(Reading time: 9 - 18 minutes)

15. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

unakkaga mannil vanthen

ரு நாள் காலை வழக்கம் போல் எழுந்து தேதியை கிழித்தவன், அப்படியே கேலண்டரை பார்த்துக் கொண்டிருந்தான். இன்றோடு அவன் எமனிடம் சவால் விட்டு பூமிக்கு வந்து 45 நாட்கள் ஆகிறது.

அவன் முகம் சோகத்தில் வதங்கியது. அனு தனக்கு இல்லை என்று வந்த அன்றே தெரிந்துவிட்டது. அதற்காக அவனிடம் வருத்தம் இருந்தாலும், அதை விட அதிகமாக அனுவின் நட்பும் அவளால் கிடைத்திருக்கும் ஒரு அழகான குடும்பத்தையும் இழக்கப் போகின்றோம் என்ற எண்ணம் தான் அவன் வருத்தத்திற்கு காரணம்.

“சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகம் ஆகிவிடும்” என்பதற்கு விஷ்ணுவின் வாழ்க்கை ஒரு உதாரணமாகிவிட்டது. ஆனால் என்ன செய்வது அவன் வாங்கி வந்த வரம் அப்படி.

தன் விதியை நெந்துக் கொண்டு அனுவைப் பார்க்கக் கிளம்பினான்.

பேருந்து நிலையத்தில் அழகிய சிலை போல் நின்று கொண்டிருந்தவளின் முகம் மட்டும் சோகமாய் இருந்தது.

அருகில் சென்றவன் அனுவிற்கு காலை வணக்கத்தைக் கூறினான். பதிலுக்கு வணக்கம் கூறியவளின் குறலில் சுரத்தையே இல்லை.

“என்ன அனு டல்லா இருக்கீங்க, உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று நட்போடு வினாவினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

அதற்கு அனு பதில் கூறத் தொடங்கும் முன்பே “மேடம் கு உடம்பு எல்லாம் நல்லாதான் இருக்கு, மனசுதான் சரியில்லை” என்றாள் திவ்யா. அதற்கு “ஆம்” என்று பச்சை பிள்ளை போல் தலையாட்டினாள் அனு.

“என்ன ஆச்சி அனு? ஏன் மனசு சரியில்லை?” என்றான் விடாமல்.

“இன்னைக்குதான் எனக்கு ஆபிஸ்ல கடைசி நாள். ஆபிஸ் ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன். அதான்” என்று நிறுத்தினாள். அவள் பேச்சில் அப்படி ஒரு சோகம். அழுகை ஒன்றுதான் பாக்கி.

விஷ்ணுவிற்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது. முன்பே ஒரு முறை அனு கூறி இருந்தாள். திருமணத்திற்கு முன்பு வேளையை விடப் போவதாக.

விஷ்ணுவிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.

திவ்யா அனுவைப் பார்த்து “கண்ணீரை எல்லாம் இங்கேயே வேஸ்ட் பண்ணிடாத டீ. ஆபிஸ்கு நிறையத் தேவைப்படும்.” என்று கூறிவிட்டு விஷ்ணுவைப் பார்த்து “இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு விக்ரமன் படமே ஓட போகுது. பார்க்கத்தான் சகிக்காது” என்றாள்.

காரணம் புரியாமல் “ஏன்” என்பது போல் திவ்யாவைப் பார்த்தான் விஷ்ணு.

“இவங்க தான் ஆபிஸ்ல எல்லோருக்கும் பெட். இவ செல்லப் பேரு அமுல் பேபி. மேனேஜர், டீம் லீட் ல இருந்து கூட்டி பெருக்குர ஆலுங்க வரைக்கும் இவங்கதான் செல்ல பெண்ணு. ஒரு வாரமாவே இவங்க படம் தான் ஓடிட்டு இருக்கு ஆபிஸ்ல. இன்னைக்கு கிளைமேக்ஸ். தாங்க முடியாது” என்றாள் நக்கலாகக் கூறினாள் திவ்யா.

திவ்யா கூறியது கேட்க விஷ்ணுவிற்கு அச்சரியமாக இருந்தது. அதைக் கேட்கவும் செய்தான் விஷ்ணு“என்ன திவ்யா இப்படி சொல்றீங்க. இவங்க பெஸ்ட் ஃபிரெண்ட் நீங்க. மத்தவங்கள விட நீங்கதான் நிறைய சோகத்துல் இருப்பீங்க னு நினைச்சேன்”.

“சோகமா? எனக்க?. இப்போதான் நான் சந்தோஷமா இருக்கேன்” என்றாள் திவ்யா.

அதற்கு அனு “அப்போ நான் வேளைக்கு வராதது உனக்குச் சந்தோஷமா?” என்றாள் விசும்பலான குரலில்.

“சந்தோஷம் இல்ல” என்று மெல்ல நிருத்தி பின்பு “ரொம்ப ரொம்பச் சந்தோஷம்” என்று திவ்யா கூற, விஷ்ணுவிற்கு அந்தப் பதில் வியப்பாக இருந்தது.

“என்ன திவ்யா இப்படி சொல்லிட்டீங்க?” என்றான் விஷ்ணு.

“பின்ன என்ன விஷ்ணு. இவதான் ஆபிஸ்ல எல்லோருக்கும் செல்லம். அதற்காகவே யாரவது வந்து இவளிடம் செல்லமா வம்பிழுப்பாங்க, முதல இவளும் வாயாடுவாள். ஒரு கட்டதுக்கு மேல இவளுக்கு என்ன பேசுறது னு தெரியலனா என்னைக் கோத்து விட்டுடுவ. இவளுக்காகச் சண்டை போட்டு நான் பொல்லாதவள் ஆயிடுவேன். மறுநாள் பார்த்தால் சண்ட போட்ட இவங்க ரெண்டு பேரும் சிரிச்சி பேசிட்டு இருபங்க. இப்படி இவளுக்காகச் சண்டை போட்டுப் போட்டு எனக்கு பத்ர காளி னு பேரே வச்சிடாங்க” என்று திவ்யா கூற விஷ்ணு, அனு இருவருமே சிரித்துவிட்டார்கள்.

அவர்கள் சிரித்ததற்கு அவர்களை ஒரு முறைப்பு முறைத்து விட்டு “இன்னையோட இந்தத் தொல்லை விட்டது” என்று அனுவை சுட்டிக் காட்டி கூறினாள். அதைக் கேட்ட இருவருக்குமே தெரியும் திவ்யா வாய் அளவில் தான் கூறுகிறாள் என்று.

“ஏன் அப்படி சொல்றீங்க திவ்யா. ஆபிஸ் வீடு இதுதான் அவங்க உலகம் அதில் ஒண்ணு இல்லை னு நினைக்கும் போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கு. அவங்க பாவம்.” என்றான் அனுவிற்கு சப்போர்ட்டாக.

திவ்யா அடித்த நக்கலில் சற்று சிரித்திருந்தவள், விஷ்ணு கூறுவதை கேட்டவுடம் மீண்டும் சோகமானாள். கண்ணீர் கேட் பாஸ் வாங்கிக் கொண்டு வெளியே வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.