என்னைப் பேசவிடுங்களேன்...

ம்..சொல்லு..இன்னும் என்ன பாக்கி வைத்திருக்கிறாய்?..

இளவரசி...நீங்கள் இளவரசர் குப்தனைக் காண வேண்டும் காண வேண்டுமென என் கைபிடித்து அதற்கான உபாயம் சொல்லும்படி வருந்தினீர்கள் அல்லவா?

ஆம்..உபாயம் கண்டு பிடித்து விட்டாயாக்கும்..

இளவரசி..நீங்கள் வருந்தியது கண்டு என் மனமும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தது..அது பற்றிச் சிந்தித்த படியே நான் என் இருப்பிடம் நோக்கிச் செல்கையில்...

செல்கையில்..என்னவாயிற்று சுசீ..?

அரசாங்கத்தின் மிக முக்கியமானவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது..

யாரது..யாரது அந்த முக்கியமானவர்..?என் தந்தையா?...

இல்லை இளவரசி..

தாயா..?அவராய் இருக்க முடியாது..அவர் ஏதும் அறியாதவர்...

இளவரசி..தங்கள் தாயா ஏதும் அறியாதவர்.?அவர் எப்பேர்ப்பட்ட மதினுட்பம் வாய்ந்தவர்..தங்களின் தாயைப் பற்றி அறியாதவர் நீங்கள்தான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் சுசீ..நல்லவேளை தன் தாய் ராணி ருக்மா தேவியை இளவரசி சந்தேகப் படவில்லை..நல்லதாய்ப் போயிற்று...எனத் தோன்றியது சுசீக்கு..

இல்லை இளவரசி..மன்னியுங்கள்...அந்த முக்கியமானவரைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை...என்னிலையிலும் என்னேரத்திலும் தயவு செய்து அவர் யார் என்பது பற்றிகேட்டு என்னால் பதில் சொல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தி என்னை வருந்தவிடாதீர்கள்...அவர் தங்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.உங்களுக்கு உதவவே மிகவும் விருப்பம் கொண்டுள்ளார்..சிறை சென்று ஹஸ்தனைச் சந்திக்கும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்...நான் சொல்வது பர்றிச் சந்தேகம் கொள்ளாதீர்கள்..

உண்மையாகவே சொல்கிறாயா சுசீ....எனக்கு அந்த முக்கியமானவர் யார் எனத் தெரிந்துகொள்ள வேண்டாம் நான் ஹஸ்தனைச் சந்தித்தால் போதும்...எப்போது சந்திக்கலாம்..ஹஸ்தனை எப்போது சந்திக்கலாம்..சொல்

சுசீ ..சொல்...பரபரப்பும்  ஆர்வமும் ஆசையும் கலந்த குரலில் கெஞ்சுவது போல் கேட்ட மதிவதனி சுசீயின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.தன் கைகளைப் பற்றிக் கொண்ட இளவசியின் கைகள் நடுங்குவதை உணர்ந்த சுசீக்கு இளவரசியின் மனத் தவிப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள் இளவரசி...ஹஸ்தனைச் சந்திக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான செயல் ஒன்று உள்ளதாக அந்த முக்கியப்பட்டவர் சொல்லியுள்ளார்..

page 7

ன்ன அது..?என்ன அது..?..

சொல்கிறேன் கேளுங்கள்...இளவரசி நீங்கள் முதலில் ஹஸ்தன் பேசும் மொழியை ஓரளவு பேசவாவது கற்க வேண்டுமாம்..

என்னது...அது சமஸ்கிருதமும் மகதமும் கலந்த மொழி..அதை நான் இப்போதே கற்க வேண்டுமா?அதனால் என்ன பயன்?

ஹஸ்தனை சந்திக்கு போது அவருடன் எப்படி பேசுவீர்கள்..?உங்கள் மனதில் உள்ளதை எப்படிப் புரிய வைப்பீர்கள்?

அப்படியானால் சரி..அப்படியானால் சரி..அம்மொழியை யார் கற்றுக்கொடுப்பார்கள்?

