(Reading time: 8 - 16 minutes)

05. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

மிழா தமிழா நாளை நம் நாடே” ஹரிஹரனின் குரலில் யாழினியின் செல்ஃபோனில் செட் செய்து வைத்திருந்த அலாரம் அடித்ததும் புன்னகையுடன் கண் விழித்தாள் யாழினி. என்னத்தான் மருத்துவன் என்பதினால் தமிழ் அவ்வப்போது பிசியாக இருந்தாலும், அவள் கண் விழிக்கும் பெரும்பாலான நாட்களில் அவன் அவளெதிரில் தான் நின்று கொண்டிருப்பான். இன்றும் அதே எதிர்ப்பார்ப்புடன் அவள் கண் விழிக்க அவன் அருகில் இல்லை. மனதில் லேசாய் சோர்வு உண்டாகிட கண்களை மூடி கொண்டபடி நேற்றைய தினத்தை அசைப்போட்டாள் யாழினி. தனது பிறந்தநாளுக்காக தமிழ் செய்த ஏற்பாடுகள், காலையில் அவனுடன் கோவிலுக்கு சென்றபோது தமிழின் பெற்றோரை தூரத்தில் இருந்து பார்த்தது, மாலையில் வீட்டில் நடந்த பார்ட்டி இப்படி ஒவ்வொன்றாய் நினைவு கூர்ந்தவள் புகழை பற்றி நினைவு வந்ததும்கண் விழித்தாள். அவளுக்கு புரிந்து போனது தமிழ், அவளுக்காய் பயந்துதான் வேறெங்கோ அமர்ந்திருக்க வேண்டும். பொதுவாக அவன் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் அலாரத்திற்கு முன்பாகவே அவன் ஃபோன் செய்திருப்பான்.

“டேய் எரும ,எங்கடா இருக்க ?”

“எருமையா? அடிப்பாவி நேற்று ராத்திரி கருவாயான்னு கொஞ்சிட்டு இருப்போ எருமையா? எல்லாம் உன் நேரம் டா தமிழ்” என்று முணகினான் அவன். அதற்குள் குளியறைக்குள் புகுந்து பல் துலக்கிவிட்டு வந்த யாழினி, தமிழின் கைகளில் இருந்த காஃபியை வாங்கிக் கொண்டாள். அவன் தடுப்பதற்குள் ஒரு வாய் குடித்தவள்,

“ இது நீ போட்ட காஃஃபி இல்ல தமிழ்” என்றாள்.

“ லூசு, இந்த காஃபி நாந்தான் போட்டேன்னு எப்போ நான் சொன்னேன்? நான் சொல்றதுகுள்ள நீதானே குடிச்ச? மாமன் மிச்சம் வெச்ச காஃபியை குடிக்க இம்புட்டு ஆசையா” என்று கூறி அவன் கண்ணடிக்க,அவள் கொலைவெறியுடன் முறைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ வந்த முதல் நாளே அவனை சமையலறைக்குள் விட்டியா நீ? மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க தமிழ் நீ? அப்பா ஏற்கனவே நேற்று நடந்ததுக்கே செம்ம கோபத்துல இருப்பார்..இதுல நீ அவனை காஃபி போட வெச்சு இருக்க?”

“ அட இந்த மாபெரும் தமிழ்நாட்டில் ஒரு இளைஞன் காஃபி போடுறது தப்பா?” என்றவன் அவள் முறைக்கவும், “ இதான்..இதுக்குத்தான் உங்கிட்ட முதலில் பேச வந்தேன். உன் எம்டன் அப்பாவை கூட நான் சமாளிப்பேன்.. ஆனா உன்னைய தான் சமாளிக்க முடியாது. அதான் காலில் விழுந்து சின்ன மீனை கரக்ட் பண்ணிட்டு அப்பறமா பெரிய மீனுக்கு வலை போடலாம்னு பார்க்கறேன்” என்று கண்ணடித்தான் தமிழ். அவன் குறும்பு பேச்சில் இறுக்கம் தளர்ந்திட லேசாய் புன்னகைத்தாள் யாழினி.

“ எதுக்கு தமிழ் இந்த வேண்டாத வேலை?”

“ வேணும் யாழினி..எனக்கு எல்லாமே பழைய மாதிரி வேணும்.. நீ அவனை மிஸ் பண்ணவே இல்லன்னு ஒரு தடவை என்னை பார்த்து சொல்லு பார்ப்போம்”

“ப்ச்ச்ச், மிஸ் பண்ணுறேன்தான். ஆனா அதுக்காக? அவன் பண்ணதை மன்னிச்சுட்டேன்னு அர்த்தம் இல்லை”

“ இது பாரு யாழினி இதுவரைக்கும் அவன் என்ன பண்ணான்னு நான் உன்னை கேட்டது இல்லை. நீயாக சொல்லுவன்னு நினைச்சேன்.ஆனா நீ சொல்லல. அதிலேயே ஒரு விஷயம் நல்லா புரிஞ்சது.தப்பு அவன்மேலதான்..உன்மேல இல்ல..ஏன்னா தப்பு பண்ணினா அதை உடனே ஒத்துக்குற ரகம் நீ..அதே நேரத்துல உன் நண்பம் தப்பே பண்ணாலும் அதை நீ வெளிலசொல்ல மாட்ட.. உன் நண்பன் உனக்கு அவ்வளவு முக்கியம்”

“..”

“ஒரு விஷயம் கவனிச்சியா?”

“என்ன?”
“ நீ அவனை முழுசாய் வெறுக்கல..வெறுத்திருந்தால் யாரு அவனை என்ன சொன்னால் என்னன்னு நினைச்சு நீ நடந்ததை  சொல்லி இருப்ப..சோ உனக்கே தெரியாமல் நீ புகழுக்கு சப்போர்ட்பண்ணிட்டு இருக்க.”.

மௌனம்!அவள் பதில் மௌனம்தான்.நிஜமாய் அவளுக்குமே இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேச்சை மாற்றும் விதத்தில்,”இ…. இப்போ அவன் எங்க?” என்று கேட்டாள்.

“ ஜாகிங்”

“ இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”

“ஹா ஹா”

“ எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன? நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்” என்று தமிழிடம் சொன்னவளுக்குத் தெரியாது அன்று மாலை இதே தமிழை கட்டிகொண்டு அவனை காணவில்லையென அழுவாள் என்று.!

அவள் அங்கிருந்து நகர்ந்ததுமே மோகனைத் தேடிச் சென்றான் தமிழ்.

“மாமா”

“வாங்க மாப்பிள்ளை”

“என்ன மாமா திடீர்ன்னு மரியாதை எல்லாம்?”

“..”

“ஓ..அவ்வளவு கோபமா மாமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.