(Reading time: 13 - 25 minutes)

06. பைராகி - சகி

bhairagi

ழக்கம் போல இறைவனை மலர்களால் வழிப்படும் பொருட்டு குளக்கரையில் இயற்கையிடம் மலர்களை யாசித்து கொண்டிருந்தாள் யாத்ரா.தேன்செரியும் நந்தவனம் அவளது விண்ணப்பத்தை ஏற்று தேன் மலர்களை தானமாக வழங்கியது.

கண்கள் பறிக்கும் சூரியனின் ஔி,அவளது முகத்தை கரங்களால் மூட செய்தது.ஒரு புன்னகை பூத்தப்படி மலர்களை பறிக்க ஆரம்பித்தாள்.

அமைதியான அச்சூழலில் மனதிற்கு இதமான தென்றலிசையோடு,அவளது கொலுசொலியும் கை கோர்த்து,புதுவித ராகம் இயற்றின...யாருமில்லாத காரணத்தால் இனிமையான ராகமானது அவளது இதழ்கள் மூலம் வெளி வந்து கொண்டிருந்தது.

காற்றும் அதறகேற்ப தாளம் போட,செடி கொடிகளும் அதற்கேற்ப நர்த்தனம் ஆடின...

காற்றில் திடீரென அவளது சால்வை [துப்பட்டா] அசைய ஆரம்பித்து,அவள் ஏமாறும் சமயம் பறந்துப் போனது.திடீரென தனது வஸ்திரம் தன்னை நீங்குவதைக் கண்டு திடுக்கிட்டவள்,திரும்பினாள்.

அது நேராக சென்று ஒருவன் முகத்தில் விழுந்தது.வந்தவன் ஆதித்யா என்று எண்ணி இயல்பான அவள் முகம்,அது வேற்று ஆண்மகன் என்றதும் திகைத்தது.அவன்...ராகவ்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அவனது முகம் அவளுக்கு நினைவில் இல்லை என்றப் போதிலும்,அவனது குரூரமான பார்வை அவளுக்கு திகிலூட்டவே செய்தது.மெல்ல அவளருகே வந்தவன்,அவளது முகத்தை பார்த்தப்படி பேசாதிருந்தான்.

அவனிடத்தில் தன் வஸ்திரத்தை கேட்கவும் பெண்மனம் தயங்கியது.

இரு விழி நிலம் நோக்கி பதித்தது அவளுக்கு!!!

"உன் பெயர் என்ன?"-எடுத்த எடுப்பிலே உரிமையை நிலைநாட்ட முனைந்தது அவனது வாக்கியம்.

முகத்தை சுளித்தப்படி,

"யாத்ரா!"என்றாள்.

"எந்த ஊரு?"

"சென்னை..."

"ம்..."-என்றவன் அவளது வஸ்திரத்தை தந்தான்.

அதை வாங்கி போர்த்திக் கொண்டாள் அவள்.

"அழகா இருக்க!"-என்றவனை,சாம்லாக்குவதை போல ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

"ரொம்ப...அழகா இருக்க!உன்னை பார்த்ததுல இருந்து என்னமோ ஆகுது எனக்கு!புதுவித உணர்வாக இருக்கு!"

"சார்...மைன்ட் யுவர் வோர்ட்ஸ்!"-விரல் நீட்டி அவள் பேசுவும்,ஓரிரு நொடிகள் கேலியாக அவளையே பார்த்தான் ராகவ்.

"இதுவே இன்னொருத்தர் என் முன்னாடி விரல் நீட்டி இருந்தா!இந்நேரம் அவங்க உயிரோட இருந்திருக்க வாய்ப்பில்லை!இன்னொருமுறை இப்படி பண்ணாதே!நான் எப்போதும் நல்ல நிலையில் இருக்க மாட்டேன்!"-அவனது பேச்சு அவளது அச்சத்தை அதிகமாக்கியது.ராகவ் முன்னால் நகர ஆரம்பித்தான்.அவளது அச்சம் உச்சத்தை தொட்டது.

"இறைவா!என்னை காப்பாற்று!"-மனதில் வேண்டியப்படி பின்னால் நகர்ந்தாள் அவள்.

அச்சமயம் யாரோ பலமாக விசிலடிக்கும் சப்தம் கேட்டது.

ஒரு பத்தடி தொலைவில் நின்றிருந்தான் ஆதித்யா.நின்ற இதயம் அப்போது தான் துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு!!

ஒருவர் முகத்தை மற்றவர் நோக்க,இருவர் முகத்திலும் குரோதம் வெடித்தது!!வெறும் தன்னவளை கலங்கடித்த கோபமாய் தெரியவில்லை அவன் முகத்தில்!!

ஜென்ம பகை போன்று ஒரு பாவனை!!ராகவை உற்று நோக்கியவண்ணம் யாத்ராவை தன்னருகே வரும்படி கண்களால் செய்கை செய்தான் அவன்.

மூச்சைப் பிடித்துக்கொண்டு சென்று அவன் பின்னால் நின்றாள் யாத்ரா.

காலத்திற்கு கட்டுப்பட்ட கடிகாரமாய் அவளது செய்கை ராகவின் கோபத்தில் எண்ணெய்யை வார்த்தது.

ஆதித்யா அவளது கரத்தை இறுக பற்றினான்.அது நிச்சயம் அவளுக்கு வலித்திற்க வேண்டும்!!

ஏதும் பேசாமல் திரும்பி,அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும்,அவனது இறுக்கமான பிடி தாளாமல்,

"ஆதி!கை வலிக்குது விடு!"என்றாள்.

அவன் தனது பிடியை தளர்த்தினான்.

"எதுக்கு நீ தனியா வந்த?யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்ல!'

"இல்லை..."

"அவன் அப்படி பேசுறான்!ஓங்கி ஒரு அறை விட்டிருக்க வேண்டியது தானே!என்னிடம் மட்டும் வாயாட தெரியுதா?"-அவன் கோபத்தில் உச்சத்தில் கத்தினான்.

அவள் மிரண்டு போனாள்.

இதுவரை இவ்வளவு கோபத்தை அவனிடத்தில் அவள் கண்டதில்லை...

"ஆதி!"

"பேசாதே...உன்னை என்ன செய்வேன்னு தெரியாது!"

"நான்...என்ன பண்ணேன்?"-அப்பாவியாய் கேட்டாள் யாத்ரா.

"பேசாதேன்னு சொன்னது காதுல விழலை?"-அவனது கோபத்திற்கான காரணம் விளங்கவில்லை.தன்னிச்சையாக அவளது கண்கள் கலங்கின...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.