அம்மொழி தெரிந்த அந்த அந்தணர் அதான் போட்டிகள் நடந்த அன்று ஹஸ்தனுக்கும் மன்னருக்கும் இடையே நடந்த உரையாடலை பரிமாற்றம் செய்தாராமே அவர் உங்களுக்கு அம்மொழியைக் கற்றுத் தருவாராம்.அதுவும் இன்று முதலே..இன்னும் சற்று நேரத்தில் அவ்வந்தணர் இங்கு வந்துவிடுவார் இளவரசி.இதில் உங்களுக்கு சம்மதம்தானே?

முழு சம்மதம் சுசீ..எப்போது ஹஸ்தனைச் சந்திப்பது..?

இளவரசி நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக அமொழியையைக் கற்கிறீரோ அவ்வளவுக்கவ்வளவு குப்த இளவரசரைச் சந்திக்கும் காலமும் விரைந்து வரும்... 

பல நாட்களுக்குப் பிறகு இளவரசியின் முகத்தில் அமைதியும் கொஞ்சம் மகிழ்ச்சியும் பரவுவதைக் கவனித்தாள் சுசீ.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

சிறைச் சாலை.அரைகுறை மயக்கத்தில் கிடந்தான் ஹஸ்தன்.தன்னையும் அறியாமல் ஏதோ புலம்பியபடி கிடந்தான்.அத்தனையும் உளறல்.அப்படி மட்டும் உளறாமல் புரியும்படி பேசிக்கொண்டிருந்தால் அவன்

மதிவதனியோடு அரைகுறை மயக்க நிலையில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருப்பது அருகில் யாராவது நின்றுகொண்டிருந்தால் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும்.அப்படி அவன் உளறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மன்னர் அதிவீரன் வைத்தியரோடும் அந்தணரோடும் உள்ளே நுழைந்தார்.

புலம்பியபடி கிடந்த ஹஸ்தனைக் கண்ட வைத்தியருக்கு தாம் கொடுத்த மருந்து வேலை செய்வது கண்டு நிம்மதியாயிற்று.

ஹஸ்தனின் நிலையைக் கண்ட மன்னருக்கு குழப்பமாய் இருந்தது.என்ன இது இவரிடமிருந்து எதனையும் அறிந்து கொள்ள முடியாது போல் உள்ளதே?..இன்னும் இவர்க்கு உடல் நிலை சீராக வில்லையா என்ன..?

வைத்தியரே..?என்ன இது?இவர் ஏன் இப்படி உள்ளார்?நேற்று வரை இவர் குணமாகிவிட்டதாகத்தானே சொன்னீர்கள்?..

மன்னா..அதுதான் எனக்கும் புரியவில்லை..நேற்று கூட நன்றாகத்தான் இருந்தார்..இப்போது ஏன் இப்படி?.. என்று சொல்லிக்கொண்டே ஹஸ்தனின் அருகில் சென்று அவனைச் சோதிப்பது போல் அப்படியும் இப்படியும் அவனைப் புரட்டிப் பார்த்தார்.தலையில் கைவைத்துப்பார்த்தார்.காயம்பட்டு ஆறிப்போன இடங்களைத் தொட்டுப் பார்த்தார்.சிறிது யோசிப்பது போல் மௌனமாக இருந்தார்.

மன்னர் அவர்களே..திடீரென இவருக்கு ஏதோ விஷக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது..அதுவே இவருக்கு மயக்கத்தை உண்டாக்கி மூளையின் செயல் பாட்டைக் குறைத்தும் உள்ளது.அதனால்தான் இவர் பேச்சில் தெளிவும் இல்லை அர்த்தமும் இல்லை..அரைகுறை மயக்கத்தில் உள்ளார்.யாரையும் இன்னார் என்று இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை...என்றார்.

ஐயோ இதென்ன விபரீதம் வைத்தியரே..?இவர் உயிருக்கு ஹானி ஏதும் ஏற்படுமா?காலம் மிகக் குறைவாக உள்ள நிலையில் இவரிடம் கொலைபற்றி ஏதும் விசாரிக்க முடியவில்லையே..இவரை சரிபடுத்தி விட முடியுமா?எப்போது இவர் உடல் நிலை சரியாகும்?..

