(Reading time: 15 - 29 minutes)

38. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

மைதியான சூழல் எப்போதும் நிம்மதியை தந்துவிடுவது இல்லை. தேவையற்ற சிந்தனையை மனம் சிந்திக்கும்போது நம்மையும் மீறி சோர்வடைந்துவிடுகிறோம். அந்த சோர்வு நமது உடல்நிலையையும் பாதிக்கிறது சில நேரம். தேவையில்லாத கவலையில் உழன்ற சங்கமித்ரா, அப்படியே மயங்கி சரிந்தாள். சரியாய் அதே நேரம்

“ஹேய் அத்தை பொண்ணு என்னடீ பண்ணுற?” என்றபடி அங்கு வந்த ஷக்தி மயங்கி கிடந்த மனைவியை பார்த்தான்.

“ ஏய்.. மிது.. என்னடீ ஆச்சு ?? மிது” என்று அவள் கன்னத்தை வேகமாய் தட்டினான். அவள் நெற்றியில் கை வைத்து காய்ச்சல் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியவன், உடனேயே தேன்நிலாவை அழைத்தான்.

“ ஹலோ”

“ ஷக்தி சொல்லுங்க .. சங்குக்கு பெயின் வந்துருச்சா?”

“ அதெல்லாம் இல்ல .. நீங்க உடனே வீட்டுக்கு வாங்க”

“ ஏன் என்னாச்சு ?” என்று நிலா பதட்டமாய் வினவவும், அவளுக்கு நிலைமையை விவரித்து கூறும் பொறுமையில் அவன் இல்லை.. “ சீக்கிரம் வாங்க” என்று சற்று அதட்டலான குரலில் கூறி ஃபோனை வைத்தான். முகில்மதி காலேஜிற்கு சென்றிருக்க பெரியவர்கள் அனைவரும் காவியாவுடன் கோவிலுக்கு சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லை என்று மீண்டும் மித்ராவை எழுப்பிட முயன்றான்.

“ மிது..மிதும்மா.. ஹேய் லூசு கண்ணை தொறயேண்டீ” என்று அவன் குரல் உயர்த்தியும் பயன் இல்லை. அவளை அப்படியே அலேக்காய் தூக்கி கொண்டு தங்கள் அறையில் படுக்க வைத்தான் ஷக்தி . அவளது நீண்ட கூந்தலை கொண்டையிட்டு, காற்று நுழையும்படி ஜன்னல்களை திறந்து விட்டு, அவளின் வலக்கரத்தை தனது கரங்களுக்குள் பொத்தி வைத்து அமர்ந்திருந்தான் ஷக்தி. அவனை அதிகம் சோதிக்காமல் நிலாவும் வந்து சேர்ந்தாள்.

“ ஷக்தி என்னாச்சு ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“தெரியல .. அவ நான் வரும்போதே மயங்கித்தான் இருந்தா”

“சரி சரி இருங்க நான் செக் பண்ணுறேன்..” என்றபடி மித்ராவை பரிசோதிக்க ஆரம்பித்தாள் தேன்நிலா.

“ முகத்துல தண்ணி தெளிச்சும் அவ கண் முழிக்கலையா ஷக்தி ?”

“ ஹான்.. ஆங் ??” புரியாதவன் போல அவளைப் பார்த்தான் ஷக்தி.

“ சுத்தம்.. நீங்க தமிழ் படமெல்லாம் பார்க்குறது இல்லையா ?”

“ ப்ச்ச்ச் விளையாடாதிங்க நிலா”

“ நீங்கதான் விளையாடுறிங்க இப்போ .. என்ன ஷக்தி இது ? பொதுவா யாரும் மயங்கி விழுந்தா முதல் வேலையாய் முகத்துல தண்ணி தெளிப்பாங்களே அது கூடவா மறந்துருச்சு” என்று பேசிக்கொண்டே மித்ராவின் முகத்தில் நீர் தெளித்தாள் நிலா. விழிகளை இமைகளுக்குள் மெல்ல சுழற்ற ஆரம்பித்தாள் சங்கமித்ரா.. அவளிடம் இருந்து அசைவு வரவும்தான் ஸ்வாசமே வந்தது அவனுக்கு. அவள் கண் திறப்பதற்குள் அவளுக்காக ஜூஸ் கொண்டு வர போனான் அவன்.

“ சங்கு.. ஹேய் சங்கு”

“ தேனு எப்போடீ வந்த ?”

“ நல்ல வேளையாய் ஏன் வந்தன்னு கேட்காம போனியே ! என்னடீ ஆச்சு உனக்கு ? நீயும் உன் மாமாவும் பண்ணுற அலும்பலுக்கு பேசாமல் நான் வேலையை விட்டுட்டு உங்க வீட்டுலேயே இருந்திடலாம் போல”

“எதுக்கு டீ இப்படி குதிக்கிற நீ? எனக்கென்ன ஆனிச்சு இப்போ?”

‘”அதை நான் கேட்கனும்.. நீ திடீர்ன்னு மயக்கம் போட்டுட்டன்னு ஷக்தி ஃபோன் பண்ணினார்” என்று நிலா கூறவும்,நடந்ததை  நினைவு கூர்ந்தாள் மித்ரா. மீண்டும் அவளுக்குள் தேவையில்லாத பயம் தலைத்தூக்க தொடங்கியது.

“ தேனு”

“ ம்ம் என்ன?”

“ மாமா எங்க ?”

“கிச்சன்ல இருக்கார்.. ஏன் டீ ஒருத்தி குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து கேள்வி கேட்குறேன் ..உனக்கு இப்பவே உன் ஆளை பார்க்கனுமா?”

“ ஷ்ஷ்ஷ்..நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு”

“ அடிங்க.. புருஷனும் பொண்டாட்டியும் எதிர்ல இருக்குறவங்களை பேசவே விடகூடாதுன்னு தீர்மானமாய் இருக்கீங்களா சங்கு ?”

“ என்னை பேச விடபோறியா இல்லையா நீ?”

“ சொல்லி தொலை”

“ எனக்கு .. எனக்கு எல்லாமே நார்மலா இருக்கா ?நான் நல்லா இருக்கேனா?”

“ ஆமா..அதுல என்ன டவுட்டு உனக்கு ?”

“ எதுக்கும் இன்னொரு தடவை ஸ்கேன்னிங் பண்ணுறியா ? எனக்காக ப்ளீஸ்!”

“ ஏதாச்சும் கெட்ட கனவு கண்டியா நீ ?”

“ என்…என் உயிருக்கு ஏதும் ஆபத்து வருமாடீ ? நான் செத்து போயிருவேனா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.