(Reading time: 9 - 18 minutes)

08. பைராகி - சகி

bhairagi

ன்னும் உச்சப்பட்ச அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை.

யாத்ராவின் கண்ணீர் தோய்ந்த முகம் அவன் எதிரே நின்றிருப்பதும் மனதில் பதியவில்லை!!

முதல் முறையாக மருத்துவர் செலுத்திய ஊசி அவனுக்கு வலிக்கவில்லை.காரணம்,அவன் எண்ணங்கள் எதுவும் அங்கில்லை.

மருத்துவர் சென்றதும்,சிறிது நேரம் ஜானகியின் மடியில் எதையோ சிந்தித்தப்படி படுத்திருந்தான் ஆதித்யா.அவரது கரம் அவனது கேசத்தை கோதி கொண்டிருந்தது.

யாத்ரா கலங்கியப்படி அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள்.

காலில் கட்டு கட்டி இருந்தனர்.

ஒரு மாதத்திற்கு நடப்பது சிரமமாக இருக்கும் என்ற அறிவுரை வேறு!!!

நெற்றியில் ஒரு கட்டு,இடது கரத்தில் ஒரு கட்டு!அத்தனையும் வலிக்காமல் இருக்க,மருந்து கொடுத்துவிட்டு சென்றிருந்தார் மருத்துவர்.அம்மருந்துகளின் வீரியம் மட்டும் குறைந்துப் போனால்,உறுதியாய் நம்பலாம் அந்தக் கோட்டை இரண்டாய் பிளப்பது உறுதி என்று!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

யாத்ராவையும்,ஆதித்யாவையும் ஒருமுறை பார்த்த ஜானகி,

என்ன நினைத்தாரோ!!திடீரென்று,

"நான் உனக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்பா!"என்று எழுந்தார்.

"நீங்க இருங்கம்மா!நான் போறேன்!"

"பரவாயில்லைம்மா...நீ இவன் கூட இரு!"-என்று எழுந்து வெளியே சென்றார்.

மீண்டும் கனத்தது மௌனம்!!!

அவன் ஏதோ கணிதமேதை ராமானுஜரை போல சிந்தித்துக் கொண்டிருந்தான்.

யாத்ரா அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஹனி!"-நீண்ட நேரம் கழித்து மௌனத்தை கலைத்தான் ஆதித்யா.

"என்னங்க?எதாவது வேணுமா?"

"இப்படி வந்து உட்கார்!"-அவனது அழைப்பின் பொருள் விளங்காமல் அவனருகே சென்று அமர்ந்தாள் யாத்ரா. அவள் அமர்ந்ததும் மெதுவாக அவள் மடி மீது சிரம் பதித்தான் அவன்.

மீண்டும் ஏதோ சிந்திக்கலானான்.

என்ன செய்வது இவனது குழந்தைத்தனத்தை?? அனைத்தையும் விளையாட்டாய் எண்ணும் உக்தியை இறைவனிடமிருந்து கற்று தேர்ந்து வந்துவிட்டானா!!என்று எண்ணியப்படி அவனது கேசத்தை கோதினாள்.

ஔஷதத்தின்{மருந்து} செயல்பாடு,

அவளது நெருக்கம் தந்த அரவணைப்பு இரண்டும் மெல்ல அவனை நித்திரையில் தள்ளின...

தாயின் மடிமீது உறங்கும் பச்சிளம் குழந்தையாய் உறங்கலானான்.

நிம்மதியான உறக்கம்!!மனதின் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து வந்த உறக்கம்! காதலென்னும் தாய் மடியில் கிடைத்த அற்புதமான உறக்கம்!!

அவன் உறங்கியப்பின்,அவனது காயங்களை பார்த்தாள் யாத்ரா.

மனம் இனம் புரியாத பயம் வியாபித்தது.கவலை தோய்ந்த முகத்தோடு குனிந்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள் யாத்ரா.

ரவு நேரத்தில் அமைதியான ஆழ்கடலை காணுங்கள்.சந்திரனின் குளிர்ச்சியால் தனது ஆக்ரோஷத்தை குறைத்து அமைதியான நதியாய் காட்சியளிக்கும்!!அதே கடலை ஆதவனின் முன்னிலயில் காணுங்கள்!!ஆக்ரோஷத்தின் உச்சத்தில் வீற்றிருக்கும்!!இரு மாறுப்பட்ட பொழுதிலும் நாம் கண்டது ஒரே ஆழியை தான்!!பின்,இரு வேறு குணங்களின் காரணம்??காலத்தின் மாற்றமா??அல்ல....எந்த சூழ்நிலையிலும் தனது குளிர்ச்சியை தியாகிக்காத நிலவிடத்தில் ஆழியின் அன்பானது,நிலவை போலவே குளிர்ச்சியாக இருக்கிறது!!உஷ்ணத்தின் தாக்கம் பெருக்கம் அடைந்தால் கடலில் அதையே பிரதிபலிக்கிறது!!அன்பில்,குளிர்ச்சியான சந்திரனை போலவே இருங்கள்!!பொறுமையாக,நிதர்சனமாக,சுயநலமற்ற திரும்பி வேண்டாத அன்பையே பிறருக்கு தானமாக வழங்குகள்!!ஆழ்கடலை போன்று இயற்கையில் ஆரவாரத்திற்கு பெயர் போனவரும் இறுதியில் அதற்கு கட்டுப்பட்டே தீர வேண்டும்!!!ஆயுதத்திற்கு கட்டுப்படாதவரும் தனக்கு கட்டுப்பட வேண்டும் என்பது அன்பு பெற்று வந்த வரமாகும்!!அந்த தூய்மையான அன்பை உபயோகப்படுத்துபவரையும் அந்த வரம் எந்த தவமும் புரியாமலே கரம் சேரும் என்பதில் ஐயமில்லை.

காலையில் உறங்க ஆரம்பித்தவன்,மாலை ஏழு மணிக்கு எழுந்தான்.

உடலெல்லாம் அப்படி ஒரு சோர்வு!!!கண்களை திறந்ததும்,அப்படி ஒரு வலி!!!வலி பொறுக்க இயலாமல் இரண்டுமுறை சிணுங்கினான்.

"என்னாச்சுங்க?"-அவனது அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவள் பதறியப்படி வினவினாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க நீ?என் ரூமை கலைத்துப் போடுற!"-அந்நிலையிலும் அவனது சேட்டை அடங்கவில்லை என்பதற்கு அந்த வாக்கியமே போதுமானதாக அமைந்தது.

அவள் பதில் பேசாமல் சிலையாக அவனை பார்த்தாள்.

எழ முயற்சித்தவன் தடுமாற,ஓடிச்சென்று அவனை தாங்கினாள் யாத்ரா.

"பார்த்து!ஜாக்கிரதை!"-அவனது முதுகுக்கு பின்னால் தலையணையை வைத்து அவனை சாய்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.