(Reading time: 19 - 38 minutes)

08. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ண்ணியவற்றை எண்ணிய மாத்திரத்தில் செய்து முடிக்க மனம் திட்டமிடலாம்… எனினும் அதை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல… காலமும் நேரமும், ஏன் நம் மனதுமே ஒத்துழைக்க வேண்டும்…

இங்கே சதி-ஜெய் இருவரின் மனதும் ஒத்துழைத்து பேசிடுவோம் என முடிவெடுத்திருக்க, அதற்கு அந்த காலமும் நேரமும் கனிந்த பாடில்லை…

ஜெய்யைப் பார்க்க அவள் செல்ல முனைந்த போது,

“சதி… என்ன பண்ணுற இங்க?.. தைஜூ ரெடி ஆகிட்டாளா பாரு… அவளை கூட்டிட்டு வா… நல்ல நேரம் முடியறதுக்குள்ள சீக்கிரம் எல்லாம் செஞ்சாகணும்…” என பிரசுதி மகளிடம் பேசிக்கொண்டிருக்க…

அந்த நேரம் பார்த்து தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெய் அவளது கண்களில் பட, அவள் நிலையோ திண்டாட்டமாகி போனது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

கத்தி கூப்பிடவும் வழியில்லை… பிரசுதியிடம் விளக்கவும் முடியாத நிலையில், என்ன செய்ய என்று யோசித்தவள், கண நேரத்தில்,

“அம்மா…. எல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ போய் வேலையைப் பாரு… போ….” என அவரை தள்ளிவிடாத குறையாக அனுப்பி வைத்து, வேகமாக தைஜூ இருக்கும் மாடி அறைக்கு ஓடினாள்…

வேகமாக வந்த சதி, அங்கே இருக்கும் தைஜூவினையும் தாண்டிச் சென்று பால்கனியில் நின்று தேட ஆரம்பிக்க, அவள் விழிகளில் பட்டான் இஷான்…

“ஈஸ்வரா…” என முணுமுணுத்தவள், மாடியிலிருந்து கைகளை ஆட்டி அவனை அழைக்க, அவன் பார்க்கவில்லை…

“இவன் வேற… நேரம் தெரியாம விளையாடுறானே…” என நொந்தவள், இஷானுக்கு போன் செய்ய, அவன் அதை எடுத்து,

“என்ன பிசாசு?... எதுக்கு போன் பண்ணுற?...” என்றான்…

“பிசாசு எதுக்கு உனக்கு போன் பண்ணும்… உன்னை அடிக்கத்தான்…” என அவனிடம் சொன்னவள், அடுத்து அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே,

“இஷான்…. நேரமாகிட்டாம்… நீ நம்ம கமிஷனர் அங்கிளையும், உன் ஃப்ரெண்டையும் கூட்டிட்டு சீக்கிரம் வரணுமாம்… அம்மா சொன்னாங்க… நான் தைஜூவை கூட்டிட்டு வரேன்… சீக்கிரம் வா…” என சொல்ல…

“ஒகே சதி…” என்றவன், சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே சோமநாதன் தட்சேஷ்வரோடு பேசிக்கொண்டிருப்பது புரிய,

“சதி… அங்கிள் இங்க தான் இருக்குறார்… ஆனா ஜெய்யை தான் காணோம்…” என சொல்ல,

“அட அறிவு அண்ணா… அதை சொல்லத்தாண்டா நான் போனே பண்ணினேன் உனக்கு…” என மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்தவள்,

“இஷான்… உன் ஃப்ரெண்ட் தோட்டத்து பக்கம் போன மாதிரி இருந்துச்சு… நான் மாடிக்கு வரும்போது பார்த்தேன்… நீ வேணா அங்க போய் பாரேன்… இருந்தாலும் இருக்கலாம்…” என சொல்ல,

“சரி சதி… நான் கூட்டிட்டு வரேன்…” என அழைப்பை கட் செய்தவன், நேரே ஜெய்யைத் தேடிச் சென்றான்…

கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி, பலத்த யோசனையுடன் நின்றிருந்தவனை இஷானின் குரல் கலைக்க, திரும்பினான் ஜெய்…

“இங்க என்னடா பண்ணுற?...”

“ஒன்னுமில்ல… சும்மா தான்…” என்ற ஜெய் இஷானை அங்கே எதிர்பார்க்கவில்லை என அவன் பார்வையே சொன்னது…

நல்லவேளை அதை இஷான் அப்போது கவனிக்கவில்லை.. கவனித்திருந்தால் கேட்டிருப்பான்… ஒருவேளை நடக்க போவதையும் தடுத்திருக்கலாமோ?... விதியை யாரால் வெல்ல முடியும்?... நடக்க வேண்டியது நடந்து தானே தீரும்…

“சரிடா… வா… போகலாம்… எல்லாரும் அங்க ஹாலில் வெயிட் பண்ணுறாங்க… வா…” என ஜெய்யை அழைத்துக்கொண்டு இஷான் சென்றதும்,

போனில் பேசிமுடித்துவிட்டு, ஷ் அப்பாடா… என கட்டிலில் அமர்ந்த சதியிடம்,

“என்னாச்சு… சதி….” என தைஜூ கேட்க, அவளது குரலில் நிமிர்ந்தவள், அப்போது தான் தைஜூவை கவனித்தாள்…

கல்யாணப்பெண்ணுக்கே உண்டான கலையும், பூரிப்பும் முகத்தில் மின்ன, பிங்க் நிற பட்டுப்புடவையில் அச்சு அசல் தேவதை போலவே, பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தாள் தைஜூ…

“வாவ்…. தைஜூ… செம அழகா இருக்குற… இப்போ மட்டும் இஷான் உன்னை பார்த்தான்… அவ்வளவுதான் போ…” என சொல்லி சிரித்தவள், கண்களிலிருந்து மை எடுத்து அவளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்க, தைஜூவும் வெட்கம் கொண்டு சிரித்தாள்…

“பாருடா… வெட்கத்தை…” என சதியும் கிண்டல் செய்ய,

“போதும் போதும் கிண்டல் செஞ்சது… சரி அவ்வளவு வேகமா உள்ளே வந்து யார்கிட்ட போன் பேசின?... என்னாச்சு சதி?...” என கேட்க…

“அப்புறமா சொல்லுறேன் தைஜூ கண்டிப்பா… உங்கிட்ட சொல்லாமலா?...” என்ற சதியிடம்,

“சரி…” என்றாள் தைஜூவும்…

சரி என்றதோடு நிறுத்தாமல் வற்புறுத்தியிருக்க வேண்டுமோ தைஜூ… அவள் அப்படி விடாப்பிடியாக கேட்டிருந்தால், நடக்கப்போகும் நிகழ்வும் மாறி இருக்குமோ கொஞ்சம்?.. ஹ்ம்ம்.. விதியும் அப்படி இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.