(Reading time: 22 - 44 minutes)

25. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி முடிக்கும் வரையில் குறுக்கிடாமல் இருந்த பிரயுவின் முகம் இப்போது இன்னும் வேதனையை காட்டியது.. அவளால் சற்று நேரம் எதுவும் பேசவே முடியவே இல்லை.

அவளின் முகத்தை பார்த்த ஆதி, அவள் கையை அசைத்து,

“ப்ரயு.. .என்னடா..? நீ என்ன நினைக்கிற சொல்லு?”

“நம் திருமணம் அரேஞ்சுடு marraige தானே.. இதில் சில நிகழ்வுகள் நாம் எதிர்பாராதது நடக்கும்.. அதை தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் காதலித்தேன் என்று சொல்லும் போது எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.”

“ஏன்.. என் காதலை நம்பவில்லையா?”

“இதுவரைக்கும் எனக்கு உங்கள் மேல் வருத்தம் இருந்தது தான்.. நான் அனுபவித்த இந்த மனவலிகளுக்கு நான் வாங்கிய பேச்சுக்கள் தான் காரணம்.. மற்றபடி இருவருக்கும் பிரிந்து இருக்கும் வேதனை ஒன்று போல் தான் என்று எண்ணி இருந்தேன்.. ஆனால் இப்போதோ என்னுடைய மொத்த வேதனைக்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று தோன்றுகிறது... “

“ப்ரயு என்னடா சொல்கிறாய்.. ? “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

“என்னுடைய இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்க.. திருமணம் இரண்டு வருடம் கழித்து செய்து கொள்கிறேன்.. என்று எண்ணம் வைத்துருந்ததை என் அப்பா சொன்னார் இல்லியா ?

“ஹ்ம்ம். .ஆமாம்..”

“அப்போ அதை பற்றி தெரிந்து இருந்தும் .. நீங்கள் என் அப்பா மூலமாக எனக்கு கிட்டத்தட்ட நெருக்கடி கொடுத்து தான் திருமணம் செய்து கொண்டு இருக்கீர்ரீர்கள் ... ஒரு வகையில் கட்டாய கல்யாணம் தானே.. “

“அப்படி இல்லை ப்ரயு.. “

“நான் என் அப்பா வீட்டில் இரண்டு வருடம் இருப்பதும், உங்கள் மனைவியாய் உங்கள் வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லியா?”

“புரியவில்லை ப்ரயு”

“என் அம்மா வீட்டில் நான் இருந்தால் அது நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான் .. இங்கே நான் இருப்பது என்றால் அது வேறு .. உங்கள் அம்மாவை பார்த்துகொள்வது, வித்யாவை கவனித்து கொள்வது என்பது எல்லாம் இந்த கல்யாணம் மூலம் எனக்கு கொடுக்கப்பட்ட கமிட்மென்ட்.. தானே.. அதுவும் நீங்கள் உடன் இல்லாத போது.  அதை எனக்காக முடிவு செய்ய அப்போது நீங்கள் யார்?”

அவளின் கேள்வியில் ஆதி திடுக்கிட்டான்.. அவள் சொல்வதும் சரிதானே என்று தோன்றியது ஆதிக்கு... அவனுடைய பொறுப்பு தான் அது.. அதை பகிர்ந்து கொள்வது தான் மனைவி என்பவளின் கடமை..அதுவும் கல்யாணத்திற்கு பிறகுதானே.. தவிர.. மனைவிக்கே முழு பொறுப்பு ஆகாது அல்லவா?

இப்போது என்னுடைய பொறுப்பை ப்ரயு மேல் ஏற்றுவதற்குதான் கல்யாணம் என்ற மாதிரி ஆகிவிட்டது.

அவனின் மௌனத்தை கவனித்தாலும், ப்ரயு மேலும் கேள்விகள் கேட்டாள்.

“இதையே நான் வெளிநாடு போக வேண்டும் .. என் அப்பா அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.. நான் திரும்பி வந்த பிறகு நம் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்டால் அப்போ என் மீது உங்கள் அபிப்ராயம் என்னவாக இருக்கும் ? “

இந்த கேள்வி அவனை கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. உண்மைதானே.. இதையே ப்ரயு என்று இல்லை எந்த பெண் கேட்டாலும் தன்னுடைய எண்ணம் என்னவாக இருந்து இருக்கும்... ? நான் என்ன இளிச்சவாயனா? என்று தானே தோன்றி இருக்கும்.

பிரயுவும் சற்று நேரம் மெளனமாக இருக்கவும், ஆதி

“எனக்கு தெரியவில்லை ப்ரயு.. என்னுடைய செயல்கள் இப்படி ஒரு கோணத்தை கொடுக்க கூடும் என்று தோன்றியதில்லை.. நீ சொல்லும் போது தான் எனக்கு புரிகிறது. நீ சொல்வது போல் அன்றைக்கு நான் உனக்கு யாரோ தான்....”

“அது மட்டும் இல்லை.. நீங்கள் என்னிடம் காதலை சொல்லி.. நான் ஒத்துக் கொண்டிருந்தால் கூட.. நான் திருமணத்திற்கு இரண்டு வருடம் அவகாசம் கேட்டு இருந்தால் , காதலியிடம் நீங்கள் என் அம்மாவிற்காக உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாய படுத்திருக்க முடியாது.. ஆனால் யாரென்றே எனக்கு தெரியாத உங்களுக்காக நான் ஒத்துக் கொண்டிருப்பேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?”

“இல்லை .. .ப்ளீஸ் ப்ரயு.. நம் கல்யாணம் அவசரமாக நடக்க அது ஒரு காரணமே தவிர, உன்னை பிடித்து இருந்ததால் தான் கல்யாணம் செய்தேன்..”

“அப்படி அதை தவிர நம் திருமணத்திற்கு என்ன அவசரம் ஏற்பட்டது.?”                      

“எனக்கு சொல்ல தெரியவில்லை ப்ரயு.. என்னவோ நான் ஊருக்கு செல்வதற்குள் நீ என் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டது. அதற்கு எனக்கு சாதகமாக எல்லாவற்றையும் மாற்றி கொண்டேன்... ஆனால் அது இப்படி மாறும் என்று எண்ணவில்லை. நீ இப்போ சொன்ன பின் தான் தெரிகிறது... “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.