(Reading time: 6 - 12 minutes)

04. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

வாங்க மிஸ்டர் இஷான்… நானே வரணும்னு தான் நினைச்சேன்… ஆனா இந்த வேலையில மாட்டிக்கிட்டேன்… சாரி…” என்ற காலேஜ் பிரின்சிபாலிடம்,

“இட்ஸ் ஓகே சார்… இது என்னோட டியூட்டி…” என சொன்னவன்,

“சொல்லுங்க சார்… என்ன விஷயமா வர சொன்னீங்க?..”

“வாங்க இஷான்… சொல்லுறேன்…” என்றவர், அவனிடம் அனைத்தையும் கூற, அவன் அவர் சொன்னதை கவனமாகக் கேட்டு விட்டு,

“சரி சார்… நான் ஜெய்யிடமும், கமிஷனரிடமும் தகவல் சொல்லிடுறேன்… நீ கவலைப்படாம இருங்க…” என்றவன் அவரின் அறையை விட்டு வெளியேற,

அந்த நேரம் சரியாக இஷானின் செல்போன் சிணுங்கியது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

நம்பரை பார்த்ததும், முகத்தில் முறுவலுடன், “சொல்லுடா…” என ஆரம்பித்தவனை பேசவிடாது தடுத்தவன்,

“இஷான்… நான் சொல்லுறதை கவனமா கேளு… ஒரு நிமிஷம் கூட இப்போ நீ அங்க நிற்க கூடாது… உடனே அங்க இருந்து கிளம்பு…” என்றதும் இஷானின் பார்வை அங்கும் இங்கும் சுழல,

“இஷான்… சொல்லுறேன்ல… கிளம்பு…” என்ற ஜெய்யின் குரலில் மிகுந்த கண்டிப்பு இருந்ததை இஷானால் புரிந்து கொள்ள முடிந்தது…

மேற்கொண்டு அவனோடு வாதிடாமல், “சரி…” என்ற வார்த்தையோடு இஷான் கிளம்புகையில்,

“டேய்…. அண்ணா… எங்க ஓடுற?...” என்ற சதியின் குரலில் அவன் சற்றே நின்றான்…

“இல்ல சதி.. இப்போ பேச நேரம் இல்லை… நான் உங்கிட்ட அப்புறம் பேசுறேன்… கிளம்பணும்.. நான்…” என்றவனின் குரலே எதுவோ இருக்கிறது என்பதை உணர்த்த, அவளும் சரி என்றபடி அவன் கார் வரைக்கும் செல்ல,

அந்த நேரம் எங்கிருந்தோ அதிவிரைவாக வந்த காரின் கதவைத்திறந்து, “ஏறு…” என கிட்டத்தட்ட உறுமினான் ஜெய்…

“இவன் இங்க எங்கே?...” என்றபடி யோசித்த இஷானை கண் பார்வையில் ஜெய் மிரட்ட, அவன் சட்டென்று உள்ளே ஏற முயல, அவளின் பின்னாடி நின்றிருந்த சதி தைஜூவின் குரலில் சற்றே திரும்ப, தட்… என்ற சத்தத்துடன் தோட்டா ஒன்று மரத்தின் மீது பதிந்தது…

தே நேரம்,

“வாங்க.. காபி குடிக்கிறீங்களா?...” என்ற தனது மனைவி பிரசுதியின் குரலில் பேப்பரிலிருந்து கண்களைப் பிரித்தெடுத்தார் தட்சேஷ்வர்…

“சதி?......” என அழைத்தவர், மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டு,

“சாரி… இந்நேரம் காலேஜில் இருப்பால்ல… மறந்துட்டேன்…” என நெற்றியை அவர் அழுத்திவிட, பிரசுதி சிரித்தார்…

“எதுக்கு நீ இப்போ சிரிக்குற?...”

“பின்ன என்ன நீங்க வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள அவ காலேஜ் கிளம்பி போயிட்டா… அதை நான் நீங்க வந்ததுமே சொல்லிட்டேன் உங்ககிட்ட… இப்போ என்னடான்னா அதையும் மறந்து நீங்க மறுபடியும் எங்கிட்டயே கேட்குறீங்க…” என முறைத்த மனைவியிடம்,

“சரி… சரி… விடு… போய் காபி எடுத்துட்டு வா…” என சொல்ல

“இருந்தாலும் மக பைத்தியம் உங்களுக்கு முத்திடுச்சுத்தான்…” என புன்னகை பூத்த வண்ணம் சமையலறைக்குள் பிரசுதி நுழையவும்,

“இப்போ காலேஜில் கிளாஸ் ஸ்டார்ட் ஆகியிருக்குமோ?... இன்னும் கொஞ்ச நேரம் இருக்கே அவளுக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக…” என யோசித்தவாறே போனை கையிலெடுத்து பார்த்தார் மகளுக்கு போன் செய்யவா வேண்டாமா என…

தோட்டா சத்தம் கேட்டதும், காரிலிருந்து சட்டென்று இறங்கினான் ஜெய்… இஷான் இறங்கி இந்த பக்கம் வருவதற்குள் அவன் வந்துவிட்டிருந்தான்…

“சதி… ஆர் யூ ஆல்ரைட்?...” என சதியின் இரு தோளையும் பிடித்துக்கொண்டு இஷான் அவளை ஆராய,

அவள், இதயம் தாறுமாறாய் குதித்தது… நடந்த நிகழ்வு ஒரு காரணம் என்றால், தன்னை தன்னுணர்வுக்கு கொண்டு வர அவளுக்கு சில மணித்துளிகள் பிடிக்கத்தான் செய்தது…

அதற்குள், “சதி………” என்ற கூவலோடு, தைஜூ வந்து அவளை கட்டிக்கொள்ள,

“சதி… உனக்கொன்னும் ஆகலையே…” என்ற வார்த்தைகளோடு சதியை ஆராய்ந்தவள், கோபத்தோடு இஷானிடம் திரும்பினாள்…

“கொஞ்சம் குறி மிஸ் ஆனதால அவ தப்பிச்சா, இல்லன்னா இந்நேரம் என்ன ஆகியிருக்குமோ… நினைச்சுப் பார்க்கவே முடியலை…” என்றவள், அடுத்து பேச வாயெடுக்கும் முன்,

“தைஜூ, நான் நல்லா இருக்குறேன்… நீ அண்ணாவ திட்டாத… அவன் என்ன பண்ணுவான் பாவம்?... யாரோ எதுவோ பண்ணினதுக்கு நீ அண்ணாகிட்ட கோபப்படுறது சுத்தமா நல்லா இல்ல தைஜூ…” என அவள் சொல்லிமுடிக்கையில், ஜெய்யின் கார் மின்னல் வேகத்தில் கிளம்பியது…

“டேய்… ஜெய்…” என கத்திக்கொண்டே சென்ற இஷான், மீண்டும் சதியிடம் திரும்பி வந்து, “எதுவும் இல்லைடா… நீ பயப்படாத சரியா… நான் போயிட்டு உனக்கு போன் பண்ணுறேன்… நீ கிளாஸ் போ… பிரின்சிபால்கிட்ட நான் போனில் பேசிக்கிறேன்… நீ போ…” என தங்கையை அவன் விடாப்பிடியாக தள்ள, அவளும் தைஜூவுடன் நகர முயற்சிக்கையில், தைஜூவைப் பார்த்து, “சாரி…” என்ற இஷான், அதற்குமேல் அங்கே ஒரு நொடிகூட நிற்கவில்லை…  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.