மன்னர் அவர்களே..கவலை வேண்டாம்..இவர் சரியாகி விடுவார்..ஆனால் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து தினங்களாவது ஆகும் இவரைச் சரிபடுத்த என்றார் வைத்தியர்.ஆனாலும் மன்னரிடம் பொய்யுரைக்கிறோமே என்று வருத்தம் மேலோங்கியது அவர் நெஞ்சில்.

விரைவில் இவர் குணமாக ஆவன செய்யுங்கள் வைத்தியரே என்று சொல்லியபடி சிறையைவிட்டுக் கிளம்பினார் மன்னர் அதிவீரன்.

மன்னரோடு தாமும் கிளம்பினர் வைத்தியரும்  அந்தணரும் அப்படிக்கிளம்பிய வேளையில் வைத்தியர் சின்னக்குப்பியில் இருந்த லேகியம் போன்ற மருந்தினை விரலால் எடுத்து ஹஸ்தனின் நாக்கில் வைத்துவிட்டுக் கிளம்பினார்.

மரியாதையின் பொருட்டு மன்னரின் இருப்பிடம் வரை அவரோடு சென்ற வைத்தியரும் அந்தரும் மீண்டும் திரும்புகையில்..மகாராணியிடம் சென்று நடந்தவற்ரைக்கூறி ஹஸ்தனுக்கு மாற்று மருந்து அளித்தாகிவிட்டதென்றும் சற்று நேரத்தில் அவர் சரியாகி விடுவார் என்று சொல்லிச் சென்றனர்.

யிற்று  இளவரசி மதிவதனி அந்தணரிடம் ஹஸ்தன் பேசும் மொழியைக் கற்க ஆரம்பித்து ஏழுனாட்கள் ஆகிவிட்டன,அவளின் கற்கும் ஆர்வத்தையும் அசாத்தியத் திறமையையும் கண்டு அந்தணர் வியந்து போனார்.சரளமாகப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள் இளவரசி.ஏன் வரமாட்டாள்?ஹஸ்தனைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமல்லவா அவளை ஆட்டுவிக்கிறது?..

இவளின் மொழித் திறமை பற்றி மகாராணியிடம் சொல்லப்பட..மதிவதனி ஹஸ்தனைச் சந்திக்கும் நாள் குறிக்கப்பட்டது.அவள் எவ்வாறு யாரோடு சிறைக்குச் சென்று ஹஸ்தனைச் சந்திக்கவேண்டுமென்ற திட்டமும் தயாரானது.மகாராணி பிறரோடு சேர்ந்து கொண்டு என்ன செய்கிறார் என்ன பேசுகிறார் என்பது அனைத்தும் தூங்குவதுபோல் நடித்துனடித்து இளவரசன் சுந்தரனால் அறியப்பட்டது.இவனால் அறியப்பட்டது என்பது மகாராணியால் அறியப்படாமல் போயிற்று.

இளவரசி நீங்கள் நாளை சிறை சென்று ஹஸ்தனைச் சந்திக்கப்போகிறீர்கள் அந்த முக்கியமானவர் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதகக் கூறினார் என்று சுசீ வந்து சொன்னதிலிருந்து மதிவதியின் மனது ஒரு நிலையில் இல்லை.முதன் முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் அருகருகே சந்திக்கும் போது எப்படி இருக்கும்?பேசத் தோன்றுமா இல்லையா?பேச்சு வருமா வராதா?உண்மையில் அவர் என்னை நினைக்கிறாரா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?என்று அனேக சிந்தனை அவளை ஆக்ரமித்தன.இரவு முழுதும் உறக்கமில்லை....பொழுது புலர்ந்தது..மஞ்சத்தில் எழுந்து அமர்ந்து கொண்டாள் மதிவதனி..

இதோ... இன்னும் சிறிது நேரத்தில் சிறை சென்று ஹஸ்தனைச் சந்திக்கப்போகும் மதிவதனி.. அவனைச் சந்திக்க சிறைக்குள் நுழையும் போது அவனின் காதலியாகச் செல்கிறாள்..சந்தித்துத் திரும்பும் போது காதலியாகவே திரும்புவாளா?மனைவியாகத் திரும்புவாளா?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்... நன்றி....

தொடரும்...

Episode 18

Episode 20

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.