(Reading time: 4 - 8 minutes)

10. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

ஆமான் எனும் ஒரு அமைச்சன்

தீது செறி தீயனாம்

தீராத அகந்தை நிறை நெஞ்சனாம்

வாது சூது வந்திலங்கும்

அரவம் நிகர் வாயனாம்

அவன் பெயர் ஆமானாம்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

 

ஆமானின் அகந்தை

அரசவை அமைச்சனாம்

ஆலோசனை மொழிவனாம்.

அஃது இங்கு ஆக்கம் பெற

{tooltip}ஆம்பி{end-link} வாளி {end-tooltip} நிறை அபரஞ்சி தருவனாம்

அரசனவன் தான் ஆட்டுவிக்கும் பாவையென

அவனி எங்கும் பகர முனைவனாம்.

 

வெறும்பெருமை விழைவனாம்

வேடம் பல புனைவனாம்

வீடு விட்டு வீதி வந்தால்

விழி தொடரும் யாவரும்

விழுந்து வணங்க வேண்டும் என்பனாம்.

 

நாணல் நிகர் மக்களாம்

நடை பாதை அரண் அங்காடி

நாடோறும் அவன் சரண் பணிந்தராம்.

 

மொர்தகனுடன் ஆமானுக்கு பகை உண்டாகல்

அங்கிருந்தான் மொர்த்தகன்

அன்பிருந்தவன் மனமெல்லாம்

தங்கை புற செய்திக்காய்

தவம் தவம் என்றதாய்

{tooltip}தாழ்{end-link} தாழ்பாள்{end-tooltip}தாங்கும் அரண் வாயில்

தான் நோக்கி {tooltip}தாழ்{end-link} கீழான{end-tooltip}நீசன் ஆமான்

{tooltip}தாள்{end-link} பாதம்{end-tooltip}நோக்கா இருந்தனன் அமர்ந்தே!!!

 

ஆமான் பழி வாங்க நினைத்தல்

எழும் ஆதவன் எனைப் பார்த்து

ஏழும் அதனோடு ஒரு நூற்று இருபதும் தேசம்

கோலேச்சும் கொற்றவன் குரல் பணிவான் என்னோடு

மோதும் இவன் யாவன்? எஃது குலம்? எந்நிலை இவன் வளம்?

 

சொல்லிவா, ஒற்றறிந்து சுற்றி வா

குடி அறுப்பேன் குருத்தோடு வேரறுப்பேன் இவன் தாய்

சூலறுப்பேன் சுற்றமற்ற நிலை தருவேன் இவன் உயிர்

நீத்த யாக்கைக்கே யாம்

தினம் நிதம் இவன் எனை செயும் கர்வ பங்கம் வதம்

ஆமான் செய்வித்தான் மாசினம்.

 

செஷாங்கன் தூக்கமின்றி தவித்தல்

சீதள திங்கள்

தீண்டி ஆடும் தென்றல்

வந்தணைக்கும்

பொதியவிழ் {tooltip}நறுவீ{end-link} நறுமண மலர்{end-tooltip} {tooltip}நாறல்{end-link} நறுமணம்{end-tooltip}

{tooltip}மன்றல்{end-link} திருமணம்{end-tooltip}கண்டவன்

மையல் கொண்டிடும்

தையல் இன்றியால்

தண்ணுளம் {tooltip}தபுத்த{end-link} அழிய{end-tooltip}

துயிலழிந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.