(Reading time: 21 - 41 minutes)

37. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

தியழகன், தேன்நிலா,ஷக்தி,புவனா, கதிர் ஐவரும் அங்கு இருப்பதைக் கண்டு அவர்கள் முன் வந்தாள் சங்கமித்ரா. ஏற்கனவே ஷக்தி, கதிர் காவியாவின் நடவடிக்கையை கவனித்து விட்டதால் இப்போது மனைவியின் திட்டத்துக்காக ஆவலாக காத்திருந்தான். அவர்களை பார்த்துகொண்டே நடந்து வந்த அந்த சில நொடிகளில் அவனின் பார்வையை சந்தித்தவளுக்கு அந்த பார்வையின் அர்த்தமும் புரியாமல் இல்லை. ஒரு வெற்றி புன்னகையுடன் அங்கு வந்தவள், மனதில் இருந்ததை உடனே கூறினாள்.

“ நம்ம காவியாவுக்கு தமிழ்ரஞ்சனை மாப்பிள்ளையாய் பேசினால் என்ன?” என்றாள் மித்ரா. அவள் எதிர்பார்த்தது போலவே கதிரேசன் அதிர்ந்தான். புவனாவும் அதிர்ந்தாள்தான், ஆனால் அது ஒரே ஒரு நொடிதான். ரஞ்சன் அந்த வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, புவனா அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை மித்ரா கவனித்து அவ்வப்போது அதை கலாய்த்து கொண்டும் இருந்தாள். அப்படி உன்னிப்பாக கவனித்தவள் இப்போது இப்படி மாற்றி பேசுவது என்னவோ அந்த சூழலுக்கு பொருந்தாதது போலவே இருந்தது. மேலும், காவியா கதிரின் காதல் கதையும் மித்ராவின் மூலமாய் புவனாவை எட்டி இருந்தது. ஆக மொத்தம் இந்த பேச்சு கதிரை அதிர வைக்கத்தான் என்று புரிந்து கொண்ட புவனா செல்லமாய் சங்கமித்ராவை முறைத்தாள். “இருந்தாலும் நீ இவ்வளவு ஷார்ப்பாய் இருக்க கூடாது புவனா!” என்று பார்வையாலேயே கூறினாள் மித்ரா.புவனாவோ “இதற்கேவா?” என்று பார்வையாலேயே பதிலளித்து அந்த சூழ்நிலையில் தனது கருத்தையும் கூறினாள்.

“ சூப்பர் லாயரம்மா, நானே சொல்லனும்னு நினைச்சேன், இந்த கல்யாண லிஸ்ட்ல அடுத்ததாய் இருக்குறது காவியாதானே? நாமதானே அவளுக்கு நல்லது பண்ணனும்ன்னு நினைச்சேன்,அதை நீ செயல் படுத்திட்டியேம்மா” என்று தனது ஃபீலிங்ஸை அவள் அள்ளி கொட்ட, புவனா பேச ஆரம்பித்ததுமே தனது செல்ஃபோனை துளாவிய ஷக்தி, சரியாய் அவள் பேசி முடிக்கவும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“இது உலகமகா நடிப்புடா சாமி” என்ற ரிங்டோனை போட்டு, அவளின் முறைப்பை பரிசாய் பெற்றுக்கொண்டான். புவனா அவனை பார்வையாலேயே மிரட்ட மித்ரா, நிலா,மதி மூவரும் மௌனமாய் சிரிக்க கதிர் மட்டும் இறுகி போய் அமர்ந்திருந்தான். சங்கமித்ரா அப்படி சொன்னதும் அவனுக்கு வந்த கோபத்தின் அளவு அவனுக்கு மட்டுமே தெரியும். அதே நேரம் அதை வெளிப்படையாய் சொல்ல அவனுக்கு இஷ்டம் இல்லை.ஒருவேளை காவியா அவனுடன் இயல்பாய் பேசி இருந்தால் கூட, அவன் இந்நேரம் இந்த பேச்சை தடுத்து இருப்பான்..ஆனால் காவியாவின் விஷயத்தில் அவனுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போனது.

இன்றும் கூட அவள் தன்னை கண்டுகொள்ளவே இல்லை என்பதை நினைவு கூர்ந்தான். எந்த உரிமையும் இல்லாமல் என்னவென்று பேசுவது ? என்று நினைத்தவன் அந்த உரிமையை தாந்தான் பெற வேண்டும் என்பதை மறந்து போனான். மித்ராவிற்கு அவனது மௌனம் ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், ஒரு பக்கம் கோபத்தை அளித்தது. “ வாயைத் திறந்து பேசு கதிர்”என்று மனதிற்குள் சொன்னவள் யோசனையாய் ஷக்தியை பார்த்து புருவம் உயர்த்த, இப்போது ஷக்தியும் பேச்சில் இணைந்தான்.

“ நீ காவியாக்கிட்ட இதைப்பத்தி பேசுனியா மிது?” என்றான் அவன்.

“ இனிமேதான் ஷக்தி பேசனும். அதற்கு முன்னாடி உங்க ஒபினியன் கேட்கனும்ன்னு நினைச்சேன்”

“ நல்லவிஷயம்தான். பட் காவியா ஓகே சொல்லனும்”என்ற ஷக்தி இப்போது தனது தம்பியை பார்த்தான்.

“ கதிர்”

“ம்ம்”

“ நீ என்ன நினைக்கிற இதபத்தி?”

“..”

“உன்னைதான் டா கேட்குறேன்”

“ என்னைக் கேட்டால்நான் என்ன அண்ணா சொல்ல முடியும்?”

“ நீங்க ரெண்டு பேரும்தானே ஒன்னா வொர்க் பார்க்குறிங்க? அவளுக்கு யாரையும் பிடிச்சிருக்கா?அவ யாரையாவது லவ் பண்ணின்னா உனக்கு தெரிஞ்சிருக்குமேன்னு நினைச்சோம்”என்று இடைப்புகுந்தாள் மித்ரா. அவளின் துளைக்கும் பார்வையை சந்திக்காமல் வெறுமையுடன் வானைப் பார்த்தான் கதிர்.

“ எனக்கு தெரியாது மித்ரா”

“ சரி அப்போ நாமளே” என்று மித்ரா எதும் சொல்ல வரவும், ஷக்தி அந்த பேச்சை நிறுத்தி “ டேய் கதிர், அவ உன் ப்ரண்ட் தானே? நீயே கேட்டு சொல்லு” என்றான்.

“ம்ம்ம் ஓகே.. நான் பேசிட்டு சொல்லுறேன். இப்போ எனக்கு தூக்கம் வருகிறது..குட் நைட்” என்றுவிட்டுன் அங்கிருந்து ஓடினான் கதிரேசன். அவன் போவதையே பார்த்த சங்கமித்ரா,அவனின் உருவம் மொத்தமாய் பார்வையில் இருந்து மறைந்ததும் ஷக்திக்கு ஹை5 கொடுத்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“ செம்மயா மாட்டி விட்டுட்ட மாமா நீ ..! இனிமே எல்லாம்கதிர் கையில் தான் இருக்கு..நமக்கு பதில் சொல்லி ஆகனுமே..அதற்காகவே காவியாகிட்ட கதிர் பேசித்தான் ஆகனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.