(Reading time: 19 - 37 minutes)

22. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

சுசீ..மதி கிளம்பியிருப்பாளா?

இளவரசி ஆயத்தமாகவே இருப்பார் மகாராணி..

அப்படியாயின் நீ அவளை அழைத்துக்கோண்டு சுரங்கப்பாதை அருகே வந்து விடு..காளியும் குப்த இளவரசரை சிறையிலிருந்து விடுவித்து சுரங்கப்பாதைக்கு அழைத்து வந்துவிடுவான்.மந்திரி சிவபாதரின் மேற்பார்வையிலேயே சிறை நடவடிக்கையும் கைதிகளின் நலனும் கைதிகளை விடுவிப்பது சிறை மாற்றி அவர்களைத் தங்க வைப்பது போன்ற அதிகாரங்கள்  இருப்பதால் ஹஸ்தனை விடுவிப்பது அவ்வளவு கடினமான  காரியம் இல்லை.எல்லாவற்றையும் அவரே கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

நீ மதியை சுரங்கப்பாதை வழியாக அழைத்துவரும் போது ஹஸ்தனையும் காளி அவ்வாறே அழைத்து வருவான்.அவர்கள் இருவரும் வெளியே வருவதற்குள் நான்  சிறிது நேரம் முன்னதாகவே அங்கே வந்து விடுவேன்.பெற்றவர்களையும் தம்பியையும் பிறந்து வளர்ந்த இந்த அரண்மனையையும் அருமையும் பெருமையும் மிக்க இந்த பாண்டிய நாட்டையும் விட்டு ஆசைப்பட்டவனோடு நிரந்தரமாய்ப் பிரியப்போகும் என் மகளை என் உயிரினும் மேலானவளை நான் கடைசியாய் ஒரு முறை பாக்க விரும்புகிறேன் சுசீ..இனி என் மகளை மீண்டும் பார்க்க இயலாது.அவளாலும் இனி  பெற்றவளை பார்க்க இயலாது.இதோ இன்னும் சிறிது பொழுதில் என்னுயிர் பிரிந்துவிடும்.முடிந்தது எனக்கும் அவளுக்குமான பந்தம்.சுசீ... மதி பிறந்தபோது அவளின் ஜாதகம் பார்த்து ஜோதிடர்கள் என்னென்ன சொன்னார்கள் தெரியுமா?அவளின் ஜாதகம் போல் யாருக்குமே அமையாதாம்...

