(Reading time: 8 - 16 minutes)

04. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

ந்த இல்லம் சிவன்யாவின் மனதிற்கு பிடித்த இல்லமாய் மாறிப்போனது.அதிலிருந்த ஒவ்வொன்றும் அவள் மனதினை வடிப்பது போலவே இருந்தது.

அவளுக்கான ஒரே குறை அவ்வளவு பெரிய வீட்டினில் தான் பூஜிக்கும் இறைவன் இல்லை என்பதே!!

"குட்டிம்மா!வீடு பிடிச்சிருக்கா?"

"ம்...ரொம்ப!ஆனா...ஒரே குறை தான்!"

"என்னடா?"

"என் சிவப்பெருமான் நான் என் கூட இல்லையேண்ணா!"-அதைக்கேட்டவன் பலமாக சிரித்தான்.

"பயப்படாதேடா!இன்னும் 2 நாள்ல சிவலிங்கம் பிரதீஷ்ட்டை பண்ண ஏற்பாடு பண்றேன் சரியா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

"ம்...சரிங்கண்ணா!"-மகேஷ் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

"ஆபிஸ் கிளம்புறேன்டா!திவா வருவான்.அவன்கிட்ட என் ரூம்ல டேபிள் மேல ஒரு ரெட் கலர் ஃபைல் இருக்கும்!கொடுத்துடு சரியா?"

"சரிங்கண்ணா!"-மகேஷ் சென்றதும் மீண்டும் தனிமை அவளை பீடித்தது.

அந்த பங்களாவை சுற்றிப் பார்க்க புறப்பட்டாள்.

"சிவாம்மா!"

"ஆ..."

"டீ குடிக்கிறீங்களா?'

"வேணாம் லட்சுமி!"

"சரிங்கம்மா!"-சிவன்யா பொறுமையாக ஒவ்வொரு அறையாக திறந்தாள்.

ஒவ்வொரு அறையும் மிக நேர்த்தியாக இருந்தது.

மனதிற்கு இதமாக,அவள் விருப்பப்படி கலைநயத்தோடு இருந்தது அது!

ஜன்னலின் திரைச்சீலையை நகர்த்தினால் சில்லென்ற காற்று மனதை வருடிவிட்டு சென்றது.

மனதில் மகிழ்ச்சி பொங்க மனதிற்கு பிடித்த பாடலை முனகி கொண்டிருந்தாள் சிவன்யா.

"நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்!

நெருங்கி வர ஆசை கொண்டே உயிர் இளகி நிற்கிறேன்!

அணையும் திரி தோன்றிட உயிர் மீண்டிட எனை தீண்டிடு உயிரே!

உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட துயர் தீருமோ உயிரே!"-என முனுமுனுத்தாள்.சட்டென அவளது முகத்தை காற்றின் மூலம் வருடியது சாளரத்தின் திரைச்சீலை!!

அந்த ஒரு நொடி அவள் முகம் எதிரே வந்து சென்றது அந்த கரும் உருவம்!!!

அந்த திரைச்சீலையை விலக்கி முடித்தவளின் தோளில் ஏதோ அழுந்த திடுக்கிட்டு திரும்பினாள்.

கணநேரத்தில் அவள் சுதாரிப்பதற்குள் அவளை தன் அணைப்பினுள் சேர்த்திருந்தான் திவாகர்.

"ஏ செல்லம்!"

"ஐயோ..என்ன விளையாட்டு இது?நான் பயந்துட்டேன்!"

"எதுக்கு பயம்?உன்னை டீஸ் பண்ற ரைட்ஸ் என்னை தவிர யாருக்கு இருக்கு?"-அவன் சொல்லி முடிக்க,அருகிலிருந்து கண்ணாடி ஜாடி கீழே விழுந்து நொறுங்கியது.

இருவரும் திடுக்கிட்டனர்.

அச்சமயம் அவர்களை தாண்டி ஓடியது அந்த சிறு பல்லி.

"பல்லியா?ச்சே..."-சிவன்யா சற்று பயத்தோடு ஜாடியை பார்த்தாள்.

"விடும்மா...பல்லி தானே!அதுக்கு போய் இப்படி முழிக்கிற!"

"இல்லைங்க...ஒண்ணுமில்லை!"

"சரி வா!அப்பறமா கிளீன் பண்ணிக்கலாம்!"-திவாகர் அவளது கரத்தை இறுக பற்றிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

"அண்ணா உங்கக்கிட்ட ஏதோ டாகுமண்ட் தர சொன்னார்!"

"ம்..அதுக்கு தான் வந்தேன்!கொஞ்ச நேரம் கழிச்சு வாங்கிக்கிறேன்!"

"ம்..."

"செல்லம்!"

"ம்??"

"எங்கேயாவது வெளியே போகலாமா?"

"வேணாம்...அண்ணாக்கு தெரிந்தா அவ்வளவு தான்!"

"கடவுளே..!என் நண்பனே எனக்கு வில்லனா இருக்கானே!"

"என்னங்க!"

"ம்..என்னம்மா?"

"நம்ம விஷயத்தை அண்ணாக்கிட்ட சொல்லிடலாம்!"

"ரியலி...ஐயோ என் செல்லமே..!இதுக்காக தானே இத்தனை வருஷமா காத்திருந்தேன்!"

"ஆனா அவர் ஒத்துக்கலைன்னா?"

"சொல்லி பார்ப்போம்..!பிடிக்கலைன்னா,நான் அடுத்த நிமிஷமே வந்து உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன்!""

"என்ன?"

"பின்ன என்ன விட்டுட்டுப் போக சொல்றீயா?எனக்கு அவனும் முக்கியம்..நீயும் முக்கியம்!அவனுக்கு புரியுறா மாதிரி சொல்றேன்!"

"ம்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.