(Reading time: 8 - 16 minutes)

09. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

விரைந்து திரும்பி வந்தவன், அவளைப் பார்க்க அவள் அதே இடத்தில் கொஞ்சம் கூட அகலாமல் அப்படியே கிடந்தாள்…

ஒருநிமிடம் கூட தாமதிக்காது அவளின் அருகில் மண்டியிட்டு, கைகளை உயர்த்தி அவள் தோள் தொட்டு திருப்பியதும் அவனிடம் ஓர் அதிர்வு உண்டானது…

அந்த மிருகம் அவளை தள்ளிவிட்டபோது, கீழே கிடந்த கூரான கல் ஒன்று அவளின் கரத்தினை பதம் பார்த்திருந்தது ஆழமாய்…

அவளுக்கு ஏற்பட்டிருந்த காயத்தில் அவன் தன்னை தொலைத்திருந்தது சில நொடிகளே…

சட்டென அவளை தன் மடி மீது சாய்த்துக்கொண்டு, அவள் கரத்தில் வழியும் குருதியை தன் கைக்குட்டை கொண்டு துடைத்து அழுத்தி வைத்து பிடித்துக்கொண்டவன்,

அவளின் கன்னம் தொட்டு எழுப்ப, அவளிடம் பேச்சும் இல்லை… மூச்சும் இல்லை…

ஏனோ தொண்டைக்குள் வார்த்தை சிக்கிக்கொள்ள, கஷ்டப்பட்டு அதனை வெளிக்கொண்டு வந்தான் அவன்…

“கண்ணைத்திற… ப்ளீஸ்… கண்ணைத்திற…” என அவன் எழுப்ப, அவளிடம் எந்த அசைவும் இல்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“ச….தி…..ம்…………….” என அவன் அழைத்து முடிக்கக்கூட இல்லை… அவள் விழிகள் அசைந்தது…

தன்னவனால் தன் பெயர் உச்சரிக்கப்படும்போது, கண்மூடி படுத்திருந்து, மயக்கத்திற்கு இடம் கொடுத்திடுவாளா என்ன அவள்?...

அவள் விழிகள் முழுமையாக திறந்த்தும் அவன் நிம்மதி பெருமூச்சுவிட, சட்டென அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள் அவள்…

இந்த திடீர் அதிர்ச்சியை எதிர்பார்க்காதவன், அவளின் அருகில் தான் இருப்பதை உணர்ந்தான்… மெல்ல விலக அவன் முயற்சித்த போது, விடாப்பிடியாக அவனைப் பிடித்துக்கொண்டவள்,

“என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாம இருந்தீங்க தான… இப்போ ஏன் என்னை இப்படி மடிமேல போட்டு தவிக்குறீங்க எனக்காக?..” என அவளின் உதடுகள் கேட்கும் முன்னமே, அவள் விழிகள் கேட்டுவிட, அவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டான்…

வெறித்த பார்வை வேறெங்கோ இருக்க, அவள் அவன் சட்டையைப் பிடித்திருந்த பிடியை மேலும் இறுக்க, அது “என்னைப் பாருங்க…” என சொல்லாமல் சொல்லியது அவனிடத்தில்…

அவனின் முகத்தினை மிக மிக அருகில் பார்த்தவளுக்கு, அவன் அப்போதும் மனதளவில் தூரமாக இருப்பது போலவே தோன்றியது…

இறுக விழி மூடியவள் ஒரு சில மணித்துளிகள் கழித்து, அவனது பெயரை சத்தம் வராமல் அவள் உச்சரித்து முடிக்க, சட்டென அவன் திரும்பி அவளைப் பார்த்தான்…

அவளின் இதழ்களில் நிறைவான புன்னகை ஒன்று உருவாக, அவன் அதனையே ரசித்தபடி இருந்தான்…

அவளுக்குள்ளோ பல பூக்கள் பூத்து மலர்ந்து வாசம் பரப்பி அவளை கிறங்கடித்தது…

எப்போதும் அவனை பார்த்திட்டால், அவன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி, அவள் இங்கே அவனது பெயரை உச்சரித்து முடித்ததும், அவன் சட்டென அவள் புறம் திரும்பிடுவான்…

