(Reading time: 13 - 25 minutes)

05. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

தாமரைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.செவ்வந்தியை முதலில் பார்த்த போதே அவருக்கு பிடித்துவிட்டது.திருமண வயதில் இருக்கும் மகனுக்கு வரன் தேடும் அம்மாக்கள்,பார்க்கும் வயதுப் பெண்களையெல்லாம்,’மகனுக்கு பொருத்தமாக இருப்பாளா’என்று யோசிப்பதுண்டு.

அதுபோலத்தான் தாமரையும் அவளை பார்த்த உடனே யோசித்தார்.அவளது நடவடிக்கையை பார்த்துக்கொண்டே இருந்தவர்,வேண்டுமென்றே பணத்தை கொடுக்காமல்,அவளை சீண்டி பார்த்தார்.

அவள் பணத்திற்கு பதிலாக,விலை உயர்ந்த தங்களது பொருட்களை வாங்காமல் சுயமரியாதையாக பேசியதில் அவருக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது.அதே போல அவள் அந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாலும்,’பொறுமைசாலி’என்ற பட்டத்தை தாமரை கொடுத்திருப்பார்.

இப்போது மகனது பார்வையிலும் சம்மதம் தெரிந்துவிட,அவனை ரெஸ்ட் எடுக்கக் கூட விடாமல் தொந்தரவு செய்து,அத்தனை விவரங்களையும் வாங்கிவிட்டார்.

“அவன் தூங்கட்டும்”என்று குமார் மனைவியை அதட்டிய போதும் கூட காதில் வாங்காமல்,பேசிக் கொண்டிருந்தார்.

“நான் உன்னை யஷுன்னு கூப்பிடுவேன்னு அவளுக்கு சொன்னியா”என்று மகனிடம் கேட்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“நானா!!”என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியவன்,

“அந்த அளவுக்கு உரிமையா பேசற அளவுக்கு,நாங்க பழகல”என்றான்.

“அப்போ அந்தப் பொண்ணை நீ காதலிக்கலையா”வருத்தத்துடன் தாமரை கேட்க,சிரித்தேவிட்டான்.

“இந்த மாதிரி அம்மா எல்லாருக்கும் கிடைச்சா எப்படி இருக்கும்”என்று கிண்டல் செய்தவன்,

“படிக்கற பொண்ணும்மா..வேலைக்கு போகட்டும்.அப்புறம் சொல்லிக்கலாம்”என்றான் நல்லவனுக்கு நல்லவனாக..

“என்னது படிச்சுட்டு இருக்காளா..”முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டவர்,

“அப்போ உனக்கும்,அவளுக்கும் குறைஞ்சது,ஏழு இல்ல எட்டு வயசு வித்தியாசமாவது இருக்குமே.இது சரிப்பட்டு வராது..பாவம் அந்த பொண்ணு”என்று சொல்ல,அவனோ முழித்தான்.

அவனுக்கு உதவிக்கு வந்த குமார்,”உனக்கும் எனக்கும் கூட ஏழு வயசு வித்தியாசம் தான்.ஆனால் பாரு..என்னை விட நீ தான் வயசு அதிகம் மாதிரி தெரியற”என்று தன்னுடைய இளமையை அவர் பறைசாற்றிக்கொள்ள,தாமரை கணவரை முறைத்த முறைப்பில்,சேரில் கைகட்டி வாய்பொத்தி அமர்ந்துகொண்டார்.

“நீ என்ன சொல்லுற”முறைத்துக்கொண்டே மகனை கேட்க..

“நான் எதுவுமே சொல்லைலையேம்மா.நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க”என்று பதில் சொல்லாமல் பின்வாங்க நினைத்தான்.

அவனுக்குமே வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையாக இருக்கும் தோன்றவில்லை.அவளும் பார்ப்பதற்கு சிறுபெண் போல எல்லாம் இல்லை.அவனது கண்களுக்கு பொருத்தமாகத்தான் இருந்தாள்.

அதைவிட காதலிக்கிறேன் என்று முதலில் அவள் தானே சொன்னாள்..அது மட்டுமில்லாமல் தானும் பின்வாங்கக் கூடிய நிலையில் இல்லை என்பதை சொல்லாமல் அவன் அமைதியாகிவிட,தாமரைக்கு மகனின் எண்ணம் புரிந்து போனது.

“முகத்தை தூக்கி வைச்சுக்காத..நான் உடனே கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு சரிபட்டு வரமாட்டான்னு யோசிச்சேன்..இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணலைன்னா..அடுத்து ஒரு வருஷம் காத்திருக்கணும்.ரெட்டைப்படை வயசுல கல்யாணம் செய்யக் கூடாதுன்னு சொல்லுவாங்க..அதனால,அவங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்க வேண்டியது உன் பொறுப்பு”என்று அவனிடமே பிரச்சனையை விட,

“படிப்பு முடியறதுக்கே இன்னும் நாலு மாசம் ஆகும்மா..அதுக்குள்ள அவங்க வீட்டுல எப்படி பேச முடியும்”என்றான்.

“அப்போ நான் வேற பொண்ணு பார்க்கறேன்”என்று அடம்பிடித்தார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,”என்னம்மா..நீங்க இப்படி பண்றீங்களேம்மா”என்ற ரிங்டன் ஒலியுடன் அவந்திகா வர,அப்போது தான் தாய்க்கும் மகனுக்கும் பொழுது விடிந்து மணி எட்டு ஆனதே உணர்வுக்கு வந்தது.

அதைவிட சூழ்நிலைக்கு தகுந்தார் போல,அவள் போன் இசைக்க,குமார் சத்தம் போட்டு சிரித்ததில் வழக்கம் போல,போனை கீழே விட்டுவிட்டாள்.

நேற்று அந்த தடியன்களிடம் மாட்டிக்கொண்ட போது உடைந்த போனா..என்று யஸ்வந்த் கண்ணாடியை நன்றாக கண்களுக்கு தூக்கிப் பிடித்து உற்றுப் பார்க்க,அது வேறு போன்..

“அதுக்குள்ள புது போன் வாங்கிட்டியா”ஆச்சர்யத்துடன் அவன் கேட்க..அவனாகவே பேசிவிட்டதினால்,அவந்திகாவின் முகத்தில் மின்மினி பூச்சியின் வெளிச்சத்துக்கு குறைவில்லாமல் பொலிவு ஏற்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.