பெற்றவர்களுக்கும் அவள் பிறந்த இன்னாட்டிற்கும் அவளாள் பெரும் பெருமையும் வரலாற்றுப் புகழும் ஏற்படுமாம்...அவளின் வாழ்க்கை மிக மகோந்நதமாக இருக்குமாம்..அவளின் ஜாதகம் ஜகத் ஜனனியான மீனாட்சியின் ஜாதகத்தையொத்ததாம்..இதுபோல் ஒரு ஜாதகம் அமைவது மிக அரிதாம்..இவளை மகளாகப் பெற பெரும் பேறு செய்திருக்கிறோமாம் நானும் மன்னரும்...இப்படியெல்லாம் அவளின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்களெல்லாம் மன்னரிடம் சொல்ல அனறு மன்னர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் தெரியுமா?ஆனந்தக் கண்ணீர் மல்க மிகுந்த சந்தோஷத்தோடு மதியைப் பிரசவித்திருந்த அவ்வேளையில் என்னிடம் வந்து மன்னர் எவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டே இருந்தார் தெரியுமா?மதி வளர வளர அவளின் புத்தி கூர்மையும் அழகும் அடக்கமும் பண்புகளும் பாசமும் ஜோதிடர்களின் கூற்று உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையையே கூட்டியது.ஆனால் இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் ஜோதிடர்கள் கூறிய அனைத்தும் பொய்யாய் அல்லவா இருக்கின்றன.உணைமையைச் சொல்லாமல் ஜோதிடர்கள் மறைத்திருப்பார்களேயன்றி ஜோதிடம் பொய்க்காது.ஆம் ஜோதிடர்கள் மன்னரிடம் மதியின் ஜாதகத்தின் உண்மைகளைச் சொன்னால் கலங்கிப்போவாரோ என்று நினைத்து பொய்யான தகவல்களையே சொல்லியிருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது.உண்மை எதுவென்று தெரியாத மன்னர் மகளைப்பற்றி ஜோதிடர்கள் கூறியவற்றை மிகுந்த நம்பிக்கையோடு சொல்லிச் சொல்லி மகிழ்வார்.அவர் மகள் மேல் கொண்டிருந்த பாசம் பத்து மாதம் சுமந்தவளாகிய எனதைக் காட்டிலும் மிக அதிகம்.தன் உயிரையே தன் மகள் மீது வைத்திருந்தார் மன்னர்.அப்படியான பாசம் கொண்ட தந்தையைக் கூட காதலித்தவனுக்காக மறந்துவிட்டு பிரியத் துணிகிறாளே மதி..?காதல் இனிமையானதா?கொடுமையானதா?ரத்த பந்தத்தைக் கூட அறுத்தெரியச் செய்யும் காதல்..பெற்றவர்களைப் பரிதவிக்கச் செய்யும் காதல்..பிறந்த குலத்தையும் குடும்பத்தையும் தலை குனியவைக்கும் காதல்..பெற்று பாசம்காட்டி பாராட்டி சீராட்டி உயிருக்குயிராய் வளர்த்த பெற்றவர்களை திடீரென இடையில் வந்த ஒருவனுக்காக துச்சமென எண்ணி உதறித்தள்ளும் காதல் உண்மையில் இனிமையானதா?கொடுமையானதா சொல் சுசீ..சொல்..என்றவர் கதறி அழ அவரை சமாதானம்  செய்ய முடியாமல் தவித்தாள் சுசீ..

திடீரென வயிற்றைப் பிடித்துக்கொண்டார் மகாராணி..வலியின் தீவிரம் அவர் முகத்தில் தெரிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

சுசீக்கும் வலிதான்..ஆனாலும் முகத்தில் காண்பிக்காமல் அமைதியாய் இருந்தாள்..

மகாராணி..இப்படிக் கேட்பதற்கு மன்னிக்கவேண்டும் மகாராணி..காதல் கொடுமையானது..காதலிப்பது குற்றம் என்று சொல்கிறீர்களா மகாராணி..

இல்லை..இல்லை ..சுசீ காதல் உலகம் தோன்றிய நாள் முதல் இருக்கிறது.காதல் தெய்வீகமானது என்றும் கூடச் சொல்வார்கள்.காதலுக்கு ஏற்றத் தாழ்வு கிடையாது என்பர்.ஆனால் காதலிக்கும் எல்லோருக்கும் அக்காதல் கைகூடிவிடுவதில்லை.ஒரு ஆணோ பெண்ணோ காதலிப்பார்களேயானால் அக்காதல் அவ்வாணின் பெற்றொர்களாலும் அப்பெண்ணின் பெற்றோர்களாலும் அங்கீகரிக்கப்படவேண்டும்.அவ்வங்கீகாரம்,அல்லது ஒப்புதல் கிடைக்கும் வரை போராடிப்பார்க்க வேண்டும்.

அதைவிட்டு தாந்தோன்றித்தனமாய் பெற்றொர்களின் சம்மதம் பெறாமல் வீட்டைவிட்டு வெளியேறுவதும் தாங்களாகவே திருமணம் செய்வதுமான செயல் அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு எத்தகு இழிவைத் தேடித்தரும்?ஒரு குடுபத்தின் பெருமை என்பது அக்குடும்பத்துப் பெண்களாலேயே சிறப்படைகிறது.பிறந்த வீட்டின் பெருமையையும் ஒரு பெண்ணாலேயே அமைகிறது.புகுந்த வீட்டின் பெருமையும் அவ்வீட்டிற்கு விளக்கேற்ற வரும் பெண்ணாலேயே மேம்படுகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.