ஆனால் அதுவும் எதுவோ வேலையாக யாரிடத்திலோ பேசுவதற்காகவே திரும்பிடுவதாக அமைந்திருக்கும்… அந்த மர்ம்மும் அவள் அறிந்திடவில்லை இதுவரை…

எதேச்சையாக திரும்பியிருப்பான், இதற்கு போய் காதல் என்று அர்த்தம் எடுத்து கொள்கிறாயே… என அவள் மனம் பலமுறை அவளிடம் கேட்டபோதெல்லாம், “எதேச்சையாக என்றால் ஒரு நாள், நடந்திருக்கலாம்… நிதமும், நான் அழைக்கும் பொழுதெல்லாம் அவர் திரும்பினால் நிச்சயம் அது காதலினால் தானே… நான் அவருக்குள்ளே இல்லாமலா அவருக்கு நான் அழைத்தது கேட்டிருக்கும்?....” என அவளும் பதிலுக்கு மனதோடு வாதிக்க, மனமோ “அதுவும் சரிதான்…” என்று அவளுள் மறைந்து கொள்ளும்…

இன்றோ அவன் தூரத்தில் இல்லை… அவளுக்கு மிக அருகினில் இருக்கின்றான்… இருந்தும் அவள் சத்தமில்லாது அழைத்ததும் அவன் திரும்பினால் அதற்கான பொருள் என்ன?.

அவனின் மனதில் அவள் இல்லாமலா அவன் திரும்பி பார்த்தான்?..

எனில் அவனும் அவளை நேசிக்கின்றான் அப்படித்தானே…

அதிலும் இன்று யாரிடத்திலும் பேசுவதற்காக அவன் திரும்பிடவில்லை… அவள் அழைத்ததுமே அவன் பார்வை அவளிடம் வந்து சேர்ந்திட்டதே இன்று…

சந்தோஷத்தில் மனம் ஊஞ்சல் கட்டி ஆட, அவள் முகமோ நாணத்தை பிரதிபலித்தது…

அவளின் நாணம் அவனை என்னென்னவோ செய்ய, அவன் அப்படியே தடுமாறி போனான்…

அவளின் அருகாமை வேறு அவனை வதைக்க, அவன் செய்வதறியாது அவள் விழிகளுக்குள்ளே மாட்டிக்கொண்டான்…

விழியோடு விழி பேசிக்கொள்ள, சில நிமிடங்கள் இருவரும் அப்படியே மெய்மறந்து இருந்தனர்…

அந்த சில நிமிடங்களில் என்ன ஆனதோ, அவள் அதற்கு மேலும் தாமதிக்காது அவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள முனைய, அவன் அப்படியே தொய்ந்து போய் அதுவரை கைக்குட்டையால் அழுத்தி பிடித்திருந்த அவள் கரத்தினை விட்டான்…

அவளின் சிரம் அவனின் நெஞ்சில் சாய, அவளின் முகமோ அவனது சட்டையைப் பிடித்திருந்த தனது கரத்தினில் இருக்க, அவன் தவித்து போய் அப்படியே கண் மூடிக்கொண்டான்…

எண்ணி சரியாக ஐந்தே ஐந்து விநாடிகளில், பட்டென அவன் விழி திறக்க அவன் விழிகளோ சிவந்திருந்தது ரத்தமென…

அப்போது “சதி……………………………” என்ற சத்தம் அவள் இருந்த மோன நிலையை அறுத்துவிட, சட்டென அவன் சட்டையிலிருந்து கைகளை எடுத்தவள் விருட்டென திரும்ப, அங்கே கோபமே உருவாக நின்றிருந்தார் தட்சேஷ்வர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.