(Reading time: 22 - 44 minutes)

24. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ன்று இரவு முழுதும் ப்ரயு கண் விழிக்க வில்லை. ஆதி முதல் நாள் இரவு ஐ.சி.யூவில் பிரயுவிடம் பேசியதுதான். அதன் பின் அவன் யாரிடமும் பேசவில்லை. அவனின் முக இறுக்கம் பார்த்து அவனை நெருங்கவே அவன் அம்மாவிற்கு கூட பயமாக இருந்தது.

ஆதியின் நண்பன் காலையில் அனைவருக்கும் காபி வாங்கி கொடுக்க, ஆதி மட்டும் அதை வாங்க வில்லை. பிரபுவும் எத்தனையோ முயற்சி செய்தவன், ஆதி பிடிவாதமாக வாங்க மறுக்கவும் விட்டு விட்டான்

மறுநாள் காலையிலேயே பிரயுவின் பெற்றோர், தங்கைகள் மட்டுமல்ல, ஆதியின் தங்கை வித்யாவும் வந்துவிட்டாள்.

டாக்டரும் வழக்கத்தை விட சீக்கிரமே வந்துவிட, எல்லோரும் பிரயுவின் நிலை பற்றி அறிய காத்திருந்தனர். ஆனால் ப்ரயு கண் விழிக்க வில்லை.

ஆதியும், பிரபுவும் டாக்டரிடம் கேட்க,

“என்ன ஆச்சு டாக்டர்... ? இன்னும் பிரயுவிற்கு மயக்கம் தெளியவில்லையே?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்... 

“நாங்களும் அதைதான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்  மிஸ்டர்.ஆதி... சென்ற முறை போல் என்றால் அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் தெளிந்து விடும். இரவு என்பதால் உறக்கம் தொடர்ந்து இருக்க கூடும்.. என்று எண்ணி தான் காலையில் தெளியும் என்று எண்ணினோம் .. ஆனால் அவளுக்கு கொடுக்க கூடிய மருந்துகள் வேலை செய்வதாகத்தான் தெரிகிறது. எதற்கும் இன்று மதியம் வரை பார்க்கலாம் ..”

ஆதி திணறலாக “அவளுக்கு கோமா தவிர ஆபத்து ஒன்றும் இல்லையே டாக்டர் “ 

“இருக்காது மிஸ்டர் ஆதி. .. .அவளின் மற்ற உறுப்புகள் எல்லாம் வேலை செய்கிறது. இதய துடிப்பும் சீராக இருக்கிறது.  அவள் மயக்கம் தான் பிரச்சினை.. பார்க்கலாம்... “

இதை கேட்ட பின் தான் ஆதியின் மூச்சு சீராக வந்தது.. டாக்டரிடம்

“நான் போய் பார்க்கலாமா டாக்டர் ?”

“ஹ்ம்ம்.. நீங்கள் பாருங்கள்.. அவள் தெளியும் சமயம், உங்கள் குரல் கேட்டால் விரைவாக கண் விழிக்க வாய்ப்பு இருக்கிறது,”

டாக்டரிடம் பேசி விட்டு அவன் மீண்டும் ஐ.சி.யு. அருகே வரவும், அனைவரும் அவன் பதிலுக்காக ஆவலாக அவனை பார்த்தனர். ஆதி எல்லாரயும் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல், பிரயுவை பார்க்க சென்றான்.

அவனின் மனதை உணர்ந்து கொண்டவனாக , பிரபு அவர்களுக்கு டாக்டர் கூறியதை சொன்னான்.

பிரயுவின் அம்மா, அப்பா இருவருக்கும் இங்கே வந்த பிறகு தான் எல்லா விஷயமும் தெரிந்தது. மற்ற ரெண்டு மாப்பிள்ளைகள் சொல்ல, சொல்ல பிரயுவின் அம்மா அப்படியே தொய்ந்து விழுந்தார்.

பிரயுவின் அப்பா மாத்திரை எல்லாம் எடுத்துக் கொள்வதால் , இந்த அதிர்ச்சி அவர் உடல்நிலையை பாதிக்கவில்லை. ஆனால் அவரும் மற்றொரு chair இல் இடிந்து போய் அமர்ந்தார்.

எல்லாரும் இறைவனை வேண்டியபடி ப்ரயு கண் விழிக்க காத்து இருந்தனர்.

உள்ளே சென்ற ஆதி மீண்டும் பிரயுவிடம்,

“ப்ரயு.. ப்ளீஸ் .. என்னை மன்னிச்சிரு.. என்னால இந்த தண்டனை தாங்கிக்க முடியல.. சீக்கிரம் எழுந்து வா.. இனிமேல் உனக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கறேன் ... கண்ணை திறந்து பார் “

என்று அவளின் கையை வருடியபடி பேசிக் கொண்டிருந்தான். அவள் கூந்தலை ஒதுக்கி விட்டு முத்தமிட்டான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவள் அருகில் இருந்து அவளிடம் பேசி கொண்டிருந்ததோ, இல்லை ஆதியின் தொடுகையோ, டாக்டரின் மருந்தோ ஏதோ ஒன்று வேலை செய்து .. பிரயுவின் விழிகள் அசைய ஆரம்பித்தன.

உண்மையில் சொல்ல போனால், ஆதியின் குரல் தான் அவளை மீட்டது என்றும் சொல்லலாம்.. ஏன் என்றால் இந்த கடைசி ஆறு ஏழு மாதத்தை தவிர, மற்றபடி இருவரும் இரண்டு வருடங்களாக போனில்தான் அதிகம் பேசி இருந்தார்கள். பிரயுவால் அவன் குரலை வைத்து அவன் மனநிலையை ஓரளவு உணர முடியும் என்பதால் அவனின் தற்போதைய வேதனை அவளுக்கு புரிந்தது.

ஆதி மேல் கோபப்பட்டு பேசாமல் இருக்காமல், கொஞ்ச நாட்கள் கழித்து ப்ரயு பேச ஆரம்பித்து இருந்தால் கூட , அவளின் இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி இருக்கும்.. அதை செய்யமால் விட்டது தான் அவளின்  இந்த நிலைக்கு காரணம் என்று கூட சொல்லலாம்.

ஆதிக்கு அவள் விழிப்பது கூட தெரியவில்லை. அவன் அவள் கைகளை வருடுவதும், பேசுவதுமாக இருந்தான்.

அங்கே இருந்த நர்ஸ் கவனித்து டாக்டரை அழைத்து வர, அங்கே வந்த டாக்டர்

“மிஸ்டர் ..ஆதி நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள் “ என்றார்,

“ஏன் டாக்டர்?”

“பிரயுவிற்கு மயக்கம் தெளிய ஆரம்பிக்கிறது .. நாங்க மேற்கொண்டு அதற்கு ட்ரீட்மென்ட் செய்கிறோம்” என,

ஆதி டென்ஷனோடு வெளியே வந்தான்.

பிரபு அவனிடம் என்ன என்று கேட்க, டாக்டர் உள்ளே வந்திருப்பதை சுட்டி காண்பித்தான். எல்லோரும் ஐ.சி.யு.. வாசலையே பார்க்க, சற்று நேரத்தில் டாக்டர் வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.